For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி அன்னைக்கு பட்டாசு வெடிப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

தீபாவளி அன்று ஏற்றிவைக்கும் விளக்குகள் வீடுகளை அலங்கரிப்பது மட்டுமல்ல, அது உங்கள் வாழ்க்கையுடன் ஆழமான தொடர்புடையதாகும்.

|

இந்தியாவே ஒரு வருடம் கொண்டாட காத்திருந்த தீபங்களின் விழாவான தீபாவளி மிக அருகில் நெருங்கி விட்டது. அனைவரும் தீபாவளியை வரவேற்க உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கிறோம், தீமைக்கு எதிரான தர்மத்தின் வெற்றியை கொண்டாடும் இந்த நாளில் மக்களின் அறியாமை நீங்கி வாழ்க்கையில் ஒளி பெருகும் நாளாக தீபாவளி இருக்கிறது.

Light The Lamp of Knowledge This Diwali

தீபாவளி அன்று ஏற்றிவைக்கும் விளக்குகள் வீடுகளை அலங்கரிப்பது மட்டுமல்ல, அது உங்கள் வாழ்க்கையுடன் ஆழமான தொடர்புடையதாகும். ஞானத்தின் வெளிச்சத்தின் மூலம் இருள் அகற்றப்படும் போது நமக்குள் இருக்கும் தீமையை நாம் வெல்லலாம் என்பதே தீபாவளி உணர்த்தும் கருத்தாகும். தீபாவளி பற்றிய சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீபாவளி

தீபாவளி

தீபாவளி உண்மையில் ஒவ்வொரு இதயத்திலும் ஞானத்தின் வெளிச்சத்திற்கும், ஒவ்வொரு வீட்டிலும் வாழ்க்கையின் வெளிச்சத்திற்கும், ஒவ்வொரு முகத்திலும் ஒரு புன்னகையும் கொண்டாடப்படுகிறது. தீபஒளி என்பதே காலபோக்கில் தீபாவளி என்று மருவியது. தீபஒளி என்பதற்கு விளக்குகளின் வரிசைகள் என்று அர்த்தம், வாழ்க்கைக்கு பல அம்சங்களும் நிலைகளும் உள்ளன. அவை அனைத்திலும் நாம் ஒளியை வீசுவது முக்கியம், ஏனென்றால் நம் வாழ்க்கையின் ஒரு பகுதி இருளில் உள்ளது, வாழக்கையை முழுமையாக ஒளியின் பாதையில் நம்மால் செலுத்த முடியாது. தீபாவளியில் ஏற்றும் விளக்குகளின் வரிசைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் நம் கவனம் தேவை என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

 தீபாவளி விளக்குகள்

தீபாவளி விளக்குகள்

தீபாவளி விளக்குகள் தரத்தின் அடையாளமாகும், நாம் ஏற்றும் ஒவ்வொரு விளக்கும் நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின்அடையாளமாகும். ஒவ்வொரு மனிதனிலும் பல நல்ல குணங்கள் உள்ளன. சிலருக்கு சகிப்புத்தன்மை, சிலருக்கு அன்பு, வலிமை, தாராள மனப்பான்மை இருக்கிறது, சிலருக்கு மக்களை ஒன்றிணைக்கும் திறன் உள்ளது. இந்த குணங்கள் அனைத்தும் விழித்துக்கொள்ளும் நாள்தான் தீபாவளி ஆகும். ஒரு விளக்கை மட்டும் ஏற்றி திருப்தி அடைந்து விடாதீர்கள், உங்களிடம் இருக்கும் நல்ல குணத்திற்கு நீங்கள் மதிப்பு அளித்தால் ஒரு விளக்கில் மட்டும் திருப்தி அடைய வேண்டாம். உங்களுக்குள் ஞானத்தின் விளக்கை ஏற்றி அறிவைப் பெறுங்கள். உங்கள் இருப்பின் அனைத்து அம்சங்களையும் எழுப்புங்கள்.

பட்டாசு வெடிப்பது

பட்டாசு வெடிப்பது

தீபாவளியின் மற்றொரு முக்கிய அடையாளம் பட்டாசு வெடிப்பது ஆகும். வாழ்க்கையில், நீங்கள் அடிக்கடி ஒரு பட்டாசு போல் ஆகிவிடுவீர்கள், உங்கள் உணர்ச்சிகள், விரக்தி மற்றும் கோபத்துடன் வெடிக்க காத்திருக்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் அடக்கிக்கொண்டே இருக்கும்போது, பசி மற்றும் வெறுப்புகள் அவை வெடிக்கும் நிலையை எதிர்பார்த்து காத்திருக்கும். பட்டாசுகளை வெடிப்பது ஒரு உணர்ச்சிபூர்வமான பயிற்சியாகும். வெளியே ஒரு வெடிப்பை நீங்கள் காணும்போது, உங்களுக்குள் இதே போன்ற உணர்வுகளை உணர்கிறீர்கள்.

MOST READ:வருஷா வருஷம் தீபாவளி கொண்டாடுறீங்களே... தீபாவளியை பத்தி இந்த விஷயமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

தீபாவளியின் அர்த்தம்

தீபாவளியின் அர்த்தம்

தீபாவளி என்பது நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் ஆகும். கடந்த காலத்தின் வருத்தத்தையும், எதிர்காலத்தின் கவலைகளையும் கைவிட்டு, இந்த தருணத்தில் மட்டும் வாழ வேண்டும். இனிப்புகள் மற்றும் பரிசுப் பரிமாற்றம் ஆகியவை கடந்த காலத்தின் சச்சரவு மற்றும் எதிர்மறைகளை மறந்துவிடுவதையும், வரவிருக்கும் காலங்களில் நட்பைப் புதுப்பிப்பதையும் குறிக்கிறது. ஒரு உண்மையான கொண்டாட்டம் என்பது அனைத்து வேறுபாடுகளையும் களைவதாகும். மகிழ்ச்சியும் ஞானமும் சமுதாயத்தில் பரவ வேண்டும், அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும்போது மட்டுமே அது நிகழும்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

எந்தவொரு கொண்டாட்டமும் ஆன்மாவின் அர்ப்பணிப்பு இல்லாமல் முழுமையடையாது. தெய்வீகத்திலிருந்து நாம் எதைப் பெற்றாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அது நாம் பெறுவதைக் கொடுப்பதே உண்மையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். அது உண்மையான கொண்டாட்டம்.

ஞானிகளின் தீபாவளி

ஞானிகளின் தீபாவளி

தீபாவளி என்பது ஒரு புதிய தொடக்கத்தின் ஞானத்தை நீங்கள் வெளிச்சம் போடும் காலம் ஆகும். உண்மையான ஞானம் தோன்றும்போது, அது கொண்டாட்டத்திற்கு வழிவகுக்கிறது. சாதாரண மக்களுக்கு தீபாவளி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வருகிறது, ஆனால் ஞானிகளுக்கு, தீபாவளி என்பது ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நாளும் ஆகும்.

MOST READ:கடக ராசிக்காரங்ககிட்ட இருக்குற மிகப்பெரிய பிரச்சினை என்ன தெரியுமா?

தீபாவளிக்கான சபதம்

தீபாவளிக்கான சபதம்

இந்த தீபாவளியை அறிவோடு கொண்டாடுங்கள், மனிதகுலத்திற்கு சேவை செய்ய உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் அன்பின் விளக்கை ஏற்றி வைக்கவும், உங்கள் வீட்டில் ஏராளமான விளக்கு ஏற்றி வையுங்கள். மற்றவர்களுக்கு சேவை செய்ய இரக்கத்தின் விளக்கு, அறியாமையின் இருளை அகற்ற அறிவின் விளக்கு மற்றும் தெய்வம் அளித்துள்ள பரிசுகளுக்கு நன்றி கூறும் விதமாக விளக்கேற்றி வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Light The Lamp of Knowledge This Diwali

Lamps are lit on Diwali day not just to decorate homes, but also to communicate a profound truth about life.
Story first published: Friday, October 25, 2019, 11:33 [IST]
Desktop Bottom Promotion