Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
விருச்சிகத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் புதன் சேரும் போது, அந்த ராசியில் சுப யோகமான லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டிருக்கும். இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் அழகு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படும் சுக்கிரன் 2022 நவம்பர் 11 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து, வியாபாரம் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணி கிரககமாக கருதப்படும் புதன் 2022 நவம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

இப்படி விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் புதன் சேரும் போது, அந்த ராசியில் சுப யோகமான லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும். சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். இப்போது விருச்சிக ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் நல்ல லாபத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்
லட்சுமி நாராயண யோகம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த யோகமானது மகர ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் அதிகரிப்பைக் காணலாம். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. பங்குச்சந்தையில் நல்ல பணம் சம்பாதிக்க முடியும். பழைய அல்லது புதிய ஒப்பந்தங்களில் இருந்து லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதோடு உங்களின் ஆசைகள் அனைத்தும் இக்காலத்தில் நிறைவேறும்.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இது பணியிடம் மற்றும் வேலை ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த யோக காலத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வாகனம் அல்லது வேறு ஏதேனும் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மேலும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் செழிப்போடு இருக்கும். இக்காலத்தில் உங்கள் பணியிடத்தில் சில புதிய பொறுப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. அதாவது பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது.

துலாம்
லட்சுமி நாராயண யோகத்தினால் துலாம் ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறுவார்கள். ஏனெனில் இந்த யோகமானது துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் உருவாகிறது. இது பணம் மற்றும் பேச்சின் வீடாகும். எனவே இக்காலத்தில் திடீர் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். வணிகத்தில் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். வருமான ஆதாரங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்படும். இருப்பினும், இக்காலத்தில் கடன் வாங்க வாய்ப்புள்ளது அல்லது உங்களின் பணம் சிக்க வாய்ப்புள்ளதால், நிதி விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
