Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க ராசியை சொல்லுங்க.. நீங்க எந்த நோயால் அவஸ்தைப்படுவீங்கன்னு சொல்றோம்...
ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறந்த நேரத்தைப் பொறுத்து ராசிகள் வேறுபடும். ராசியைக் கொண்டு பல விஷயங்களை அறியலாம். அது ஒருவரது எதிர்காலம் ஆகட்டும், வேலை ஆகட்டும், திருமண வாழ்க்கை ஆகட்டும், ஏன் ஆரோக்கியத்தைக் கூட அறியலாம். இன்று ஏராளமான நோய்கள் நம்மைச் சுற்றி உள்ளன. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கிறோம். இதற்கு நமது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் முதன்மையான காரணங்களாக உள்ளன.
ஆனால் ஒருவருக்கு வரக்கூடிய நோய்கள் மற்றும் ஒருவர் எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார் என்பதை ராசியைக் கொண்டு அறியலாம்.
அந்த வகையில் இந்த கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படுவார் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் ராசிப்படி எந்த மாதிரியான நோயால் நீங்கள் அதிகம் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை அறிந்து, நோய் தீவிரமாகாமல் இருக்க உங்களை முன்கூட்டியே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொறுமைசாலியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் தலை மற்றும் மூளை நோய்களால் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தலைவலி, பல் வலி, முகத்தில் கறைகள் மற்றும் தாடை பிரச்சனைகள் போன்றவற்றால் கஷ்டப்படுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு குளிர்காலத்தில் எளிதில் சளி பிடித்துக் கொள்ளும். தொண்டையில் தொற்றுகள், தைராய்டு பிரச்சனைகள், டான்சில்லிடிஸ், கடினமான கழுத்து மற்றும் காதுகளில் தொற்று போன்றவை இந்த ராசிக்காரர்களுக்கு பொதுவானவை.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள், நுரையீரல் மற்றும் பேச்சு பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்பட வாய்ப்புள்ளது. இந்த வகை ராசிக்காரர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்றவை அடிக்கடி வந்து அவஸ்தைப்படச் செய்யும்.

கடகம்
உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் அதிகமாக உள்ளதா? அப்படியானால் உங்கள் ராசி கடகமாகத் தான் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெளிப்படையானவர்கள் அல்ல. எனவே இவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகப்படியான அமில சுரப்பு நோய்கள் மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரப்பூர்வமான மற்றும் சக்தி வாய்ந்த நபர்களாக இருந்தாலும், இவர்கள் இதயம் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலும் சிம்ம ராசிக்காரர்கள் முதுகு வலியால் அதிகம் கஷ்டப்படுவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் வயிறு மற்றும் குடல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மெட்டபாலிசம் மெதுவாக இருக்கும் என்பதால், இது உடல் பருமன் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அல்சர், உணவு அலர்ஜி மற்றும் மலச்சிக்கல் போன்றவை கன்னி ராசிக்காரர்களைத் தாக்கும். இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளாமல் இருந்தால், இப்பிரச்சனைகள் தீவிரமாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அதிகம் கஷ்டப்படுவது செரிமான பிரச்சனையால் தான். அதுமட்டுமின்றி, இந்த ராசிக்காரர்கள் இனப்பெருக்க பிரச்சனையாலும் பாதிக்கப்படுகின்றனர்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அந்தரங்க உறுப்பு மற்றும் ஹார்மோன் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, இவர்கள் சிறுநீர்ப்பை தொற்று, ஒழுங்கற்ற மற்றும் வலிமிக்க மாதவிடாய் சுழற்சியாலும் பாதிக்கப்படுவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள், கல்லீரல், கண், இடுப்பு மற்றும் தொடை பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். மேலும் இவர்கள் முறையற்ற கல்லீரல் செயல்பாடு மற்றும் எடை தொடர்பான பிரச்சனைகளாலும் அவஸ்தைப்படுவார்கள்.

மகரம்
நீங்கள் மகர ராசிக்காரர்களா? அப்படியானால் நீங்கள் எலும்பு தொடர்பான பிரச்சனைகளால் ம2றும் பலவனமான மூட்டுக்களால் கஷ்டப்படுவார்கள். மேலும் இந்த இராசிக்காரர்கள் எலும்பு மற்றும் நகப் பிரச்சனையாலம் பாதிக்கப்படுவர்.

கும்பம்
நீங்கள் கும்ப ராசிக்காரராக இருந்தால், உங்களின் இயக்கத்தில் தான் பிரச்சனையை அதிகம் சந்திப்பீர்கள். ஆர்த்ரிடிஸ் பிரச்சனை மற்றும் முறையற்ற இயக்கங்கள் போன்றற்றால் தான் நீங்கள் அடிக்கடி கஷ்டப்படுவீர்கள். எனவே கவனமாக இருங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் நரம்பு மண்டல பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்களின் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியால் மற்ற ஆரோக்கிய பிரச்சனையால் எளிதில் பாதிக்கப்படுவர்.