Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
12 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் குரு-சுக்கிர சேர்க்கை: மார்ச் 11 வரை இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இதனால் 12 ஆண்டுக்கு பின் மீன ராசியில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது.
Jupiter Venus Conjunction In Pisces After 12 Years: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகளும் நிகழும். அப்படி கிரகங்கள் இணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் குரு பகவான் தனது சொந்த ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். அதேப் போல் ஆரம்பரம், செழிப்பு, காதல், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இதனால் 12 ஆண்டுக்கு பின் மீன ராசியில் குரு-சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்த இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெறுவார்கள். இப்போது மீனத்தில் குரு சுக்கிர சேர்க்கையால் நற்பலனைப் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை காலமானது நற்பலனை வாரி வழங்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மகிழ்ச்சி மற்றும் பொருள் வசதிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டு தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த குரு சுக்கிர சேர்க்கை காலத்தில் நல்ல ஜாக்பாட் அடிக்கப் போகிறது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இதனால் வீட்டின் வருமானம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை இக்காலத்தில் பெறுவீர்கள். வணிகர்கள் இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலமானது சாதகமானதாக இருக்கும். வேலை செய்பவர்கள் இக்காலத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும் மற்றும் வியாபாரத்தை விரிவுப்படுத்த எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமாக இதுவரை தந்தையுடன் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் உங்கள் தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
