Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
கும்பத்தில் குரு-சூரிய சேர்க்கையால் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
கும்ப ராசியில் குருவும், சூரியனும் இணைந்திருப்பதால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் 2022 பிப்ரவரி 13 ஆம் தேதி சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். இந்த ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். குருவும், சூரியனும் நட்பு கிரகங்கள். எனவே இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மங்களகரமானதாக இருக்கும். தற்போது கும்பத்தில் இந்த இரண்டு கிரகங்களும் இணைந்திருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் இனிமையானதாக இருக்கும். அனைத்திலும் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

இது தவிர, வேறு சில ராசிக்காரர்களுக்கும் இந்த குரு-சூரிய சேர்க்கை நற்பலன்களைத் தரும். இப்போது கும்ப ராசியில் குருவும், சூரியனும் இணைந்திருப்பதால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் குரு-சூரிய சேர்க்கை காலத்தில் லாபம் அடைய வாய்ப்புள்ளது. உங்கள் புகழ் எங்கும் உயரும். பழைய கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்கு இது நல்ல காலம். இக்காலத்தில் பணத்தை அதிகம் சேமிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். முதலீடு செய்வதற்கு இது சிறந்த காலம். போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்கள் கௌரவம் உயரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் உங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு-சூரிய சேர்க்கை நல்ல பலனைத் தரும். எதிரிகளை வெற்றி பெறுவார்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டம் பெரிதும் ஆதரிக்கும். பணியிடத்தில் உங்கள் பெயர் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். கடந்த காலத்தில் எடுத்த முயற்சிகள் இக்காலத்தில் நற்பலன்களைத் தரும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வருமான உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இக்காலத்தில் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலை விரிவாக்க நினைத்திருந்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஒவ்வொரு வேலையிலும் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக உங்கள் செல்வமும் சொத்தும் இக்காலத்தில் பெருகும்.



Click it and Unblock the Notifications
