For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் இந்த சிறிய வாஸ்து தவறுகள் உங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை கெடுக்குமாம் தெரியுமா?

வாஸ்து உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் இது உங்கள் குடும்பத்தில் அமைதியையும் கொண்டு வரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

|

இந்தியாவில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என்று ஒரு தனிமுக்கியத்துவம் உள்ளது. நம் நாட்டில் வீடு கட்டுவதற்கு முன் நம் மக்கள் பார்க்கும் முதல் விஷயம் வாஸ்து சாஸ்திரத்தைத்தான். ஏனெனில் வாஸ்துவின் படி ஒரு வீட்டைக் கட்டும்போது அந்த வீட்டில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்றும் அந்த வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும் என்று நம்பப்படுகிறது.

Invest In Vastu For a Happy Family

வாஸ்து உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் இது உங்கள் குடும்பத்தில் அமைதியையும் கொண்டு வரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறிப்பு 1

குறிப்பு 1

உங்கள் வீட்டின் ஆற்றலை நேர்மறையாக வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா அழுக்குகளையும் நீக்கி, வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கால்களைக் கழுவி, வீட்டில் எப்போதும்விளக்குகள் எரிவதை உறுதிசெய்துகொள்ளவும்.

குறிப்பு 2

குறிப்பு 2

படுக்கைகள், ஜன்னல்கள் மற்றும் சமையலறை அலமாரிகளில் நிறைய கூர்மையான விளிம்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஆபத்தானது மட்டுமல்ல, மோசமான வாஸ்துவையும் ஈர்க்கிறது. இது உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரவச்செய்யும்.

குறிப்பு 3

குறிப்பு 3

உங்கள் படுக்கையறை நன்கு பராமரிக்கப்பட்டு மென்மையான வண்ணங்களில் வண்ணம் தீட்டப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். படுக்கைக்கு முன்னால் கண்ணாடியை வைப்பது கெட்ட கனவுகளை அழைக்கக்கூடும், எனவே அதனைத் தவிர்க்கவும்.

MOST READ:ஆண்கள் அவங்க ராசிப்படி தன்னோட காதலிக்கிட்ட உண்மையா எதிர்பார்க்கறது என்னனு தெரியுமா?

குறிப்பு 4

குறிப்பு 4

குப்பைத் தொட்டியை வீட்டினுள் வைத்திருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் மற்றும் கற்றாழை மற்றும் புதர் போன்ற முள் செடிகள் எதிர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கின்றன. இவை அனைத்தும் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும்.

குறிப்பு 5

குறிப்பு 5

குளியலறை வீட்டின் கிழக்கு மூலையில் இருக்க வேண்டும். இது ஒரு படிக்கட்டுக்கு அடியில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இது நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பது உங்களின் பணக்கஷ்டத்திற்கு வழிவகுக்கும்.

குறிப்பு 6

குறிப்பு 6

வீட்டின் முக்கியமான ஒரு இடமென்றால் அது சமையலறைதான். இங்குதான் அதிக வாஸ்து தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமையலறை எப்போதும் வீட்டின் தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும் மற்றும் கழிப்பறைக்கு அருகில் இருக்கக்கூடாது. இது மோசமான வாஸ்து ஆகும்.

குறிப்பு 7

குறிப்பு 7

உங்கள் வீட்டில் கண்ணாடிகளை எப்போதும் பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியமாகும். பயன்பாட்டில் இல்லாதபோது எந்த கண்ணாடியையும் திறந்திருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது. அனைத்து கண்ணாடியையும் மூடி வையுங்கள்.

MOST READ:இந்த மழைக்காலத்துல நோய் இல்லாம இருக்கணுமா? இத பண்ணுங்க போதும்...!

குறிப்பு 8

குறிப்பு 8

உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களின் தேர்வில் எப்பொழுதும் கவனம் அவசியம். ஒழுங்கான வடிவத்தில் பர்னிச்சர்களை வாங்கி வைக்க வேண்டும். ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும் பர்னிச்சர்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

குறிப்பு 9

குறிப்பு 9

நீங்கள் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் கருவிகளை ஒருபோதும் படுக்கை அறைக்குள் எடுத்து செல்லாதீர்கள். அதற்கென ஒரு டேபிள் வாங்கி அதில் அனைத்தையும் வைத்துவிடவும். தூங்கும்போது உங்கள் அருகில் எலக்ட்ரானிக் கருவிகள் இருப்பது வாஸ்துவிற்கும் நல்லதல்ல, உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல.

குறிப்பு 10

குறிப்பு 10

நீங்கள் தூங்கும் நிலை என்பது வாஸ்துவில் மிகவும் முக்கியமானதாகும். தூங்கும்போது உங்கள் தலை தெற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். பிரகாசமான ஒளியின் கீழ் எப்போதும் தூங்க வேண்டாம்.

குறிப்பு 11

குறிப்பு 11

சில செடிகள் உங்கள் வீட்டிற்க்குள் நல்ல வாஸ்துவை கொண்டுவரும். எனவே சிலவே வாஸ்து செடிகளை வீட்டிற்குள் வைத்து வளர்க்கவும். முட்கள் இருக்கும் செடிகள் மற்றும் மூங்கில் செடிகளை வீட்டிற்குள் வைப்பதை தவிர்க்கவும்.

MOST READ:கடக ராசிக்காரங்ககிட்ட இருக்குற மிகப்பெரிய பிரச்சினை என்ன தெரியுமா?

குறிப்பு 12

குறிப்பு 12

உங்கள் வீட்டின் வாசலில் வைக்கும் பெயர்ப்பலகை மிகசிறந்த வாஸ்துவாகும். உங்கள் பெயருடன் உங்கள் மனைவியின் பெயரையும் பலகையில் இடுவது நல்ல பலன்களை வழங்கும். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்க வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Invest In Vastu For a Happy Family

Vastu Shastra does much more than keeping the energy of the house positive. It can also in bringing you and your family together.
Story first published: Monday, October 28, 2019, 17:38 [IST]
Desktop Bottom Promotion