For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணற்ற விலங்குகள் இருக்கையில் இந்தியாவின் தேசிய விலங்காக புலி இருக்க காரணம் என்ன தெரியுமா?

புலிகளை பாதுகாக்கவும், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

|

புலிகள் என்றாலே நாம் அனைவரும் பயப்படுவோம். ஏனெனில், அதன் தோற்றமும், கர்ஜனையும் நம்மை நடுங்கவைக்கும். அடர்ந்த வனப்பகுதியில் அமைதியாக வாழும் சுபாவம் கொண்டவை புலிகள். ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல் ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது அதிசயம். புலிகளைப் பொறுத்தவரை பசித்தால் மட்டும் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை. புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாகும். பொதுவாக வனப்பகுதிக்குள் வசிக்கும் புலிகள் ஒவ்வொன்றும் தனக்குத்தானே எல்லைகள் அமைத்து வாழும் பழக்கம் கொண்டவை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ஆம் தேதி உலக புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

International Tiger Day: Know Total Tiger count in India and World in tamil

வங்காளப் புலி (பெங்கால் டைகர்) இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை வெகுவேகமாக குறையத் தொடங்கியது. இதனால், புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில், புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாகவும், உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கட்டுரையில் புலிகள் பற்றியும் இந்தியாவில் அதன் எண்ணிக்கை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புலிகள் தினம்

புலிகள் தினம்

2010-ஆம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் புலிகள் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற மாநாட்டில் புலிகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை உயர்த்தவும் சர்வதேச நாடுகள் முடிவுசெய்தன. அதனைதொடர்ந்து, புலிகளை பாதுகாக்கவும், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புலிகள் தின கருப்பொருளாக கடைபிடிக்கப்படுவது "அவை வாழ்வது நமது கையில்" .

தேசிய விலங்கு

தேசிய விலங்கு

புலிகளை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காகக்தான் 1973ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதியில் புலியை தேசிய விலங்காக ஒன்றிய அரசு அறிவித்தது. அழகும், கம்பீரமும் அதன் உறுமலும்தான் புலிக்கு இந்திய தேசிய விலங்கு என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை

2006-ஆம் ஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியக் காடுகளில் 1,411 புலிகள் உள்ளதாகவும், 2010-ம் ஆண்டில் 1,706 புலிகள் உள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களின் பட்டியல்

மாநிலங்களின் பட்டியல்

அதிக புலிகள் வாழும் மாநிலங்களின் பட்டியலில் மத்தியப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. மத்தியப் பிரதேச காடுகளில் மட்டும் 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இரண்டாவது மாநிலமான கர்நாடகாவில் 524 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மூன்றாவது இடமான உத்தராகண்ட் மாநிலத்தில் 442 புலிகளும், நான்காவது இடமான மகாராஷ்டிரா மாநிலத்தில் 312 புலிகளும் வசிக்கின்றன. இந்தப் பட்டியிலில் தமிழகத்துக்கு 5 ஆம் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 264 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மூன்றில் ஒரு பங்கு

மூன்றில் ஒரு பங்கு

இந்தியாவில் 2014-ம் ஆண்டில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 2,967 ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் உள்ளன. 2006 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை , 2010-ல் 163 ஆகவும், 2014-ல் 229 ஆகவும் உயர்ந்தது. தற்போது தமிழகத்தில் 264 ஆக புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதிகரித்து வரும் புலிகள் எண்ணிக்கை

அதிகரித்து வரும் புலிகள் எண்ணிக்கை

கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகம் அடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் 981 புலிகள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தொடர்ந்து புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியான விஷயம் என சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனில், வனத்தின் சூழல் தன்மையைப் பாதுகாக்கும் விலங்கினங்களில் முக்கியப் பங்கு புலிகளுக்கு உண்டு.

புலிகள் காப்பகம்

புலிகள் காப்பகம்

இந்தியாவில் மொத்தம் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

International Tiger Day: Know Total Tiger count in India and World in tamil

Here we are talking about the International Tiger Day: Know Total Tiger count in India and World in tamil.
Story first published: Thursday, July 29, 2021, 14:06 [IST]
Desktop Bottom Promotion