67 வயதில் காலமானார் ரிஷி கபூர்: இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

ரிஷி கபூர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவஸ்தைப்பட்டு வந்தார். திடீரென்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 30 அன்று காலையில் காலமானார்.

பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான ரிஷி கபூர் இன்று காலை காலமானார். நேற்று தான் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் கலக்கி வந்த இர்ஃபான் பான் பெருங்குடல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் ஐ.சி.யு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து, காலையில் காலமானார். இந்நிலையில் இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த ரிஷி கபூர் காலமானது, பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Interesting Facts About Rishi Kapoor

நடிகர் ரிஷி கபூர் குழந்தை நட்சத்திரமாக நடித்து 1970-திலேயே தேசிய விருதைப் பெற்றவர். இவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவஸ்தைப்பட்டு வந்தார். திடீரென்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஏப்ரல் 30 காலை ரிஷி கபூர் காலமானார்.

இப்போது இவரை நினைவுகூறும் வகையில், இவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு

பிறப்பு

புகழ்பெற்ற இந்தி நடிகரான ரிஷி கபூர் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி பிறந்தார். இவர் பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான ராஜ் கபூரின் இரண்டாவது மகனாவார். இவருக்கு ரந்தீர் மற்றும் ராஜீவ் கபூர் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்களும் நடிகர்களாவர். நடிகர் ரிஷி எப்போதும் மிகவும் சுட்டித்தனமாக நடந்து கொள்வாராம்.

முதல் திரை தோற்றம்

முதல் திரை தோற்றம்

நடிகர் ரிஷி கபூரின் முதல் திரை தோற்றம் என்றால், அது ஸ்ரீ 420 படத்தில் உள்ள 'பியார் ஹுவா' என்னும் பாடலாகும். அதன் பின் இவர் 'மேரா நாம் ஜோக்கர்' திரைப்படத்தில் அவரது தந்தையின் இளம் தோற்றத்தில் முதல்முறையாக நடிக்க ஆரம்பித்தார். இவர் கதாநாயகனாக 'பாபி' திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது நடிப்பைப் பார்க்கும் போதே, அவரது மரபணுக்களில் நடிப்புத் திறன் இருப்பது நன்கு புலப்பட்டது.

முதல் வதந்தி

முதல் வதந்தி

முதல் படத்தில் நடிகை டிம்பிள் கபாடியாவுடன் நடித்ததாலோ என்னவோ, அவருடன் டேட்டிங்கில் இருப்பதாக ஓர் வதந்தி பரவியது.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

ரிஷி கபூர் எப்போதும் கடின உழைப்பாளி மற்றும் மிகவும் அர்பணிப்புள்ள நடிகராக இருந்தார். 1970, 80-களில் இவர் மிகவும் ரொமான்டிக் ஹீரோவாக இருந்தார். இவரை சாக்லேட் பாய் என்று கூட சொல்லலாம். இவரது சகஜமாக பேசிப் பழகும் தன்மை, அவரை பல வதந்திகளில் சிக்க வைத்தது. ஆனால், அவர் அதை சற்றும் பொருட்படுத்தாமல் இருந்தார்.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

நடிகர் ரிஷி கபூர் நடிகை நீத்து சிங்கை 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சில காலம் டேட்டிங்கில் இருந்த பின்னரே, திருமணம் செய்து கொண்டனராம். மேலும் நீத்துவுடன் மட்டுமே டேட்டிங் செய்ய விரும்புவதாக ரிஷி கூறியிருந்தார். நீத்து இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற விஷயம் 'பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது உணர்ந்ததாகவும் கூறினார்.

குழந்தைகள்

குழந்தைகள்

ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங்கிற்கு ரன்பீர் கபூர் என்ற மகனும், ரித்திமா கபூர் என்ற மகளும் உள்ளனர். இதில் ரன்பீர் கபூர் தற்போது மிகவும் பிரபலமான நடிகராவார்.

திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள்

திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள்

என்ன தான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், ரிஷி கபூர் மற்றும் நீத்து கபூர் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்தனர். நீத்து திருமண வாழ்வில் இருந்து கூட ஒருமுறை வெளியேறிவிட்டார். ஆனால் அவர்களுக்கு இடையேயான உறவு எல்லா பிரச்சனைகளையும் தாங்கி கொண்டு, அவரது இறுதி காலம் வரை வலுவாக வைத்திருந்தது.

இயக்குநர்

இயக்குநர்

ரிஷி கபூருக்கு திரைப்படத்தை இயக்குவதிலும் ஆர்வம் இருந்தது. ஆகவே இயக்குநராகவும் ஆனார். இவர் 1999 ஆம் ஆண்டு ஆ அப் லௌட் சலேன் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

பிரிட்டிஷ் படங்கள்

பிரிட்டிஷ் படங்கள்

ரிஷி கபூர் பிரிட்டிஷ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவை 2007 ஆம் ஆண்டு வெளியான டோன்ட் ஸ்டாப் ட்ரீமிங் மற்றும் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சாம்பார் சல்சா போன்றவைகளாகும்.

புனைப்பெயர்

புனைப்பெயர்

நடிகர் ரிஷி கபூருக்கு மேஸ் என்ற நைஜீரிய புனைப்பெயரும் உள்ளது. இந்த பெயருக்கு 'பெண்' என அர்த்தம் ஆகும்.

பாலிவுட் இதுவரை கண்டிராத சிறந்த நடிகர்களுள் ரிஷி கபூரும் ஒருவராவார். இத்தகையவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தது, பலருக்கும் மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion