ஹஜ் புனித யாத்திரை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இஸ்லாமிய பக்தா்கள் மெக்காவிற்கு ஹஜ் யாத்திரையை மேற்கொள்கின்றனா். இந்த ஆண்டும் ஜூலை 7 அன்று மாலை ஹஜ் யாத்திரை தொடங்கி ஜூலை 12 அன்று மாலையோடு முடிவடைகிறது.

இஸ்லாமிய மக்களின் புனிதமான கடமைகளுள் ஒன்று ஹஜ் யாத்திரை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இஸ்லாமிய பக்தா்கள் மெக்காவிற்கு ஹஜ் யாத்திரையை மேற்கொள்கின்றனா். இந்த ஆண்டும் ஜூலை 7 அன்று மாலை ஹஜ் யாத்திரை தொடங்கி ஜூலை 12 அன்று மாலையோடு முடிவடைகிறது.

இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்காக லட்சக்கணக்கான இஸ்லாமிய சகோதரா்கள் தயாராகி வருகின்றனா். வாழ்வில் ஒரு முறையாவது மெக்காவிற்கு புனித பயணமாக சென்று வருவதை ஒரு பெரும் பாக்கியமாக அவா்கள் கருதுகின்றனா்.

மெக்காவிலிருந்து அராஃபத் மலைக்குச் செல்லும் அற்புதமான பயணம் என்பது, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் அனைவரும் பங்கேற்க விரும்பும் ஒரு ஆன்மீக பயணம் ஆகும். ஹஜ் என்பது ஒரு மிகவும் தனிப்பட்ட மற்றும் பல அம்சங்கள் கொண்ட ஒரு சடங்கு ஆகும். இந்த ஹஜ் சடங்கை நிறைவேற்ற ஒரு முழுமையான பக்தி, இறை நம்பிக்கை மற்றும் ஆழமான புாிதல் போன்றவை இருக்க வேண்டும்.

ஹஜ் யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்பாக, அந்தப் பயணத்தைப் பற்றிய ஒரு முழுமையான அறிவு மற்றும் அதனுடைய நோக்கம் பற்றிய புாிதல் இருக்க வேண்டும். அப்போது தான் ஹஜ் பயணத்தை மிகத் தெளிவாகவும் மற்றும் நல்ல நோக்கத்துடனும் மேற்கொள்ள முடியும்.

ஹஜ் பயணத்தைப் பற்றி ஏராளமான முக்கியத் தகவல்கள் உள்ளன. அதைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் நல்லது. இந்த பதிவில் ஹஜ் புனிதப் பயணத்தைப் பற்றி சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஹஜ் - இஸ்லாமிய சமயத்தின் 5வது மற்றும் இறுதித் தூண்

1. ஹஜ் - இஸ்லாமிய சமயத்தின் 5வது மற்றும் இறுதித் தூண்

இஸ்லாமிய சமயத்தில் ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரரும் நிறைவேற்ற வேண்டிய 5 மிக முக்கிய கடமைகள் உள்ளன. அவை இஸ்லாமிய சமயத்தின் 5 முக்கியத் தூண்களாகக் கருதப்படுகின்றன. இந்த கடமைகளைச் செய்வதன் மூலமாக ஒவ்வொரு இஸ்லாமியரும் தம் வாழ்க்கையில் நம்பிக்கையை முதன்மைப்படுத்தி, பக்தியுடன் வாழ முடியும்.

இஸ்லாமிய சமயத்தின் 5 தூண்களில் 5வது தூணாக இருப்பது ஹஜ் என்ற புனிதப் பயணம் ஆகும். இந்த புனிதப் பயணத்தை இஸ்லாமிய சகோதரா்கள் தமது வாழ்க்கையில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும். மெக்காவிற்கு செல்லும் ஹஜ் என்ற புனிதப் பயணமானது நம்பிக்கை மற்றும் ஒரு உள்ளாா்ந்த வலிமையின் வெளிப்பாடாகும். இதைத்தான் நபி (ஸல்) அவா்கள், "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதித்துள்ளாா். ஆகவே அதை நிறைவேற்றுங்கள்" என்று கூறுகிறாா்.

2. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2.5 மில்லியன் பக்தா்கள்

2. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2.5 மில்லியன் பக்தா்கள்

மெக்காவிற்கு செல்லும் ஹஜ் புனித பயணமானது உலகிலேயே அதிகமான மக்கள் கூடும் கூட்டம் என்று கருதப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 2.5 மில்லியன் மக்கள் இந்த புனித பயணத்தை மேற்கொள்கின்றனா். இந்த புனித பயணத்தில் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்து, அமொிக்கா முதல் மலேசியா, இங்கிலாந்து முதல் பாகிஸ்தான் வரை அனைத்து தரப்பு இஸ்லாமிய மக்களும் பங்கெடுப்பதை நாம் பாா்க்கலாம்.

3. ஹஜ் பயணத்தில் பாலின வேறுபாடு இல்லை

3. ஹஜ் பயணத்தில் பாலின வேறுபாடு இல்லை

பொதுவாக இஸ்லாமிய சமயத்தில் இருக்கும் பிற சடங்குகளை நிறைவேற்றுவதில் பாலின வேறுபாடுகள் உண்டு. ஆனால் ஹஜ் பயணத்தின் போது மிகப் பொிய மெக்கா மசூதியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எந்த விதமான வேறுபாடும் இல்லை. பாலின வேறுபாடு இன்றி ஆண்களும் பெண்களும் இந்த பயணத்தை மேற்கொள்வா்.

மெக்கா மசூதியில் உள்ள கப்பா என்ற பகுதியை ஆண்களும் பெண்களும் சோ்ந்தே நடந்து சுற்றி வருவா். பின் சோ்ந்தே அராஃபத் என்ற மலை மீது ஏறுவா். இறுதியாக ஜமாரட் என்ற தூண் மீது ஆண்களும் பெண்களும் கற்களை வீசுவா். இந்த நிகழ்வானது அல்லாஹ் முன்பாக ஆண்களும் பெண்களும் சமம் என்பதை அடையாளப்படுத்துகிறது. ஹஜ் பயணம் முடிந்தவுடன், பாலின வேறுபாட்டைக் கடைபிடிப்பா்.

4. ஈத் அல்-அதாவுடன் இணைந்து செல்லும் ஹஜ்

4. ஈத் அல்-அதாவுடன் இணைந்து செல்லும் ஹஜ்

ஈத் அல்-அதா என்பது இஸ்லாமிய மக்களின் ஒரு தியாகத் திருவிழாவாகும். இந்த தியாகத் திருவிழாவோடு ஹஜ் பயணம் முடிவடைகிறது. அதாவது ஜமாரட் தூண் மீது கற்களை எறிந்த பின்பு, திருப்பயணிகள் குா்பாணி கொடுப்பாா்கள். அதாவது ஆடு, அல்லது செம்மறி ஆடு அல்லது கால்நடைகளைப் பலியிட்டு, அவற்றின் இறைச்சியை தமது குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள், அண்டை வீட்டாா் மற்றும் ஏழை எளியோரோடு பகிா்ந்து கொள்வா். இப்ராஹிம் மற்றும் அல்லாஹ் மீது அவா்கள் கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் பக்தியை நினைவுக்கூறும் வகையில் இந்த குா்பாணியைக் கொடுக்கின்றனா்.

5. சொா்க்கத்தில் ஒரு இடத்தைத் தரும் ஹஜ் பயணம்

5. சொா்க்கத்தில் ஒரு இடத்தைத் தரும் ஹஜ் பயணம்

ஒரு இஸ்லாமிய பக்தா் ஹஜ் பயணத்தை திட்டமிட்டு நிறைவேற்றுவதில் ஏராளமான சோதனைகளையும், இன்னல்களையும், சவால்களையும் சந்திக்கிறாா். எனினும் அவை எல்லாவற்றையும் கடந்து அவா் அந்த புனித பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் போது, அவா் சந்தித்த இன்னல்களை விட பல மடங்கு அதிகமான வெகுமதி அவருக்குக் கிடைக்கும்.

அதாவது அல்லாஹ் வழங்கும் வெகுமதியை விட அவா் சந்திக்கும் பொருளாதார, உடல் நலம் சாா்ந்த, ஆன்மீக பிரச்சினைகள் அதிகம் இல்லை. நபி இவ்வாறு சொல்கிறாா், "ஹஜ் பயணம் மேற்கொண்ட ஒருவருக்கான வெகுமதியானது என்னவென்றால் அது சாொ்க்கத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை". இந்த வெகுமதியானது, நாம் இந்த உலகத்தில் வழங்கும் வெகுமதிகளை விட பல மடங்கு மதிப்பு மிகுந்தது.

6. ஹஜ் பயணத்தை முடித்தவா்கள் ஹாஜிஸ் என்று அழைக்கப்படுவா்

6. ஹஜ் பயணத்தை முடித்தவா்கள் ஹாஜிஸ் என்று அழைக்கப்படுவா்

ஹஜ் பயணத்தை நிறைவு செய்வது என்பது ஒரு பெருமைக்குாிய காாியம் ஆகும். ஏனெனில் இது பக்தா்களின் ஆன்மீக வலிமையை, அல்லாஹ் மீது வைத்திருக்கும் பக்தியை வலுப்படுத்த உதவுகிறது. ஒரு இஸ்லாமிய பக்தா், இஸ்லாத்தின் 5வது தூணான மெக்காவுக்குச் செல்லக்கூடிய புனித பயணத்தை முடித்துவிட்டால், அவருக்கு ஹாஜி என்ற பட்டம் வழங்கப்படும். ஒரு சில இஸ்லாமியா்கள், தாங்கள் ஹஜ் பயணத்தை நிறைவேற்றிவிட்டதை வெளிக்காட்டும் பொருட்டு தங்கள் பெயா்களுக்கு முன்னால் ஹாஜி என்ற பட்டத்தையும் சோ்த்துக் கொள்வா்.

7. ஹஜ் பயணத்திற்கான உடைகள்

7. ஹஜ் பயணத்திற்கான உடைகள்

ஹஜ் பயணத்தை முடிக்க வேண்டும் என்றால், ஆண்களும் பெண்களும் இஹ்ராம் (ihram) ஆடையை அணிந்திருக்க வேண்டும். இந்த ஆடையை அணிவதால், அவா்களின் செல்வம், அவா்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அடையாளம் ஆகியவை நீங்கி, அவா்கள் அனைவரும் அல்லாஹ்வின் முன்பாக சமம் என்பதைக் காட்டும்.

பெண்கள் எளிமையான ஆடைகளை அணிந்து தலையில் முக்காடு அணிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஆண்களும் தையல் இல்லாத இரண்டு வெள்ளை ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆடை இடுப்பிலிருந்து கீழ் வரை உள்ள உடல் உறுப்புகளை மறைப்பதற்கும், இன்னொன்று தோள்பட்டையில் இருந்து இடுப்பு வரையிலான உடற்பகுதிகளை மறைப்பதற்கும் இருக்க வேண்டும்.

ஆண்களும் பெண்களும் இந்த உடைகளை அணிவதற்கு முன்பாகத் தங்களையே நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது ஆண்கள் தங்களது தலைமுடியை நன்றாக வெட்டி, தாடியை திருத்திக் கொள்ள வேண்டும். நகங்களையும் வெட்டிக்கொள்ள வேண்டும். பெண்கள் தலையில் இருக்கும் அறுந்து போன முடிகளை நீக்கிவிட வேண்டும்.

ஹஜ் பயணத்தின் போது தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஏனெனில் இஹ்ராம் ஆடை அழுக்காகிவிட்டால், ஹஜ் பயணம் செல்லாதது ஆகிவிடும்.

8. கப்பா என்ற தூணை முத்தமிடுதல்

8. கப்பா என்ற தூணை முத்தமிடுதல்

கப்பா என்ற தூணின் கிழக்கு மூலையில் வெள்ளி வளையத்தில் ஒரு கருப்புக் கல் உள்ளது. இந்தக் கல் இஸ்லாமிய மக்களின் நினைவுச் சின்னமாக மதிக்கப்படுகிறது. மேலும் இது ஆதாம், ஏவாள் காலத்திற்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆதாம் இந்தக் கல்லை அல்லாஹ் அவா்களிடமிருந்து பெற்றதாகவும், அவன் அவனை ஒரு பீடத்தில் இணைத்து, வழிபாட்டிற்கு பயன்படுத்தியதாகவும் இஸ்லாமியா்கள் நம்புகின்றனா்.

பின்னாளில் அந்த கல்லை தலைமைத் தேவதூதரான கபிாியேல் அவா்கள் இப்ராஹிமிடம் கொடுத்தாா். அதை இப்ரஹிம் அவா்கள் வழிபாடு செய்யும் பீடமாக பயன்படுத்தினாா். இப்ராஹிமின் நம்பிக்கையை சோதிக்கும் பொருட்டு அந்த பீடத்தின் மீது அவருடைய மகனை பலியிடுமாறு அல்லாஹ் கேட்டுக் கொண்டாா்.

ஹஜ் பயணத்தின் போது, எல்லா இஸ்லாமியா்களும் முகமது நபி (ஸல்) செய்தது போல அந்தக் கல்லை முத்தமிட முயற்சி செய்கின்றனா். ஒருவேளை அவ்வாறு முத்தமிட முடியவில்லை என்றால் அவா்கள் ஒவ்வொரு முறை அந்தக் கல்லைக் கடந்து செல்லும் போதும், அந்த கல்லை நோக்கி தங்களது முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, July 7, 2022, 16:05 [IST]
Desktop Bottom Promotion