Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
உங்க ராசியை சொல்லுங்க நீங்கள் எப்படிப்பட்ட கணவன்/மனைவியா இருப்பீங்கனு நாங்க சொல்றோம்...!
நாம் அனைவருமே சிறந்த வாழ்க்கைத்துணையாக இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறோம், ஆனால் அனைவராலும் அவ்வாறு இருக்க முடிகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
நாம் அனைவருமே சிறந்த வாழ்க்கைத்துணையாக இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறோம், ஆனால் அனைவராலும் அவ்வாறு இருக்க முடிகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஒரு திருமணத்தின் சுமைகளும் பொறுப்புகளும் சிலரின் மகிழ்ச்சியான, அதிர்ஷ்டமான மனநிலையை அழிக்கும் வரை திருமணம் மகிழ்ச்சியான வேடிக்கையான உறவாகத்தான் இருக்கும்.

திருமண உறவை இருவரில் ஒருவர் வெறுக்கத் தொடங்குபோதுதான் சிக்கல்கள் ஆரம்பிக்கும். இதனால் அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களும், அவர்களின் செயல்பாடுகளும் அவர்களை ஒரு மோசமான வாழ்க்கைத்துணையாக மாற்றக்கூடும். ஒவ்வொரு ராசியின் ஆளுமைகளும் அவர்கள் வாழ்க்கைத்துணையாக எப்படி நடந்து கொள்வார்கள் என்று கூற இயலும். அதன்படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் கணவன்/மனைவியாக எப்படி நடந்து கொள்வார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பான துணையாக இருப்பீர்கள் மற்றும் திருமணத்தில் அனைத்து வகையான வாதங்களுக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறீர்கள். மற்றவர்கள் உங்களை ஒரு பரபரப்பான குழப்பவாதியாகக் காணலாம், ஆனால் வழக்கமான சண்டைகள் இருந்தபோதிலும், நீங்கள் மிகவும் அன்பாகவும், உங்கள் துணைக்கு அர்ப்பணிப்புடனும் இருப்பீர்கள்.

ரிஷபம்
திருமண உறவை மகிழ்ச்சியாக வைத்திருக்க உங்களால் முடிந்த அனைத்தையும் நீங்கள் செய்வீர்கள். ஆனால் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையிலான மோசமான உறவு உங்களை கடினமாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் தாக்குகிறது. உங்கள் துணையுடன் எப்படி பேசுவது என்பது உங்களுக்குத் தெரியாது, அதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக இருக்கும்.

மிதுனம்
நீங்கள் இதயத்தில் உண்மையான காதல் கொண்டவர், ஆனால் திருமண யோசனை உண்மையில் உங்களை ஈர்க்கவில்லை. நீங்கள் திருமணம் செய்து கொண்டால், நீங்கள் உங்கள் துணைக்கு அர்ப்பணிப்புடன் இருக்க முனைகிறீர்கள், ஆனால் காலப்போக்கில், நீங்கள் சலிப்படைவீர்கள், இது உங்கள் கூட்டாளருக்கு தெளிவாகத் தெரியும், இதனால் திருமணத்தில் மேலும் சிக்கல்கள் ஏற்படும்.

கடகம்
திருமணம் என்னும் புனித உறவு உங்களையும், நீங்கள் விரும்புபவர்களையும் பிணைப்பதால் நீங்கள் அதனை பெரிதும் விரும்புவீர்கள். வெற்றிகரமான திருமண உறவை பராமரிப்பது உங்களுக்கு கடினமல்ல, ஏனெனில் நீங்கள் அனைத்தையும் விட காதல் மற்றும் திருமணத்திற்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள், மேலும் உங்கள் துணை இதனால் உங்களை அதிகம் விரும்புவார்.

சிம்மம்
உங்கள் காதலன் அல்லது சிறந்த நண்பருடன் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் விரும்புவதால் நீங்கள் நம்பமுடியாத துணையாக இருப்பீர்கள். சில நேரங்களில் சலிப்பைத் தவிர்க்க மற்றவர்களுடன் பேச வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்கிறீர்கள், எனவே இதுபோன்ற விஷயங்களை பொறுத்துக் கொள்ளும் கூட்டாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, உங்களால் அது முடியாத போது அதுவே உங்கள் திருமண சிக்கல்களின் தொடக்கமாக மாறும்.

கன்னி
நீங்கள் உங்கள் வாழ்க்கைத்துணைக்கு மிகவும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருக்கிறீர்கள், ஆனால் சில சமயங்களில் நீங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக கையாளலாம். உங்கள் பிரச்சினை மிகப்பெரியதாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் உங்கள் துணையின் மீது உங்கள் விரக்தியை எல்லாம் காட்டி, சூழலை நீங்கள் மேலும் மோசமாக்குவீர்கள்.

துலாம்
அர்ப்பணிப்புகள் மற்றும் பொறுப்புகள் உங்களை பயமுறுத்துகின்றன, எனவே திருமணம் மீது உங்களுக்கு பெரிதாக விருப்பமில்லை. இருப்பினும், நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால், நீங்கள் இறுதியில் விவாகரத்துக்கான பாதையில் செல்வீர்கள், ஏனெனில் திருமணம் உங்களை முடக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

விருச்சிகம்
உங்கள் பாதுகாப்பற்ற தன்மையை உங்கள் துணையின் மீது நீங்கள் அதிகம் காட்ட முனைகிறீர்கள், இது அவர்களுக்கு முடிவில்லாத எரிச்சலைத் தருகிறது. நீங்கள் திருமண உறவை நேசித்தாலும் பொறாமை மற்றும் பொஸசிவ் உணர்வுகள் உங்கள் திருமணத்தை சாபம் நிறைந்ததாக மாற்றும்.

தனுசு
நீங்கள் மற்றவர்களைப் போலவே சாதாரணமாக திருமணம் செய்து கொள்கிறீர்கள் ஆனால் ங்கள் இதயத்தில், சாகசமும் பயணமும் உங்களுக்கு காத்திருக்கிறது. உங்கள் மனைவியுடன் நீங்கள் இடைவெளி விட்டே வாழ்கிறீர்கள், உங்கள் துணையுடன் வாழும்போது உங்கள் நடத்தை மிகவும் அசாதாரணமாகவும் வித்தியாசமாகவும் மாறும், ஏனெனில் திருமணம் என்பது இறுதியில் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.

மகரம்
உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குடும்பத்தினருக்கு வழங்குவதற்கு உங்கள் 100% அர்ப்பணிப்பை கொடுக்கிறீர்கள், ஏனென்றால் ஒற்றுமை உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் மிகவும் விசுவாசமான மற்றும் அன்பான வாழ்க்கைத் துணை, ஆனால் நீங்கள் ஒரே மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறீர்கள், அனைவருக்கும் முன்னால் சிறந்த ஜோடிகளாக இல்லாதது குறித்து நீங்கள் வருத்தமடைவீர்கள்.

கும்பம்
நீங்கள் உங்கள் கூட்டாளருக்கு மிகவும் அன்பான வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும், ஆனால் குழந்தைகள் உங்கள் வழியில் வரும்போது, உங்கள் மனைவியிடம் உங்கள் பாசம் முற்றிலும் மாறுகிறது. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், இது உங்கள் துணையை எரிச்சலடைய செய்யலாம்.

மீனம்
உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் அப்பாவியாக இருந்ததால், நீங்கள் திருமணத்தில் மிகவும் அன்பாகவும், மென்மையாகவும் இருக்கிறீர்கள். உங்கள் துணை உங்களுக்கு தவறு செய்யும் போது நீங்கள் பேச மாட்டீர்கள். நீங்கள் செய்யக்கூடிய ஒரே விஷயம், திருமணத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி உங்கள் கூட்டாளரிடம் பேசுவதும் சொல்வதும் மட்டுமே. இதனால் நீங்கள் எப்போதும் ஆதிக்கத்திற்கு கீழேயே இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
