Just In
- 37 min ago
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- 1 hr ago
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாதாம்... மீறி சாப்பிட்டா புற்றுநோய் வர வாய்பிருக்காம்!
- 2 hrs ago
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- 3 hrs ago
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
Don't Miss
- News
குழந்தையை பிரசவித்த சில மணி நேரங்களில்.. வேலையை விட்டு தூக்கிய கூகுள் ஊழியர்.. தொடரும் சோக கதைகள்
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Technology
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
- Movies
காலில் கட்டுடன் குஷ்பூ... என்னாச்சு என பதறிய ரசிகர்கள்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Finance
ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் இழப்பு.. Intel வீழ்ச்சி ஆரம்பமா..?
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
வட மற்றும் தென்னிந்தியா தீபாவளி கொண்டாட்டங்களில் உள்ள வித்தியாசம் பற்றி தெரியுமா?
இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் மாதம் 24ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. தீபாவளி நாளில் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்காக அனைவரும் காத்திருப்பது இயல்பு தான். இந்தியா முழுவதும் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்படும். இருப்பினும், தீபாவளி கொண்டாட்டத்தைப் பொறுத்தவரை தென்னிந்தியா மற்றும் வட இந்தியா என வேறுபடும்.
தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தீபாவளி பண்டிகை நரக சதுர்தசியாக கொண்டாடப்படுகிறது. மேலும், இது வழக்கமாக வட இந்தியாவில் தீபாவளிக்கு முந்தைய நாளில் வரும். சில வருடங்களில் திதி ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கூட வரக்கூடும். இப்போது, தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டங்களில் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வோம்...

வட இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்:
* 14 ஆண்டுகள் காட்டில் வனவாசம் இருந்துவிட்டு ராமர் தனது ராஜ்ஜியமான அயோத்திக்கு திரும்பிய நாளே இந்தியாவின் வட பகுதிகளில் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ராமர் திரும்பியபோது, மக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் விளக்கேற்றி வரவேற்றதாக புராணம் கூறுகின்றன.
* தீபாவளி திருநாளன்று லட்சுமி பூஜை அல்லது லட்சுமி தேவியை விநாயகப் பெருமானுடன் மக்கள் வழிபடுவார்கள்.
* களிமண் விளக்குகள், மின் விளக்குகள் ஏற்றி, மலர்கள் மற்றும் வண்ணமயமான ரங்கோலி போட்டு மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பர்.

தொடர்ச்சி...
* வட இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை 5 நாட்களாக, தந்தேராஸ் முதல் கொண்டாடுகிறார்கள். இது உண்மையான தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன் அனுசரிக்கப்படுகிறது. தந்தேராஸ் அன்று மக்கள் இனிப்புகள் தயாரிப்பதும், தங்க நகைகள் மற்றும் நாணயங்கள், வெள்ளி பாத்திரங்கள் வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வட இந்தியாவின் சில பகுதிகளில் அன்றைய தினம் துடைப்பங்களைக் கூட வாங்குகிறார்கள். இது லட்சுமி வீட்டிற்குள் நுழைவதைக் குறிக்கிறதாம்.
* இந்துகளின் நிதியாண்டு ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று தான் தொடங்குகிறது. இதனால் இந்த நாள் பல்வேறு வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களால் மிகுந்த உற்சாகத்துடன் அனுசரிக்கப்படுகிறது.
* வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் விதமாக தெரு நாடகங்களும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றன.

தென்னிந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்:
* கிருஷ்ணரின் மனைவி சத்யபாமா, நரகாசுரனை வதம் செய்யும்படி அவரிடம் கூறிய தினத்தைக் குறிக்கும் வகையில் இந்தியாவின் தென் பகுதிகளில் தீபாவளியானது கொண்டாடப்படுகிறது.
* தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக வரும் அமாவாசை நாளானது தென்னிந்தியாவில் நரக சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது திருவிழாவின் உண்மையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
* தென்னிந்தியாவில் வட மாநிலங்களை விட தீபாவளி கொண்டாட்டம் குறைவாகவே உள்ளது.
* குறிப்பாக மக்கள் குழந்தைகளுக்கு புதிய ஆடைகளை வாங்குவதும், இந்த நாளில் இனிப்புகளை உறவினர்கள், நண்பர்களுடன் பரிமாறிக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வர்.

தொடர்ச்சி...
* கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை இரண்டு நாட்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்படுகிறது.
* பொதுவாக தென்னிந்தியாவில், நரக சதுர்தசி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது, வீட்டை சுத்தம் செய்வது மற்றும் இனிப்பு பலகாரங்கள் தயாரிப்பது ஆகியவை முக்கியமானதாக விளங்குகிறது.
* தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தமிழ் போல்ட் ஸ்கை சார்பாக அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வளமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.