Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
கள்ளகாதலில் ஈடுபடும் பெண்ணின் விரலை வெட்டி கள்ளகாதலன் சாப்பிடனுமாம்..கள்ளகாதலுக்கான பயங்கர தண்டனைகள்
இன்று தினமும் நாம் செய்திகளில் கட்டாயம் பார்க்கும் ஒரு விஷயமாக கள்ளக்காதல் மாறிவிட்டது. முந்தைய காலக்கட்டத்தில் அரிதாக காணப்பட்ட இந்த கள்ளக்காதல் பிரச்சினை இப்போது அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினையா
இன்று தினமும் நாம் செய்திகளில் கட்டாயம் பார்க்கும் ஒரு விஷயமாக கள்ளக்காதல் மாறிவிட்டது. முந்தைய காலக்கட்டத்தில் அரிதாக காணப்பட்ட இந்த கள்ளக்காதல் பிரச்சினை இப்போது அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. கடந்த காலத்தைப் போல அல்லாமல் இப்போது இந்த பிரச்சினை அதிகரித்திருக்க காரணம் ஆண், பெண் புரிதல் குறைந்ததும், தவறான வாழ்க்கை முறையும்தான்.

நமது நாட்டு நீதிமன்றமே வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் தாண்டிய உறவில் சம்மதத்துடன் ஈடுபவது தவறில்லை என்று கூறிவிட்டது. ஆனால் பல நாடுகளில் கள்ளக்காதல் இன்றும் சட்டப்படி குற்றத்திற்குரிய தண்டனையாகத்தான் இருக்கிறது. இந்த தண்டனைகள் மிதமானது தொடங்கி கடுமையான தண்டனைகள் வரை அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்த பதிவில் கள்ளக்காதலுக்கு பல்வேறு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மாலி
மாலியில் பல்வேறு பழங்குடியினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் சட்டங்கள் ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு டோகன் பழங்குடியினரில் திருமணம் தாண்டிய உறவில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். ஆனால் கணவரின் உறவினர்களுடன் உறவில் ஈடுபடக்கூடாது.

ஸ்விட்சர்லாந்து
ஸ்விட்சர்லாந்து உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளில் ஒன்றாக ஸ்விட்சர்லாந்து இருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவது பெரிய குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால் அவர்கள் அடுத்த திருமணத்தை மூன்று ஆண்டுகளுக்கு பதிவு செய்ய முடியாது.

துருக்கி
துருக்கி கடுமையான சட்டங்கள் இருக்கும் ஒரு நாடாக இருக்கிறது. 1996 முதல் இங்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கள்ளக்காதலுக்காக தண்டிக்கப்படுகிறார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கள்ளக்காதலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை வழங்கபடுகிறது.

ஈரான்
ஈரான் பெண்களுக்கெதிரான கடுமையான சட்டங்களுக்கு புகழ்பெற்றது. அதன்படி துரோகம் செய்த ஒரு பெண்ணை அங்கு கணவரால் கொல்ல முடியும். மேலும் இது அவரது கணவரால் மட்டுமல்ல, அவரது ஆண் உறவினர்களாலும் செய்யப்படலாம்.

இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் கள்ளக்காதல் கடுமையான குற்றமாகும், ஆனால் இங்கு மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. இங்கு கள்ளக்காதல் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

பப்புவா
பப்புவா நியூ கினியாவில் விசுவாசமற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் உள்ளன. தன் மனைவியின் கள்ளக்காதலனை கணவர் தலையைக் கூட வெட்டலாம், ஆனால் பெண்கள் கொல்லப்படுவதில்லை, அதற்குப் பதிலாக அவர்களின் விரல்கள் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட அந்த விரலை அந்த பெண்ணின் காதலன் சாப்பிட வேண்டும்.

சீனா
சீனாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் துரோகம் செய்ததற்காக தண்டிக்கப்படுகிறார்கள். அங்கிருக்கும் சட்டங்களின்படி கள்ளக்காதல் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சொத்தில் பாதி பறிமுதல் செய்யப்படுகிறது.

வியட்நாம்
வியட்நாமில் 2013-ல் ஒரு திருமண சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி கணவருக்கு துரோகம் செய்த மனைவி 1 முதல் 3 மில்லியன் டாலர் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

ஆப்பிரிக்கா
சில ஆப்பிரிக்க பழங்குடியினரில் கள்ளக்காதலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. அதன்படி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களின் கருப்பை அவர்க்ளின் கணவரால் வெளியேற்றப்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications
