2022-ல் உங்கள் ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்படப்போறாங்க!

மனித உடல் என்பது கோவில் போன்றது, எனவே, அது எப்போதும் ஆன்மா மற்றும் மனதுடன் ஒத்திசைந்து இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

மனித உடல் என்பது கோவில் போன்றது, எனவே அது எப்போதும் ஆன்மா மற்றும் மனதுடன் ஒத்திசைந்து இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது மிகவும் முக்கியம். நமது உடல்நிலை சரியில்லாமல் போனால் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

Yearly Health Horoscope 2022: Astrological Predictions For All Zodiac Signs

விரைவில் 2021 ஆம் ஆண்டு முடிவிற்கு வரவிருக்கிறது, மேலும் ஒரு புதிய ஆண்டு தொடங்கும். வரப்போகிற இந்த புத்தாண்டில் உங்கள் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகள் கணிக்கப்பட்டுள்ளது. எனவே 2022 புத்தாண்டில் எந்த ராசிக்காரர்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார்கள், யாருடைய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இந்த வருடத்தின் பெரும்பாலான நேரம் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். உங்களுக்கு ஏற்கனவே நோய் இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் நிவாரணம் பெறலாம். இருப்பினும், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த பரிந்துரைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் உணவை உண்ணுங்கள், அத்துடன் உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உணர்ச்சிரீதியாக, இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் வலுவாக உணருவீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

உங்களுக்கு சிகரெட், மது, குட்கா போன்ற தீய பழக்கங்கள் இருந்தால், இந்த கெட்ட பழக்கங்களை சீக்கிரம் விட்டுவிட வேண்டும், இல்லையெனில் நீங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். இது தவிர, உங்கள் தினசரி வழக்கத்தை ஒழுங்கமைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆண்டின் நடுப்பகுதியில், உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் அனைத்து வேலைகளையும் திட்டமிட்ட முறையில் முடிக்க வேண்டும். உங்கள் வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்காது. குறிப்பாக ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நிலையில் கடுமையான சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணவுக் கோளாறுகளால் உங்கள் ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம். அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில், உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கலாம், இது உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சுவாசம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.. நீங்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடகம்

கடகம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு சராசரியாக இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்காது, ஆண்டின் நடுப்பகுதியில் உங்களுக்கு சில பருவகால நோய்கள் வரலாம், இதன் காரணமாக நீங்கள் மிகவும் வருத்தப்படுவீர்கள். உடல்நலக் குறைவு காரணமாக உங்கள் முக்கியமான வேலைகளும் தடைபடும். உணவுடன், உங்கள் பழக்கவழக்கங்களை ஒழுங்கமைக்க வேண்டும். இது தவிர யோகா, தியானம் போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் நிச்சயமாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள், அதே போல் அதிக மன அழுத்தத்தையும் தவிர்க்கலாம். நேர்மறை எண்ணங்களுடன் முன்னேறுங்கள், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நேரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள், ஆனால் இதற்குப் பிந்தைய காலம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய சரிவு ஏற்படலாம். அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருப்பதும் அவசியம். இந்த நேரத்தில் நீங்கள் நீண்ட பயணங்களை மேற்கொண்டால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

கன்னி

2022 ஆம் ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கலவையான முடிவுகளைத் தரும். ஆண்டின் தொடக்கத்தில், உங்கள் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கும், ஆனால் நீங்கள் விரைவில் முன்னேற்றம் காணலாம். இருப்பினும், உங்கள் உடற்தகுதியை பராமரிக்க, உணவைத் தொந்தரவு செய்ய வேண்டாம். இது தவிர, உங்கள் மீது அதிகப்படியான வேலை அழுத்தத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும். இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு இதுபோன்ற பெரிய மனக் கவலைகள் இருக்காது. இருந்தாலும் உணர்வுரீதியாக சற்று பலவீனமாக இருப்பீர்கள்.

துலாம்

துலாம்

உங்களுக்கு ஏற்கனவே வயிறு தொடர்பான நோய் இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் செரிமான சக்தி பலவீனமாக இருக்கும், இந்த நேரத்தில் உங்களுக்கு உணவு மற்றும் பானங்கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். இது தவிர, நீங்கள் காயமடையலாம். வாகனம் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், உங்களுக்கு கடுமையான நோயும் வரலாம். மன வலிமைக்கு, நீங்கள் தியானத்தின் உதவியின் மூலம், உங்களை மன அழுத்தமில்லாமல் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

2022 ஆம் ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொருத்தவரையில் கலவையாக இருக்கப் போகிறது. இந்த நேரத்தில் உங்கள் மனநிலை மோசமானதாக இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் கொள்ளும் பழக்கத்தால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். இதுதவிர அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுக்கு போதிய நேரம் கிடைக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை பேணினால், இந்த ஆண்டு பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது மற்றும் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும்.

தனுசு

தனுசு

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு சராசரியாக இருக்கும். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால், இந்த காலகட்டத்தில் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் பிஸியாக இருப்பதால், உங்கள் மீது கவனம் செலுத்த உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்காமல் போகலாம், ஆனால் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலையுடன், உங்கள் ஆரோக்கியமும் சமமாக முக்கியமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் உங்களுக்கு வயிறு சம்பந்தமான சில நோய்கள் வர வாய்ப்புள்ளது.

மகரம்

மகரம்

2022 ஆம் ஆண்டு மகர ராசியினருக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. உணர்ச்சி கவலைகள் அதிகரிக்கும், இது உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். தனிப்பட்ட மற்றும் இல்லற வாழ்வின் பிரச்சனைகள் குறித்து நீங்கள் பெரும்பாலும் கவலைப்படுவீர்கள், மேலும் உங்கள் ஆரோக்கியமும் பலவீனமாக இருக்கும். நேரத்துக்குச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது தவிர, தினமும் லேசான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம்

கும்பம்

இந்தச் சமயத்தில் சிறுசிறு பிரச்னைகளால் பெரும்பாலும் சிரமப்படுவீர்கள். இது தவிர, இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சில நாள்பட்ட நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மோசமான உடல்நலம் உங்கள் வேலையை பாதிக்கலாம். இது தவிர, உங்கள் செலவுகளும் அதிகரிக்கலாம். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் சோம்பலாக உணர்வீர்கள். அதே நேரத்தில், உங்கள் பலவீனமும் அதிகரிக்கலாம். அதிக மன அழுத்தத்தை எடுத்துக்கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

மீனம்

மீனம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க மாட்டீர்கள், ஆனால் கவனக்குறைவால் உங்கள் உடல்நிலை மோசமடையலாம். உங்களுக்கு கல்லீரல் தொடர்பான ஏதேனும் நோய் இருந்தால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர, ஆரோக்கியமாக இருக்க, எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். நன்றாக யோசித்தால் நல்லது நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion