For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!

நடத்துனராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த் இன்று நாடு முழுவதும் கொண்டாடும் ஒரு பிரபலமாகப் புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

|

நடத்துனராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த் இன்று நாடு முழுவதும் கொண்டாடும் ஒரு பிரபலமாகப் புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார். "வயசானாலும், உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டுபோகல...." என்ற வசனம் ரஜினி நடித்த படையப்பா திரைப்படத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் பேசியிருப்பார். அது வெறும் வசனம் மட்டுமல்ல. உண்மையும்தான்.

Happy Birthday Rajinikanth: Interesting Facts About Thalaiva

1975 ஆம் ஆண்டு தொடங்கிய தன் நடிப்பு பயணத்தை தற்போது வரை மிக அழகாக நடிப்பாலும், ஸ்டைலாலும் ஓட்டிச்செல்கிறார் ரஜினிகாந்த். அபூர்வ ராகம் முதல் தற்போது வெளியாகவுள்ள தர்பார் வரை தன்னுடைய நடிப்பாலும், உழைப்பாளும், முயற்சியாலும், திரைத்துறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திய ரஜினி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஜினியை வாழவைத்த தமிழ்நாடு

ரஜினியை வாழவைத்த தமிழ்நாடு

பிறந்தது கர்நாடகா மாநிலமாக இருந்தாலும், அவரை வாழ வைத்தது தமிழ்நாடுதான். "அன்னை வாரிக் கொடுத்தது தாய் பாலு....என்னை வாழ வைத்தது தமிழ்பாலு" என்ற பாடல் வரிகள் ரஜினி நடித்த அண்ணாமலை படத்தில் வரும் "வந்தேன் டா பால்காரன்" பாடலில் இடம் பெற்றிருக்கும். ரஜினியை வாழ வைத்த தமிழக மக்கள் இன்று அவரின் 70ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர்.

பிறப்பு

பிறப்பு

1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிறந்தார் ரஜினிகாந்த். ராமோசி ராவ் காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார் ரஜினி. இவரது தந்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்தவர். ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட் ஆகும். தனது ஒன்பதாவது வயதில் தாயை இழந்தார். பெங்களூரிலே கல்வி பயின்றவர், பின்னர் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் அவர் நடித்திருக்கிறார். இதனால் நடிப்பின் மீது அவர் காதல் கொண்டார்.

MOST READ:ஆண்களே... உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்...!

ரஜினிகாந்த் பெயர்

ரஜினிகாந்த் பெயர்

போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர். அதன்பின்னர், 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இவரைத் திரைக்குள் கொண்டு வந்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர். இவர்தான் "ரஜினிகாந்த்' என்று அவருக்குப் பெயர் சூட்டினார். "கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல" என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.

பைரவி ரஜினிகாந்த்

பைரவி ரஜினிகாந்த்

ரஜினியின் திரைப்பயணம் அபூர்வ ராகத்தில் தொடங்கியிருந்தாலும், அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். மூன்று முடிச்சி, 16 வயதினிலே படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தியிருந்தார் ரஜினி. முதன்முதலில் ரஜினி கதாநாயகனாக அறிமுகமாகிய திரைப்படம் பைரவி. இந்தப்படம்தான் ரஜினியின் வெற்றி பயணத்தை முதலில் தொடங்கியது.

பலமொழிப்படங்களில் நடித்த ரஜினி

பலமொழிப்படங்களில் நடித்த ரஜினி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார். பல மொழிப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், அதிகமாக நடித்தது தமிழ்ப்படங்களில்தான். கமல், ரஜினியும் இணைந்து இதுவரை 12 படங்களில் நடித்துள்ளனர். அதில், தமிழ்ப்படங்கள் மட்டும் 9.

MOST READ: மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்... நீங்களே ஆச்சிரியப்படுவீங்க...

167 திரைப்படம்

167 திரைப்படம்

70 வயதான நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975இல் தொடங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்.

தலைவர் 168

தலைவர் 168

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இப்படத்திற்கான பூஜை நேற்று சன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் போடப்பட்டது. இப்படத்தில் குஷ்புவும், மீனாவும் நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிக்கு ஜோடியாக "அண்ணாமலை" படத்தில் குஷ்புவும், "முத்து, வீரா" படத்தில் மீனாவும் நடித்திருப்பார்கள். இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை ரஜினிக்கு தேடிதந்ததால், தலைவர் 168 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சர்ச்சையான படம்

சர்ச்சையான படம்

ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலே தனி என்று பலர் பாராட்டுவார்கள். 2002ஆம் ஆண்டு வெளியான பாபா படத்தில் ரஜினிகாந்த் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் அந்த காட்சியை நீக்கக்கோரி ரஜினியிடம் கோரியிருந்தார். ஆனால், ரஜினி அதற்கு மறுத்துவிட்டார். இதனால் கொந்தளித்த பாமகவினர் பாபா படம் வெளியான அன்று திரையரங்குகளை அடித்து நொறுக்கினர் மற்றும் படச்சுருளையும் எரித்தனர். இதனால் பாமகவினருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

MOST READ: 2019ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 10 செக்ஸியான ஆண்கள் யார் என்று தெரியுமா?

விருதுகள்

விருதுகள்

இந்திய அரசின் மிக உயரிய விருதான " பத்மபூஷன்" மற்றும் "பத்ம விபூஷன்" விருதுகளை அவர் பெற்றுள்ளார். அத்துடன் தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது மற்றும் பல திரைப்பட விருதுகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டார் ரஜினிகாந்த்

அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

"நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியுது...ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்." அவர் நடித்த திரைப்படத்தில் இருக்கும் வசனத்திற்கு ஏற்ப அவருடைய அரசியல் பயணமும் அவ்வாறுதான் இருக்கிறது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால், தற்போது அவரை அவர் கட்சித்தொடங்கவில்லை. ரஜினியும் அரசியலுக்கு வருவார் என அவருடைய ரசிகர்களுக்கும் காத்துக்கிடக்கிறார்கள்.

ட்ரெண்டான ஹேஷ்டேக்

ட்ரெண்டான ஹேஷ்டேக்

#HappyBirthDaySuperstar என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. சுமார் இரண்டரை லட்சம் பேர் அந்த ஹாஷ்டேகில் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். #HBDThalaivarSuperstarRAJINI மற்றும் #HBDSuperstarRajinikanth போன்ற 10க்கும் மேற்பட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவிலும், தமிழக அளவிலும் ட்ரெண்டாக உள்ளது.

MOST READ: இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்...நீங்க எந்த ராசி?

மீம்ஸ் மூலம் வாழ்த்து

மீம்ஸ் மூலம் வாழ்த்து

1975ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் 70கிட்ஸ், 80கிட்ஸ், 90கிட்ஸ் தற்போது 20 கிட்ஸ் வரை எல்லாரையும் தன் ரசிகர் பட்டாளமாக்கிக்கொண்டு தொடர்ந்து பயணம் செய்துவருகிறார். "சூப்பர் ஸ்டாரு யார்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" அட இது பாட்டு வரியில்லைங்க. உண்மைதாங்க. நீங்கப்போய் சின்ன குழந்தையிடம் கேட்டலும் செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்னு. அந்த வகையில் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் ரஜினி ரசிகர்கள் மீம்ஸ் மூலமாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் ரஜினியை நேரில் சந்தித்தும், ட்விட்டர் மூலமாகவும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். ரஜினியின் பிறந்த நாளை மிக விமர்சையாக ஆட்டோ ஓட்டுனர்கள் கொண்டாடுவார்கள். ரஜினி நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் பாட்ஷா. அதில், ரஜினி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருப்பார்.

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

ரஜினியின் பிறந்த நாளை தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இலவசமாக உணவு வழங்குதல், நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் போன்று ரஜினியின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய், அஜித், விக்ரம் போன்ற நடிகர்களின் ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Happy Birthday Rajinikanth: Interesting Facts About Thalaiva

Today is superstar rajinikanth birthday, here are the interesting facts about him.
Desktop Bottom Promotion