Just In
- 6 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 7 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 9 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
- 10 hrs ago
நீங்க உங்க குழந்தைங்கள சரியாத்தான் வளர்க்குறீங்களா? இத படிச்சு தெரிஞ்சிக்கோங்க...
Don't Miss
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கிருஷ்ணரின் மரணத்திற்கு பிறகு நடந்த மோசமான துர்சம்பவங்கள் என்னென்ன தெரியுமா?
திருமாலின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான மற்றும் அனைவரும் விரும்பும் ஒரு அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். பூமியின் பாரத்தை குறைக்கவும், அதர்மத்தை அழிக்கவும் கிருஷ்ண அவதாரமெடுத்த விஷ்ணு குருஷேத்திர போரின் மூலம் தனது குறிக்கோளை அடைந்தார். குருஷேத்திர போரால் ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இதற்காக கிருஷ்ணர் இழந்ததும் எண்ணற்றவை.
தனது குறிக்கோளை அடைவதற்காக கிருஷ்ணர் பல தந்திரங்களை செய்ய வேண்டியிருந்தது. இதனால் பலரின் சாபங்களுக்கு அவர் ஆளானார். இறுதியில் அனைத்து சாபங்களின் விளைவாக மரணமும் அடைந்தார். கிருஷ்ணரின் மரணம் பூமியில் வாழ்ந்தவர்களை வெகுவாக பாதித்தது, குறிப்பாக பாண்டவர்களை பெரிதும் பாதித்தது. கிருஷ்ணரின் மரணத்திற்கு பிறகு பல துர்சம்பவங்கள் நடந்தது. இந்த பதிவில் கிருஷ்ணரின் மரணத்திற்கு பிறகு என்னென்ன நடந்தது என்று பார்க்கலாம்.

காந்தாரியின் சாபம்
மகாபாரத போரில் அனைத்து கௌரவர்களும் கொல்லப்பட்டனர். இதனால் காந்தாரி தனது புதல்வர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்த கிருஷ்ணருக்கு கடுமையான சாபத்தை அளித்தார். கிருஷ்ணரும் அதனை மனமாற ஏற்றுக்கொண்டார்.

போருக்கு பின் நடந்தது
காபாரதப் போர் முடிவடைந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து ராஜ்ஜியங்களும் அமைதியாகவும், வளமாகவும் இருந்தது. இருப்பினும், யாதவர்களின் இளைஞர்கள் அற்பமானவர்களாகவும், வெறித்தனமானவர்களாகவும் மாறிவிட்டனர். கிருஷ்ணரின் மகன் சம்பா பெண் போல உடையணிந்து கொண்டு துவாரகைக்கு வருகைத் தந்த வசிஷ்டர், துருவாசர், விசுவாமித்திரர் ஆகியோரை கிண்டல் செய்ய முயற்சி செய்தனர்.

குழந்தையின் பாலினம் என்னவாக இருக்கும்
அசட்டுத்தனமான தைரியத்தாலும், விளையாட்டுத்தனத்தாலும் சம்பா பெண் வேடமிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கு என்ன குழந்தை பிறக்குமென்று அந்த மாமுனிவர்களிடம் கேட்டான்.

முனிவர்களின் சாபம்
இவர்களின் குறும்புத்தனத்தைக் கண்டு கோபம்முற்ற முனிவர்கள் சம்பாவுக்கு ஒரு இரும்புத்தடி பிறக்கும் என்றும் அதனால் உங்கள் இனமே அழியும் என்றும் சாபமிட்டனர். இந்த செய்து உக்ரசேன மன்னரை அடைந்தது. அந்த போல்ட் தூளாக்கப்பட்டு நதியில் கலக்க வேண்டும் என்று கூறப்பட்டது, மேலும் யாதவ ராஜ்ஜியத்தில் இனி யாரும் போதை பொருட்களை உற்பத்தி செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

சாபம் பலித்தது
முனிவர்கள் கொடுத்த சாபத்தின் விளைவு பல அபசகுனங்களை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது . கிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் பஞ்சாஜண்யா, கிருஷ்ணரின் தேர் மற்றும் பலராமரின் கலப்பை ஆயுதம் ஆகியவற்றுடன் மறைந்ததுவிடும், பாவச்செயல்கள் பெருகும் என்றும் கூறினர். இதனால் கிருஷ்ணர் அவர்களை பிரபாஸ் நதிக்கரையில் புனித யாத்திரை மேற்கொள்ள கூறினார். இருப்பினும் அவர்கள் யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது மது அருந்தினர்.

சண்டை தொடங்கியது
போதை தலைக்கேறிய சாத்யகி அசுவத்தாமன் பாண்டவர்களின் படையையும், இளம் பஞ்ச பாண்டவர்களையும் தூங்கி கொண்டிருந்த போது அசுவத்தாமன் கொன்றது குறித்து கிருதவர்மாவிடம் விமர்சனம் செய்யத் தொடங்கினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் சண்டையிடவும், கொல்லவும் தொடங்கினர்.

பிழைத்தவர்கள்
அந்த அர்த்தமற்ற போரில் மது போதையில் அனைவரும் ஒருவருக்கொருவர் கொன்றனர். இறுதியில்
வப்ரு, தாருகா மற்றும் கிருஷ்ணர், பலராமர் ஆகியோர் மட்டுமே பிழைத்தனர்.

கிருஷ்ணரின் மரணம்
வப்ருவும், பலராமரும் இறந்தனர், அதன்பின் கிருஷ்ணர் தாருகாவை பாண்டவர்களிடம் அனுப்பி அர்ஜுனனை உதவிக்கு அழைத்து வரக் கூறினார். வனத்தில் கிருஷ்ணர் ஜரா என்னும் வேதனை அம்பு எய்து கொல்லப்பட்டார்.

வாசுதேவரின் மரணம்
தியானத்தில் இருந்தபோது கிருஷ்ணரின் தந்தை வாசுதேவரும் இறந்தார். அந்த சமயத்தில் அர்ஜுனனும் உதவியுடன் துவாரகைக்கு வந்து சேர்ந்தார். யாதவர்களில் வயதான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே தப்பிப்பிழைத்து இருந்தனர். கிருஷ்ணரின் 16,000 மனைவிகள் இருந்ததாக, மேலும் வயதான ஆண்கள் மற்றும் குழந்தைகளுடன், அவர்கள் அனைவரும் இந்திரப்பிரஸ்ததிற்கு புறப்பட்டனர்.
MOST READ: ஆண்மையை அதிகரிக்கும் அத்திப்பழம் உங்களுக்கு ஏற்படுத்துகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா?

துவாரகை கடலில் மூழ்கியது
அவர்கள் வெளியேறியவுடன் நீர் மட்டம் உயர்ந்து துவாரகை கடலில் மூழ்கியது. யாதவர்கள் இந்திரபிரஸ்தத்திற்கு செல்லும் வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.

அர்ஜுனனின் தோல்வி
அர்ஜுனர் அவர்களை பாதுகாக்க முயன்றார் ஆனாலும் அந்த சமயத்தில் அர்ஜுனரின் ஆயுதங்கள் செயல்படாமல் போனது. இதனால் அர்ஜுனனுக்கு பல் சந்தேகங்களும், குழப்பமும் ஏற்பட்டது.

வியாசர்
மனக்குழப்பத்தில் இருந்த அர்ஜுனன் உடனடியாக வேதவியாசரை சந்திக்க சென்றார். அதற்கு வியாசர் பாண்டவர்கள் பூமியில் பிறந்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி அவர்கள் பூமியை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.

பாண்டவர்களின் மரணம்
வியாசர் கூறியதை அர்ஜுனன் யுதிஷ்டிரனிடம் சென்று கூறினார். வியாசர் கூறியதை யுதிஷ்டிரனும் ஏற்றுக்கொண்டார். கிருஷ்ணர் இல்லாத இந்த உலகில் தாங்கள் வாழ்வதும் வீண் என்று உணர்ந்த பாண்டவர்கள் துறவறம் சென்று அங்கு உயிரை விட்டனர்.