For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருவார பிரதோஷம் : திருமண தடை நீங்கி மாங்கல்ய பலம் பெருக சிவனை வணங்குங்கள்

இன்று புதன்கிழமை பிரதோஷம். இன்றைய தினம் விரதம் இருந்து மாலையில் பிரதோஷ வேலையில் சிவன் நந்திக்கு அபிஷேக பொருட்களை வாங்கிக்கொடுத்து தரிசனம் செய்தால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். கல்விச் செல்வம் உயரும்

|

அமாவாசைக்கு பிறகு 13ஆம் நாள் திரையோதசி திதியில் வளர்பிறை பிரதோஷம் வரும், அதேபோல பவுர்ணமி முடிந்து 13ஆம் நாள் இன்று திரயோதசி திதி தேய்பிறை பிரதோஷம். வியாழக்கிழமை பிரதோஷம் சிறப்பான நாள்.இந்த நாளில் சிவ ஆலயம் சென்று வணங்கி அபிஷேக பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. குருபகவானுக்கு உகந்த இந்த நாளில் பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. இன்றைய தினம் பிரதோஷபூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும். திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும்.

Guruvara pradosham viratham and benefits

குருபகவான் அருள்பாலிக்கும் ஆலயங்களில் இன்றைய தினம் பிரதோஷ பூஜைகள் சிறப்பாக நடைபெறும். குருவாரமான இன்று தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபடுவார்கள் பக்தர்கள். மாலையில், சிவாலயத்துக்குச் சென்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி விளக்கேற்றி வழிபடுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் மாணவர்கள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது சிறப்பு. திரயோதசி திதி வரும் நாளில் சிவ ஆலயங்களில் அவரது வாகனமான நந்தி தேவருக்கு பிரதோஷ காலத்தில் சிறப்பாக அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். நந்திக்கு தீபாராதனை முடிந்த பின்னர் சிவனுக்கு ஆராதனை செய்யும் போது நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே சிவனை தரிசனம் செய்வது சிறப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குருவார பிரதேஷம்

குருவார பிரதேஷம்

புரட்டாசி மாதத்தில் குருவாரம் எனப்படும் வியாழக்கிழமைகளில் பிரதோஷம் வருவது சிறப்பு. சிவனை தரிசனம் செய்வதோடு நந்திதேவரையும் வணங்கலாம். நவகிரகங்களில் குருபகவானை வணங்கலாம். இன்றைய தினம் திருச்செந்தூர், ஆலங்குடி, பாடி திருவலிதாயம், தென்திட்டை குருபகவான் ஆலயங்களிலும் இன்றைய தினம் குருவார பிரதோஷம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெறும்.

குருபகவான் வழிபாடு

குருபகவான் வழிபாடு

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். இன்றைய தினம் குருபகவானுக்கும் சிவபெருமானுக்கும் தும்பைப்பூ மாலை சாற்றி வணங்கலாம். ஏழு பிறவிகளிலும் செய்த தோஷங்கள் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

MOST READ:சர்க்கரை நோயாளிகள் எந்த கிழங்குகளை சாப்பிடக்கூடாது?... என்ன கிழங்கை சாப்பிடலாம்...

 குருதிசை குரு புத்தி

குருதிசை குரு புத்தி

குரு திசை குரு புத்தி நடப்பவர்கள் தனுசு, மீனம் ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்றைய தினம் மாலையில் சிவ ஆலயம் சென்று நந்தியை தரிசனம் செய்யலாம். நந்தி தேவருக்கு சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அருகம்புல், செவ்வரளி, வில்வ இலைகளை அர்ச்சனைக்கு கொடுக்க வேண்டும். தயிர்சாதம் பிரசாத விநியோகம் செய்யலாம்.

துன்பங்கள் நீங்கும்

துன்பங்கள் நீங்கும்

வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்றால் துன்பங்கள் நீங்கும் கஷ்டங்கள் காணாமல் போகும். தோஷங்களும் தீரும்.

திருமணத்தடைகள் விலகி மாங்கல்ய பலன் கிடைக்கும். குருவின் அருளால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.

அபிஷேகப் பொருட்கள்

அபிஷேகப் பொருட்கள்

பிரதோஷ காலத்தில் அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும். பால் வாங்கித்தர நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர தன லாபமும் வளங்களும் உண்டாகும். தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால் முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர சுகமான வாழ்வும் சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.

MOST READ:இந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guruvara pradosham viratham and benefits

Guruvara Prathosam Viratham 2019,Guruvaara Pradosh provides protection against existing dangers and concerns, if any.Pradhosha pooja is one of the most important among the poojas performed to the Graceful Lord Shiva. In Shukla Paksha and Krishna Paksha the evening of the trayodasi
Story first published: Thursday, September 26, 2019, 12:34 [IST]
Desktop Bottom Promotion