Just In
- 47 min ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 10 hrs ago
மைதா போண்டா
- 11 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 12 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குரு பெயர்ச்சி 2019-20 : 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்..!
குரு பகவான் நவ கிரகங்களின் முழு சுப கிரகம். வாக்கிய பஞ்சாங்கப்படி தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி விட்டார். திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 18ம் தேதி அதிகாலை 5.17 க்கு விருட்சிக ராசியில் இருந்து தனது சொந்த ராசியான தனுசு ராசிக்கு செல்ல இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் நாட்டில் என்னென்ன நடக்கும் என்று ஜோதிடர் லட்சுமி நாராயண ஐயர் கணித்துள்ளார் படியுங்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது கிடையாது. காரணம் ஜாதகத்தில் உள்ளது தசா புத்திகளும், கிரகங்களும் தான் 70% வரை பலன்களைத் தீர்மானிக்கும். குரு பெயர்ச்சி,சனிப் பெயர்ச்சி ,ராகு பெயர்ச்சி இதெல்லாம் 30% வரை பலனை தீர்மானிக்கும். ஜாதகத்தில் தசா புத்திகளில் இருக்கும் நன்மை தீமைகளை கூட்டி,குறைத்து வழங்குவதுதான் இந்தப் பெயர்ச்சிகளின் தன்மையாகும். தங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து மற்ற முடிவுகளை எடுங்கள்.
10 பயங்கரமான உணவு வகைகள்.. சாப்ட்டீங்க.. செத்துருவீங்க!
அனைவருக்கும் பொதுவாக உள்ள பலன்களை இங்கே நான் குறிப்பிடப் போவதில்லை. ஆதிபத்யங்களை மையமாக வைத்துத்தான் பலன்களை கூறப் போகிறோம். ராசிக்கு மட்டும் பலன்களை எடுக்காமல் லக்கினத்திற்கும் எடுக்க வேண்டும். பொதுவாக குரு 2,5,7,9,11ல் குரு வந்தால் நன்மையை செய்யும் என்று ஏமாற வேண்டாம். உங்க சொந்த ஜாதகத்தில் தசாபுத்தி எப்படி இருக்கிறதோ அதன்படியே நடக்கும்.

ஆன்மீக சக்தி அதிகரிக்கும்
குரு பகவான் ராசிகளில் தெய்வ பலத்தைக் குறிக்கும் ஒன்பதாவது ராசியான தனுசு ராசியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்லும் காலங்களில் ஆன்மீக வாதிகள்,ஜோதிடர்கள்,சட்டத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் அதிகமாக உருவாகும்.நாட்டில் கோவில் சம்பந்தமான விசயங்களில் அதிக நன்மைகள் உருவாகும். பல அனுமானுஷய விசயங்கள் நடக்கும். கோவில் தெய்வங்களின் சக்தி வெளி உலகில் பரவலாக பேசப்படும். கோவில் பாதுகாப்புக்கு உண்டான சட்டங்கள் இயற்றப்படும்.

தங்கம் வெள்ளி விலை உயரும்
குரு பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் செல்லும்போது தங்கள்,வெள்ளி விலை உயரும். மக்கள் தங்கம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆடை, ஆபரணங்களின் விலை உயரும். கலைத்துறையில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள்.புதிய நடிகர், நடிகைகள் வருவார்கள்.சினிமா துறையில் நல்ல மாற்றங்கள் நிகழும். மழைப் பொழிவு நன்றாக இருக்கும்.

அரசியலில் மாற்றம் ஏற்படும்
குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் செல்லும்போது அரசியலில் நல்ல மாற்றங்கள் உருவாகும். அரசு வேலைகள் நிறைய உருவாகும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் ஏற்படும். கோதுமை விலை உயரும். கோதுமை பொருள்களின் பயன்பாடு அதிகமாகும். அரசு நல்ல விதமான புது திட்டங்களை கொண்டு வரும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு வளமான வாழ்க்கை உருவாகும்.

மேஷம்
மேஷ ராசிக்கு குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார்.9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். குரு உங்க ராசிக்கு 9,12க்குடையர். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள்.தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. 12ஆம் இடம் என்பது வெளிநாட்டையும்,9ஆம் இடம் என்பது நீண்ட தூர பயணத்தையும் குறிக்கும். வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்தால் இடைபட்ட காலங்களில் வெளிநாட்டு,வெளிமாநில வேலை அமையும்.சட்டம்,ஜோதிடம்,ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல தனச்சேர்க்கை உண்டாகும். குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு 8,11க்குடைய குரு 8ஆம் வீட்டிற்கு வரப்போகிறார்.அஷ்டம குரு என்று பயப்படுத்துவார்கள்.பயப்பட வேண்டாம். உங்களுக்கு அஷ்டம குரு நன்மையே செய்வார். ஆனால் அஷ்டமச் சனி பாதிப்பை தருவார் தொழில் வேலை விசயங்களில். 2020 தொடங்கி விட்டால் உங்களுடைய பிரச்சினை படிப்படியாக குறைந்து நன்மைகள் ஏற்படும். புது வித முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். 2020 ஆம் ஆண்டில் உங்கள் நிலைமை சிறப்பாகவே இருக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10க்குடையர். அவர் 7ஆம் வீட்டில் அமர்கிறார்.கேந்திர ஆதிபத்ய தோஷத்தைப் பெறுகிறார். சற்று கவனமாக இருக்க வேண்டும்.7ஆம் வீட்டில் குரு நன்மை என்று எண்ணி துணிந்து இறங்கி விடாதீர்கள். கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. புது தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும்.அனுசரித்துச் செல்லவும். குரு கேது சாரத்தில் இருக்கும் வரை தொழில் வேலை மற்றும் மனைவியுடன் சில பிரச்சினைகள் நிகழும். குரு இடைபட்ட காலங்களில் ஓரளவு நன்மையைத் தருவார். மிக கவனம் தேவை.

கடகம்
கடக ராசிக்கு குரு 6,9க்கு உடையவர். குரு பெயர்ச்சியின் முற்பகுதி நன்மையைத் தரும்.வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும்.ஆனால் பிற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். கடன்,நோய் சம்பந்தப்பட்ட வகையில் மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பிற்பகுதியில் புது முதலீடுகள் கூடாது. வேலை முயற்சிகளிலும் பலவீனம் ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம் பிற்பகுதியில்.

சிம்ம ராசி
சிம்ம ராசிக்கு யோக காலம் என்றே சொல்லலாம். காரணம் 5,8க்குடைய குரு 5ஆம் வீட்டில் வரப் போகிறார். 2020 ஜனவரியில் 6ஆம் வீட்டில் சனியும் 11ஆம் வீட்டில் ராகுவும் இருப்பது நன்மையே. 2020 மார்ச் மாதம் வரை நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.எந்த புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. ஆனால் 2020 ஏப்ரல் முதல் நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை செயல்படுத்துவதில் பிரச்சினை ஏற்படும். தடை நிகழும். இருப்பினும் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1.

கன்னி ராசி
கன்னி ராசிக்கு 4,7க்குடைய குரு 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். கடுமையான கேந்திர ஆதிபத்ய தோஷம். தாயின் உடல் நிலை பிரச்சினை அல்லது தங்கள் சுக விசயங்களை அனுபவிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். பலருக்கும் வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும்.2020 ஐனவரி சனிப் பெயர்ச்சிக்கு பிறகு சிறிது பிரச்சினைகள் குறையும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளை கொடுக்கும். சுக்கிரன் சாரத்தில் குரு செல்லும் போதும் மட்டும் நன்மைகள் ஏற்படும். இருப்பினும் புது முயற்சிகளில் கவனம் தேவை.

துலாம் ராசி
துலாம் ராசிக்கு 3,6க்குடைய குரு பகவான் 3ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். கடந்த ஆண்டுகளில் குருப்பெயர்ச்சியின் பிற்பகுதியில் வாக்கு காப்பாற்றத் தவறுதல்,வம்பு, வழக்கு பிரச்சினைகளை சந்தித்த நீங்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கடன் கட்டுக்கள் இருக்கும் அல்லது உதவி புரிவதற்கு ஆட்கள் வருவார்கள். சுக்கிரன் சாரத்தில் குரு செல்லும் போது தங்கள் எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் நிகழும். கவனம் தேவை.

விருட்சிகம்
விருட்சிக ராசிக்கு 2,5ஆம் வீட்டிற்குடைய குரு 2ஆம் வீட்டில் வரப் போகிறார். வம்பு, வழக்கு ,நீதிமன்ற வழக்குகள் தங்களுக்கு சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வாக்கில் கவனம் தேவை. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த தன விசயங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் ரீதியான முன்னேற்றம் நிகழும். யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள். வக்கீல்,ஆன்மீக வாதிகள்,ஜோதிடர்களுக்கு சிறப்பான காலம் இது. குரு கேதுவை கடந்ததும் தொழில் ஆதாயம் பெருகும்.

தனுசு
ஜென்ம சனி கால கட்டம். குரு ஜென்ம ராசிக்கு வருகிறார். 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து பேதங்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு அனுகூலம் உண்டு.

மகரம்
மகரத்திற்கு 3,12க்குடைய குரு 12ஆம் வீட்டிற்கு வருகிறார். கடந்த குரு பெயர்ச்சியில் பல சோதனைகளை கடந்த மகர ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யோகம் அதிகம். ஆரம்ப காலமும் முடிவு காலமும் சோதனையாக இருந்தாலும் இடைபட்ட காலங்களில் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும். வெளி மாநிலம் அல்லது வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்கு 2,11க்குடைய குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். கடந்த வருடத்தில் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவருக்கு இந்த வருடம் சாதகமான முடிவுகள் வர இருக்கிறது.நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மீனம்
1,10க்குடைய குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும்.மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும். கேது,8க்குடையன்,6க்குடையவன் சாரத்தில் குரு செல்ல இருப்பதால் கடன், தடை என்பது அதிகமாக இருக்கும். செய் தொழிலை விட்டு வேறு தொழில் அல்லது வேலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. சனி 2020 ல் 11ஆம் வீட்டில் செல்வதால் குரு பெயர்ச்சியின் மத்தியில் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.