For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்தி ஜெயந்தி அன்று மகாத்மா காந்தி கூறிய 'இந்த' விஷயங்கள உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு அனுப்புங்க..!

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியை குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும்.

|

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியை குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்திய சுந்திர போராட்டத்தை முன்னின்று அகிம்சை வழியில் விடுதலையை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியை இந்தியாவின் தேச தந்தை என்று அழைக்கிறோம். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் 'அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Gandhi Jayanti: wishes, quotes, slogan, messages, whatsapp and facebook status in tamil

மகாத்மா காந்தி இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னும் ஊரில் 1869ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அகிம்சையையும், அமைதியையும் வலியுறுத்தியவர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசிப் பொருட்களின் மீது அதிகப் பற்று கொண்டவராக காந்தியடிகள் திகழ்ந்தார். இக்கட்டுரையில், காந்தியின் பொன்மொழிகள் மற்றும் தத்துவங்கள் பற்றி காணலாம். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு காந்தி ஜெயந்தி அன்ரு அனுப்புங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ்த்து

வாழ்த்து

மகாத்மா காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

பொன்மொழி 1

பொன்மொழி 1

என் வாழ்க்கையே எனது அறிவுரை! - மகாத்மா காந்தி

பொன்மொழி 2

பொன்மொழி 2

ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ, அப்போதே அவன் மேதையாகிறான்! - மகாத்மா காந்தி

பொன்மொழி 3

பொன்மொழி 3

எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு உயித்திருக்கிறது! - மகாத்மா காந்தி

பொன்மொழி 4

பொன்மொழி 4

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன்மூலம், நாம் நல்லவர்களாகிவிட முடியாது! - மகாத்மா காந்தி

பொன்மொழி 5

பொன்மொழி 5

குறிக்கோளை அடையும் முயற்சியில்தான் மகிமை இருக்கிறது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை.

பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் சிரமங்கள் எனும் மலையை வென்றுவிடலாம். - மகாத்மா காந்தி

பொன்மொழி 6

பொன்மொழி 6

எது முழுமையானதாகவும் உண்மையானதாகவும் இல்லாமலிருக்கிறதோ, அதை எந்த பெயர் சொல்லி அழைப்பதிலும் பயனில்லை! - மகாத்மா காந்தி

பொன்மொழி 7

பொன்மொழி 7

அமைதியை அடைவதற்கென எந்தப் பாதையும் கிடையாது. அமைதியேதான் பாதை! - மகாத்மா காந்தி

பொன்மொழி 8

பொன்மொழி 8

எல்லாவற்றுக்கும் அறம்தான் அடிப்படை. அந்த அறத்திற்கே உண்மைதான் அடிப்படை! - மகாத்மா காந்தி

பொன்மொழி 9

பொன்மொழி 9

பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ முதலில் அதுபோல நீ மாறு! - மகாத்மா காந்தி

பொன்மொழி 10

பொன்மொழி 10

முதலில் உங்களை உதாசீனப்படுத்துவார்கள், பின்னர் உங்களைப் பார்த்து நகைப்பார்கள், பின்னர் உங்களோடு சண்டையிடுவார்கள். பின்னர் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.- மகாத்மா காந்தி

பொன்மொழி 11

பொன்மொழி 11

பிறரை தாழ்த்துபவன், தானும் தாழ்ந்து போவான் என்பது இயற்கையின் தர்மம்! - மகாத்மா காந்தி

பொன்மொழி 12

பொன்மொழி 12

அகிம்சை என்பது இதயத்தின் ஒரு பண்பு. அதற்கு மூளையுடன் தொடர்பு கிடையாது! - மகாத்மா காந்தி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Gandhi Jayanti: wishes, quotes, slogan, messages, whatsapp and facebook status in tamil

Here we are talking about the Gandhi Jayanti: wishes, quotes, slogan, messages, whatsapp and facebook status in tamil.
Story first published: Thursday, September 30, 2021, 16:52 [IST]
Desktop Bottom Promotion