For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெருமாளின் முழுஅருளும் கிடைக்க வைகுண்ட ஏகாதசி அன்று கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

வைகுண்ட ஏகாதசி நாள் இந்துக்களுக்கு மிகவும் புனிதமானது. இது தமிழ் மாதமான மார்கழியில் (டிசம்பர்-ஜனவரி) நிகழ்கிறது. இந்நாளில் பெருமாளை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டதிலேயே இடம் கிடைக்கும்.

|

Vaikunta Ekadasi 2023: வைகுண்ட ஏகாதசி என்பது விஷ்ணு கோயில்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழா. வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது வைகுண்டத்தினை நம்மாழ்வர் அடைந்ததை நினைவுகூர்கிறது. நம்மாழ்வர் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர்.

Five Things You Must Do On Vaikunta Ekadasi

இந்த நாளின் தோற்றம் குறித்து சில கதைகள் நிலவுகின்றன. தமக்கு எதிராக இருந்தபோதிலும், இரண்டு அசுரர்களுக்காக வைகுண்டத்தின் வாயிலை பெருமாள் திறந்ததாகக் கூறப்படுகிறது. தமது கதையைக் கேட்டு, பெருமாளை தரிசித்து அவரது வசிப்பிடத்தின் வாயிலான சொர்க்க வாசல் வெளியே வருபவர்கள் வைகுண்டத்தை அடையவேண்டும் என்னும் வரத்தை அவர்கள் இருவரும் கேட்டுப் பெற்றனர். இந்த நாளில், நமது நாட்டிலுள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கடந்து செல்ல கதவு போன்ற அமைப்பு அமைக்கப்படும். இது விஷ்ணுலோகத்திற்குள் அவர்கள் நுழைவதை குறிக்கிறது.

MOST READ: வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் கட்டுக்கடங்காத கோபமும் கட்டுப்படும் - காரணம் தெரியுமா?

விஷ்ணுவின் பெண் அவதாரம் முரான் என்ற அரக்கனைக் கொன்று கடவுள்களைப் பாதுகாத்தது என்று பத்ம புராணம் கூறுகிறது. தனுசு ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதத்தின் பதினொன்றாம் நாளில் இது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விஷ்ணு அப்பெண் அவதாரத்தின் செயலால் ஈர்க்கப்பட்டு அவளுக்கு 'ஏகாதசி' என்று பெயரிட்டார். மேலும் அவர் முரான் அசுரனைக் கொன்ற நாளில் 'ஏகாதசியை' வணங்குபவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள் என்றும் கூறினார்.

MOST READ: மேஷம் செல்லும் செவ்வாயால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

வைகுண்ட ஏகாதசி நாள் இந்துக்களுக்கு மிகவும் புனிதமானது. இது தமிழ் மாதமான மார்கழியில் (டிசம்பர்-ஜனவரி) நிகழ்கிறது. இந்நாளில் பெருமாளை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி மோட்சம் கிட்டுவதோடு, வைகுண்டதிலேயே இடம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

MOST READ: எச்சரிக்கை! ஆரோக்கியமான நோயாளிகளும் அனுபவிக்கும் கொரோனாவின் சில அசாதாரண அறிகுறிகள்!

இந்த புனித நாளில், விஷ்ணுவின் அருளை பெற உதவும் ஐந்து செயல்களை நீங்கள் செய்யலாம். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரியுங்கள்

ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரியுங்கள்

இந்த சிறப்பு நாளில் குறைந்தது 108 முறை ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரியுங்கள்.

"ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ராம ஹரே ஹரே"

நாம் இப்போது கலியுகத்தில் வாழ்கிறோம். இந்த காலகட்டத்தில் ஆன்மீக உணர்வை அடைய எளிதான வழி, வேத உபநிடதங்கள் பரிந்துரைத்தபடி பெருமாளின் திவ்ய நாமத்தை உச்சரிப்பதே. கலிசாந்தார உபநிஷத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த யுகத்தில், ஹரே கிருஷ்ணா என்று உச்சரிப்பதை விட விழுமியமான எதுவும் இருக்க முடியாது என்றும் அது கூறுகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நம் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவதோடு, நாம் எதிர்கொள்ளும் எல்லா துயரங்களிலிருந்தும் விடுதலையைப் பெற முடியும். மேலும் பரிபூரணமாக ஆன்மீகத்தில் ஈடுபடவும் இது உதவுகிறது.

பகவத் கீதையைப் படியுங்கள்

பகவத் கீதையைப் படியுங்கள்

வழக்கமாக, கீதை ஜெயந்தி வைகுண்ட ஏகாதசி நாளில் நிகழ்கிறது. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் பகவத் கீதை என்று அழைக்கப்படும் ஆன்மீக அறிவை வழங்கிய நாள் இது. எனவே, இந்த சிறப்பு நாளில் பகவத் கீதையைப் படிப்பது மிகவும் பரிந்துரைக்கப்பட்ட ஆன்மீக செயலாகும்.

இரண்டு வகையான இலக்கியங்கள் கிருஷ்ணரை மகிமைப்படுத்துகின்றன. ஒன்று தெய்வத்தின் மகிமைகளைப் பற்றி பேசுகிறது, மற்றொன்று கிருஷ்ணரால் அருளப்பட்டது. கீதை கிருஷ்ணரால் அருளப்பட்டதால், இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. கீதையைப் படிப்பதே கிருஷ்ணருடன் இணைவது தான். எனவே இந்த நாளில் கீதையின் வசனங்களைப் படிப்பது சிறந்தது.

பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்

பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்

வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் ஒரு விஷ்ணு அல்லது கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று ஏகாதசி கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம். விஷ்ணுவின் வேறு எந்த அவதாரத்தையும் வணங்கலாம்.

பல விஷ்ணு கோயில்களில், சொர்க்க வாசல் என்ற நுழைவாயில் இருக்கும். இது இந்நாளில் அழகு படுத்தி அமைக்கப்படும். இந்நாளில் இந்த கதவு வழியாக வருபவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள். உங்கள் வீட்டில் விஷ்ணு, கிருஷ்ணர் அல்லது அவரது வேறு ஏதேனும் அவதாரங்களின் (ராமர், நரசிம்மர் போன்றவை) சிலைகள் இருந்தால், உங்கள் குடும்பத்தினருடன் ஒரு சிறப்பு பூஜை செய்யலாம்.

விரதம் அல்லது உபவாசம் இருங்கள்

விரதம் அல்லது உபவாசம் இருங்கள்

பல இந்துக்கள் ஏகாதசி நாட்களில் விரதத்தை அல்லது உபவாசத்தை கடைப்பிடிப்பது வழக்கம். எனவே, வைகுண்ட ஏகாதசி நாளில் பக்தர்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். உண்ணாவிரதம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. மற்றும் உடல் செயல்பாடுகளை சுத்திகரிப்பதோடு பிற ஆன்மீக நன்மைகளையும் கொண்டுள்ளது.

ஒருவர் வெவ்வேறு நிலைகளில் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்கலாம். உதாரணமாக, இந்த நாளில் சிலர் எதையும் சாப்பிடுவதில்லை, இது ஒரு முழுமையான விரதம். மற்றவர்கள் பழங்களை சாப்பிடலாம் அல்லது திரவ உணவை உட்கொள்ளலாம், இது ஒரு பகுதி விரதம். அவர்கள் பழங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் அல்லது பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். அரிசி, வெங்காயம், பூண்டு, பீன்ஸ் போன்ற சில உணவுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. சிலர் வில்வ மர இலைகளையும் உண்ணுவார்கள்

விஷ்ணு சகஸ்ரநாமத்தை உச்சரியுங்கள்

விஷ்ணு சகஸ்ரநாமத்தை உச்சரியுங்கள்

விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்கான மற்றொரு வழி விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிப்பது. இது ஒரு சமஸ்கிருத பாடலாகும், இது விஷ்ணுவின் 1000 பெயர்களைக் கொண்டுள்ளது. இது விஷ்ணுவின் பெருமைகளைக் குறிப்பிட்டு புகழ்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vaikunta Ekadasi 2023: Five Things You Must Do On Vaikunta Ekadasi

Vaikunta Ekadasi 2023: What to do on vaikunta ekadasi? Here we listed 5 things you must do on vaikunta ekadasi. Read on to know more...
Desktop Bottom Promotion