For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ரேகை கையில் இருப்பவர்கள் உலகை வெல்லும் சக்தி பெற்றவர்களாம்... உங்க கையில இருக்கா இந்த ரேகை?

நமது உள்ளங்கையில் இருக்கும் ஒவொரு வரியும், ரேகையும் நமது அதிர்ஷ்டம் மற்றும் எதிர்கால கணிப்புகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

|

நமது எதிர்காலம் குறித்த அனைத்து குறிப்புகளும் நமது கைகளிலேயே உள்ளது. நம்முடைய கரம் நமக்கு விதிக்கப்பட்டவற்றின் உண்மையான பிரதிபலிப்பாகும். நம் உள்ளங்கையில் உள்ள வரிகள் நம் ஆளுமை, நமது குணங்கள், ஆரோக்கியம் மற்றும் பணம் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது.

Fame Line in Palmistry

நமது உள்ளங்கையில் இருக்கும் ஒவொரு வரியும், ரேகையும் நமது அதிர்ஷ்டம் மற்றும் எதிர்கால கணிப்புகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. உங்கள் கையில் உள்ள புகழ் வரி உங்களை பிரபலமாகவும், செல்வந்தராகவும் மாற்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்கள் கனவுகள், கற்பனைகள் மற்றும் நிறைவேறாத ஆசைகளைப் பற்றி நிறைய வெளிப்படுத்துகிறது. புகழ் ரேகை பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலிமையான புகழ் ரேகை

வலிமையான புகழ் ரேகை

புகழ் ரேகை உங்களுக்கு புகழையும், செல்வத்தையும் ஆசீர்வதிப்பதாக அறியப்படுகிறது. புகழ் ரேகையின் இருப்பு உங்களின் விதி ரேகைக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. ஒரு நபருக்கு சீரான அல்லது இடைவெளியுடன் கூடிய விதி ரேகை இருந்தால், ஒரு வலுவான புகழ் வரி எப்போதும் அதற்கு ஈடுசெய்யும்.

புகழ் ரேகை அறிகுறிகள்

புகழ் ரேகை அறிகுறிகள்

புகழ் ரேகை நிலா கோட்டிலிருந்து தொடங்கி மோதிர விரலுக்கு கீழ் சென்று முடிகின்றது. புகழ் ரேகை இல்லாதவர்கள் வாழ்க்கையில் எந்த சிறப்பும் இன்றி மிகவும் சாதாரணமான முறையில் வாழ்கின்றனர். வழக்கமாக விதி கோடு ஒரு நபரின் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது, ஆனால் இந்த ரேகை இல்லாமல் கூட ஒருவர் சீரான, இடைவெளி இல்லாத புகழ் ரேகையை கொண்டிருந்தால் அவர்கள் உலகத்தையே ஆளலாம்.

புகழ் ரேகையில் நட்சத்திரம்

புகழ் ரேகையில் நட்சத்திரம்

புகழ் ரேகையில் நட்சத்திரம் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இது ஒருவரிடம் இருக்கும் நேர்மறை ஆற்றலைக் குறிக்கிறது. இது குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்கள் அடையப்போகும் பெருமையின் அறிகுறியாகும். உங்கள் விதி ரேகையில் இருக்கும் இடைவெளிகள் உங்களின் மனசோர்வை குறிக்கும், இதில் இருக்கும் புள்ளிகள் உங்கள் புகழ் மீது மற்றவர்கள் படும் பொறாமையைக் குறிக்கிறது.

MOST READ: இந்த தீபாவளி மறக்க முடியாத தீபாவளியா இருக்க உங்க ராசிப்படி நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

படைப்பாற்றல்

படைப்பாற்றல்

நீங்கள் புகழ் ரேகை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள் அதிக படைப்பாற்றல் கொண்டவராக இருப்பீர்கள். கலை, எழுத்து, இசை என ஏதாவது ஒன்றில் புகழ் உங்களை வந்து சேரும். இந்த வரி அனைத்து படைப்புக் கலைகள் மற்றும் அழகிய விஷயங்கள் மீதான ஈர்ப்பை காட்டுகிறது.

தோன்றும் காலம்

தோன்றும் காலம்

பலரின் கைகளில் இந்த ரேகைகள் பாதி காலம் வரை தோன்றாது. இதன் அர்த்தம் என்னவெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமும், புகழும் அவர்களின் பாதி வாழ்க்கைக்கு பிறகுதான் கிடைக்கும். இந்த ரேகை இருப்பவர்கள் தான் சார்ந்த துறைகளில் ராஜாவாக இருப்பார்கள். இந்த ரேகை மட்டுமின்றி உங்கள் கையில் இருக்கும் மற்ற ரேகைகளும் உங்களைப் பற்றிய பல ரகசியங்களைக் கூறும்.

இடது கையும், கைரேகையும்

இடது கையும், கைரேகையும்

உங்களின் உண்மையான குணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி உங்களின் இடது கை நிறைய கூறும். நமது தனிப்பட்ட கனவுகளிலும், உள் உலகத்திலும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதைக் காட்டும் அடையாளங்களை இடது கை வைத்திருக்கிறது. இடது கையை உபயோகிப்பவர்கள் எப்போதும் மிகவும் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள்.

விதி ரேகை

விதி ரேகை

விதி ரேகை கையின் அடிப்பகுதியில் தொடங்கி, பொதுவாக கீழ் விளிம்பின் மையத்தில், மற்றும் நடுவிரலின் அருகே நீண்டுள்ளது. இதுபோன்ற மையமாக வைக்கப்பட்டுள்ள விதியைக் குறிக்கும் ஒரு நபர், தொழில் தேவைக்கும், சுயநிறைவுக்கான தேவைக்கும் இடையில் சமநிலைப்படுத்தப்பட்ட ஒரு நபரைக் காட்டுகிறது.

MOST READ: உங்க எலும்பு பலவீனமா இருக்க காரணம் உங்களோட இந்த தினசரி பழக்கம்தானாம் தெரியுமா?

பண ரேகை

பண ரேகை

கைரேகையில் நான்கு முக்கிய கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன - இதயக் கோடு, தலைக்கோடு, விதி கோடு, மற்றும் ஆயுள் கோடு. பணக் கோடு இந்த நான்கு முக்கிய வரிகளில் ஒன்றல்ல, ஆனால் அது அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் இந்த பண ரேகை இருந்துவிடாது. அப்படி இருக்கும் போது அது இருக்கும் நிலை, இடம் ஆகியவற்றைப் பொறுத்து அவர்களின் நிதிநிலை நிர்ணயிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fame Line in Palmistry: A Line That Bestows You With Fame And Prosperity

Read to know about the famous line in palmistry, which brings fame and prosperity.
Story first published: Wednesday, October 23, 2019, 16:34 [IST]
Desktop Bottom Promotion