Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தீபாவளி 2020: செல்வம் பெருக லட்சுமி பூஜையை எப்போது செய்ய வேண்டும்?
தீபாவளி பண்டிகை மிகவும் பிரபலமான இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். தமிழகத்தில் சில ஆண்டுகள் ஐப்பசி அமாவாசைக்கு முன் நரக சதுர்த்தசி அன்றும், பல ஆண்டுகள் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்றும் கொண்டாடப்படுகிறது.
2020 தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகை தீப ஒளித் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் தீபாவளி இந்து காலண்டரின் படி, அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து, நவம்பர் நடுப்பகுதிக்குள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது வாழ்வின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் ஒரு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை மிகவும் பிரபலமான இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகையானது இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. மேலும் சில நாட்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகள் ஐப்பசி அமாவாசைக்கு முன்தினம் நரக சதுர்த்தசி தினத்தன்றும், பல ஆண்டுகள் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்றும் கொண்டாடப்படுகிறது. இப்போது 2020 தீபாவளியின் தேதி, பூஜை நேரம், சுபமுகூர்த்தம் மற்றும் முக்கியத்துவம் குறித்து காண்போம்.

பிரதோஷ கால முகூர்த்தம்
தீபாவளி தேதி : சனி, நவம்பர் 14, 2020
லட்சுமி பூஜைக்கான முகூர்த்தம் : மாலை 5.28 மணி முதல் இரவு 7.24 மணி வரை
பிரதோஷ காலம் : மாலை 5.28 மணி முதல் இரவு 8.07 மணி வரை
விருஷப காலம் : மாலை 5.28 மணி முதல் இரவு 7.24 மணி வரை
அமாவாசை திதி ஆரம்பம் : நவம்பர் 14, 2020, மதியம் 2.17 மணி முதல்
அமாவாசை திதி முடிவு : நவம்பர் 15, 2020, காலை 10.36 மணி வரை

நிஷித கால முகூர்த்தம்
லட்சுமி பூஜை முகூர்த்தம் : நவம்பவர் 15, இரவு 11.59 மணி முதல் அதிகாலை 12.32 மணி வரை
மனிஷித காலம் : நவம்பர் 15, இரவு 11.39 மணி முதல் அதிகாலை 12.32 மணி வரை
சிம்ம காலம் : நவம்பர் 15, இரவு 11.59 மணி முதல் அதிகாலை 2.16 மணி வரை
அமாவாசை திதி ஆரம்பம் : நவம்பர் 14, 2020, மதியம் 2.17 மணி முதல்
அமாவாசை திதி முடிவு : நவம்பர் 15, 2020, காலை 10.36 மணி வரை

சோகடியா பூஜை முகூர்த்தம்
தீபாவளி லட்சுமி பூஜைக்கான சோகடியா முகூர்த்தம்:
மதிய முகூர்த்தம் (சோரம், லாபம், அமிர்தம்) - மதியம் 2.17 மணி முதல் மாலை 4.07 மணி வரை
மாலை முகூர்த்தம் (லாபம்) - மாலை 5.28 மணி முதல் இரவு 7.07 மணி வரை
இரவு முகூர்த்தம் (சுகம், அமிர்தம், சோரம்) - நவம்பர் 15, இரவு 8.47 மணி முதல் அதிகாலை 1.45 மணி வரை
அதிகாலை முகூர்த்தம் (லாபம்) - நவம்பர் 15, அதிகாலை 5.04 மணி முதல் காலை 6.44 மணி வரை

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
தீப ஒளித் திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை அன்று, மக்கள் செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வான லட்சுமி தேவியை வணங்குவார்கள். நாட்டின் சில பகுதிகளில், ராவணனை தோற்கடித்து விட்டு தனது ராஜ்ஜியமான அயோத்திக்கு திரும்பிய நாள் என்று கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கு முன்...
தீபாவளிக்கு முன்பு, மக்கள் வீட்டை சுத்தம் செய்வார்கள். சிலர் புத்துப்பிக்கும் பணியையும் செய்வார்கள். இன்னும் சிலர் அழகாக வீடு மற்றும் வேலை செய்யும் இடத்தையும் அலங்கரித்து, விளக்குகள், ரங்கோலி மற்றும் பூக்களால் அலங்கரிப்பார்கள். அதோடு தீபாவளிக்கு முன்னதாக புத்தாடைகளை வாங்குவார்கள் மற்றும் இனிப்புக்களை வீட்டில் செய்வார்கள். பின் தீபாவளி தினத்தன்று மாலையில், விளக்குகளை ஏற்றி, லட்சுமி தேவியை வணங்குவார்கள்.



Click it and Unblock the Notifications