For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி 2019: தடைகள் நீக்கும் எமதீபம் - என்னென்ன பலன்கள் தெரியுமா?

|

தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடித்து புத்தாடை உடுத்தி கொண்டாடுகிறோம். மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்வோம். தீபாவாளிக்கு முதல் நாளில் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. இந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

மாஹாளய பட்ச காலத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களுக்கு திதி கொடுப்போம். மாஹாளய அமாவாசை நாம் திதி கொடுத்து வணங்குவோம். அப்படி வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவாராம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

Diwali

எம தர்ம ராஜா என்று கிராமங்களில் வயதானவர்கள் சொல்வார்கள். அவர் நீதிமான். ஏழை, பணக்காரன், வயதானவர், குழந்தை என்றெல்லாம் பார்க்க மாட்டார் அவரது கணக்கு புத்தகத்தில் ஆயுள் முடிந்தவர்களை அசால்டாக அழைத்துக்கொண்டு போய்விடுவார். அவரது நீதிமன்றத்தில் பாரபட்சமே கிடையாது தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். சூரிய மைந்தன் எமன் அவரது இன்னொரு புத்திரன் சனி இருவருமே நீதிமான்களாக இருக்கிறார்கள். இன்றைய சினிமாக்களில் எமனை பல்வேறு உருவங்களில் காட்டுகிறார்கள். எருமை வாகனத்தில் ஏறி கையில் பாசக்கயிரை வைத்து உயிரை பறிக்க வருவார் எமன் என்பது போல சித்தரிக்கின்றனர். எமன் சூரியன் புத்திரன். எமனின் பூர்வீகம் பற்றியும் எம தீபம் ஏற்றும் முறைகளையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மர்க்கண்டேய புராணத்தில் சூரியன்

மர்க்கண்டேய புராணத்தில் சூரியன்

மார்க்கண்டேய புராணத்தில் சூரியன் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு தமது உந்திக் கமலத்தில் இருந்து பிரம்மாவைப் படைத்தார். அவரது ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத்தார். அவை அனைத்தும் இருள் மயமாக இருந்தது. அந்த இருளைப் போக்க ஓம் என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு. அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியுடன் சூரியன் தோன்றினார் என்று சொல்லப்பட்டுள்ளது.

MOST READ: சுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...

சூரிய புராணம்

சூரிய புராணம்

பிரம்மா தன் படைப்புத் தொழிலை விரிவுப்படுத்த சப்தரிஷிகளை உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரியதேவன் என்பது மற்றொரு கதை. சூரிய புராணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளது.

பேரொளியாக உருவான சூரியன்

பேரொளியாக உருவான சூரியன்

காசியபமுனிவர் தன் மனைவி அதிதியுடன் கானகத்தில் வாழ்ந்து வந்தபோது அங்கு வந்த அந்தணர் ஒருவர் யாசகம் கேட்க நிறைக் கர்ப்பிணியான அதிதி மெதுவாக வந்ததால் கோபமடைந்த அந்தணர் கோபம் கொண்டு கர்ப்பம் காக்க மெதுவாக வந்தாய் அந்த கர்ப்பத்தில் இருக்கும் கரு கலையட்டும் என சாபமிட்டார் இதை அறிந்த காசியபர் சிவனை நோக்கி யாகம் வளர்த்தார். அதன் பலனாக மிகுந்த தேஜஸுடன் சிவபெருமான் அருளாசியுடன் பெரிய அண்டம் உண்டானது. பல நாட்கள் ஆன பின்னும் எந்த உயிரும் தோன்றவில்லை. முட்டை கெட்டுவிட்டது என அதிதி காசியபரிடம் சொல்ல முட்டை-அண்டம் இறக்கவில்லை மிருதா என்றார் காசியபர். அவரின் வாக்கு சத்யவாக்கு. முட்டையை உடைத்துக் கொண்டு உயிர் ஜனித்தது. மிருத்தா, அண்டம் என்ற இரு வார்த்தைகளை அடக்கி மார்த்தாண்டன் எனப் பெயர் வைத்தார். இந்த மார்த்தாண்டனே சூரியன். உயிர் ஜனித்த அந்த நாளே சப்தமி.

எமன் - சனி

எமன் - சனி

சூரியன் மனைவி - உஷா, பிரத்யுஷா. சூரியன் விஸ்வகர்மா புதல்வி ஸுர்வர்சலாவை திருமணம் செய்தார் அவர்களுக்கு வைவஸ்தாமனு என்ற ஞான வடிவமான குழந்தையும் எமன் என்ற தர்ம வடிவமான என இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். யமி அல்லது யமுனா என்ற நீர் வடிவமான புதல்வி பிறந்தார். கணவனின் சூடு தாங்க முடியாமல் தன் நிழலிருந்து பிரதி உஷாவை அதாவது சாயாதேவியை உருவாக்கி கணவனுக்கு மணமுடிக்க சனி, சாவர்ணுமனு, தபதி, விஷ்டி என்று நான்கு குழந்தைகள் பிறந்தனர். இவர்களின் சனிதான் ஈஸ்வரனை நோக்கி தவமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றார்.

ஆயுள்காரகன் சனிபகவான்

ஆயுள்காரகன் சனிபகவான்

ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவீன் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும்ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான எமனும்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. ஜோதிடத்தில் எட்டாம் வீட்டை ஆயுள் ஸ்தானம் என்றும் சனைஸ்வர பகவானை ஆயுள் காரகன் என்றும் குறிப்பிடுவார்கள். எட்டாம் வீட்டில் சனீஸ்வரர் நின்றுவிட்டால் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளை பெற்றிடுவார். சனீஸ்வரர் மட்டுமே காரஹோபாவ நாஸ்தி எனும் தோஷத்திலிருந்து விலக்கு பெறுகிறார். சரி இனி எமதீபம் ஏற்றுவதன் மகிமையை அறியலாம்.

எம தீபம்

எம தீபம்

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவாராம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

MOST READ: சொந்த வீடு வேணும் கடன் வாங்க கூடாது... - செவ்வாய்கிழமையில் இதை பண்ணுங்க

யார் ஏற்றலாம்

யார் ஏற்றலாம்

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று தன திரயோதசி நாளில் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

பரணி, மகம், சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவவர்கள் எம தீபம் ஏற்றுவது சிறப்பு. பரணி நட்சத்திரத்திற்கு எமன் அதிபதி. மகம் நட்சத்திரத்திற்கு பித்ருக்களை அதிதேவதையாக கூறியுள்ளனர். வருஷாதி நூல்களில் சதயத்திற்கு எமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது.

சனி பகவான் நீசம்

சனி பகவான் நீசம்

எமனை அதிதேவதையாக கொண்ட சனீஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள். ஆயுள் ஸ்தானத்தில் சனீஸ்வர பகவான் நீசம் அல்லது பலமிழந்தவர்கள் எம தீபம் ஏற்றலாம். சூரியனும் சனீவரரும் சேர்க்கை பெற்றவர்கள். ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்டவர்கள். எம தீபம ஏற்றுவது சிறப்பு

யமுனை நதிக்கரையில் தீபம்

யமுனை நதிக்கரையில் தீபம்

அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம். அனைத்து சனி பரிகார ஸ்தலங்களிலும் அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளிலும் எம தீபம் ஏற்றலாம். எமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில் ஏற்றலாம். அனைத்து காலபைரவர் சன்னதிகளிலும் ஏற்றலாம்.

எமன் சன்னதி

எமன் சன்னதி

மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் க்ஷேத்ரபாலகராக அமைந்து தனி சன்னதி பெற்ற யமதர்மராஜன் சன்னதி. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள்புரிவதற்காக எமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதியில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றலாம். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து எமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய எமன் சன்னதியில் ஏற்றலாம்.

எட்டு தீபங்கள்

எட்டு தீபங்கள்

எம தீபம் குறிப்பாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. எவரேனும் மரணமடைந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது. யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.

முன்னோர்களை நினைப்பது அவசியம்

முன்னோர்களை நினைப்பது அவசியம்

உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் மனதால் நினைத்து வணங்க வேண்டும்.

MOST READ: அக்டோபர் மாத ராசி பலன்கள் - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பரிகாரங்கள்

ஆரோக்கியம் ஏற்படும்

ஆரோக்கியம் ஏற்படும்

தீபம் ஏற்றி வைத்து பின்னர்

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

என்ற ஸ்லோகம் சொல்லி வணங்கினால் முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவாராம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: diwali தீபாவளி
English summary

Diwali 2019: Yama Deepam Importance And Benefits

Yama Deepam on Saturday, October 26, 2019 Yama Deepam Sayan Sandhya 05:41 PM to 06:58 PM. A Deepak, for the God of death Yamaraj, is lit outside home on Trayodashi Tithi during Diwali to ward off any untimely death of any family members. This ritual is known as Deepdan for Yamraj. The Deepam is lit outside home during Sandhya time. It is believed that Deepdam pleases Lord Yama and He protects family members from any accidental death.
Story first published: Thursday, October 17, 2019, 15:29 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more