Latest Updates
-
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
December Horoscope 2022: டிசம்பர் மாதம் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப் போகுது!
உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் டிசம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நுழையவுள்ளோம். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் டிசம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் டிசம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என டிசம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2022 டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு நற்பலனைத் தரும். குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பேசும் போது உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். இம்மாதத்தில் உறவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தின் தொடக்கம் சாதகமான பலன்களைத் தரும். வியாபாரிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இம்மாதத்தில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அது சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக இது குடும்பத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். நிதி பிரச்சனைகள் அதிகம் இருக்கும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் அமையும். செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுக்கு நன்கு பழகினால், உங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். உயர்கல்விக்கு ஏற்ற காலம். வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். பெரும்பாலும் இந்த பிரச்சனைகள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் பெரும்பாலும் வேலையில் குறுக்கு வழிகளை கண்டுபிடிப்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இம்மாதத்தில் ஆர்வத்துடன் காரியங்களை செய்ய முயற்சிப்பீர்கள். நிதி விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பணம் அதிகம் செலவாகும். இருப்பினும் நிதி நிலை ஓரளவு சீராக இருக்கும். காதல் விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரும். இதனால் மன அமைதி சீர்குலையும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகள் வரலாம். தாம்பய வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் செலவுகளின் மீது கண் வைத்திருக்க வேண்டும். வேலை தொடர்பாக வாழ்க்கைத் துணையுடன் அடிக்கடி சண்டை வரக்கூடும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலையை நீங்கள் அதிகம் நேசிப்பீர்கள். மாணவர்களுக்கு இது சாதகமான மாதமாக இருக்கும். பல வழிகளில இருந்து பணம் வர வாய்ப்புள்ளது. உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். பொருளாதார ரீதியாக சில சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் வேலையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மொத்தத்தில் டிசம்பர் மாதம் வெற்றிகரமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் பல சுப காரியங்கள் நடக்கும். ஆனால் துணையுடன் சிறுசிறு சச்சரவுகளும் பிரச்சனைகளும் வர வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். இருப்பினும் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். திருமண விஷயத்தில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திருமண வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களுக்கு அதிக சவால்களை கொடுக்கும். மாணவர்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ, உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். அதிகம் கோபம் கொள்ளாதீர்கள். செலவுகள் இருந்தாலும், வருமானம் அதிகரிப்பதில் எவ்விர பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே! டிசம்பர் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்காது. வேலையில் தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலும் வேலையைத் தொடர்வதில் சில சிரமங்கள் இருக்கும். வாழ்க்கைத் துணையின் மீது அன்பு அதிகரிக்கும். இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாக இம்மாதம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! டிசம்பர் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் வேலையில் சிறுசிறு பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். புதிய பணிகளால் பணிச்சுமை கூடும். துணையுடன் உறவில் சிறுசிறு பிரச்சனைகள் அதிகரிக்கும். செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! டிசம்பர் மாதத்தில் வேலை மாற்றம் அல்லது இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். அனைத்து பணிகளையும் குறித்த நேரத்தில் முடிக்க முடியும். பெரிய நிதி சிக்கல்களை அனுபவிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் இம்மாதத்தில் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications