For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு இந்த ராசிக்காரங்க தண்ணி சம்பந்தப்பட்ட விஷயத்துல ஜாக்கிரதையா இருங்க...

By Mahibala
|

நம்மில் பலருக்கும் ஒரு நாளைத் துவங்குகிற பொழுது, இன்றைக்கு முழுவதும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே தினமும் எழுந்தவுடன் அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குகிறோம்.

horoscope

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். வாக்கு வன்மையால் தொழில் வகை லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை என்பது மேற்காகவும், அதிர்ஷ்ட எண்ணாக 6 ம், அதிர்ஷ்ட நிறம் சந்தன வெள்ளை நிறமாகவும் அமையப் போகிறது.

MOST READ: முடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா?... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது?

ரிஷபம்

ரிஷபம்

மனதில் புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். கணவன்,மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்கள் மேற்கொள்ளும் போது கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கப் போகிறது.

மிதுனம்

மிதுனம்

நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பூா்விக சொத்துகள் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

பிரபலங்களினுடைய அமோக ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். வீண் அலைச்சல்களின் காரணமாக, உடல் மற்றும் மனச்சோர்வு உண்டாகும். விவாதங்களில் உங்களில் முழு திறமையால் வெற்றி பெறுவீர்கள். ஈடுபடும் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். முக்கியப் பொறுப்பான வேலையில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களால் உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

வீட்டில் உள்ளவர்களுக்காக ஆடை மற்றம் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தினால் தொழிலில் லாபம் உண்டாகும். பணியில் புதிய நபர்களை சந்திப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 4 ம், அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக கிழக்கும் அதிர்ஷ்டத்துக்குரிய நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். மனை வாங்குவதற்கு சதகமான சூழல் அமையும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் மூலம் முன்னேற்றத்திற்கான சூழல் அமையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்புமாகவும் இருக்கப் போகிறது.

MOST READ: இந்த பொண்ணோட காதுக்குள்ள எவ்ளோ பெரிய உண்ணி போயிருக்கு பாருங்க... பார்க்கவே ஒருமாதிரி இருக்கா?...

துலாம்

துலாம்

சுயதொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் மேலோங்கி வெற்றி பெறும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளின் மூலமாக லாபம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

குடும்பத்தில் இன்று மிகவும் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு பெருகும். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனால் லாபம் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பெரிய ஆன்மீக மகான்களின் தரிசனம் கிடைக்கும். பெற்றோருடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண் ணாக 8 ம் அதிர்ஷ்ட நிறமாக கருப்பு நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களினால் சுப விரயம் உண்டாகும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயில்பவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். வெளிநாட்டு தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

மகரம்

மகரம்

இன்று எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் கொஞ்சம் இழுபறியாகவே இருக்கும். ஆனாலும் இதற்கு முன் நீங்கள் பார்த்த வேலையின் வெற்றியால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் தொழில் பங்கு தாரர்களின் உதவியினால் புதிய புதிய வாய்ப்புகள் உருவாகும். கடன் தொல்லைகள் உண்டாகும். சரியான நேரத்தில் கடனைத் திருப்பித்தர முடியாததால் பிறரின் மன வருத்தத்துக்கு ஆளாவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக இள நீலம் நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்திருந்த விஷயங்களில் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கப் போகிறது.

MOST READ: புற்றுநோய்க்கட்டி எப்படி உருவாகுதுனு தெரியுமா?... இத பார்த்து தெரிஞ்சிக்கங்க...

மீனம்

மீனம்

இதுவரையில் உங்களுடைய திருமண விஷயங்களில் இருந்து வந்த சின்ன சின்ன இழுபறியும் தடைகளும் நீங்கி, சாதகமான நிலை உண்டாகும். வீடு மற்றும் மனைகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் தீர்ந்து போகும். நீங்கள் நினைத்த காரியங்களை வீட்டில் உள்ள பெரியோர்களின் முழு ஆதரவினால் தடையின்றி சிறப்பாக முடிந்து போகும். இன்று உங்களுக்கு

அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 2 ம், அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily horoscope for august 5th 2019 monday

Each horoscope article on the Boldsky astrology section will cover all aspects of your life, right from career, personal life, finances, health to even travel and education. While the daily horoscopes will provide you with all the information you need to know ahead of your day. It will also help you take business or job-related decisions. see your Daily Horoscope For august 3rd 2019 saturday.
Story first published: Monday, August 5, 2019, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more