Latest Updates
-
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
இந்த ராசிக்காரங்களுக்கு கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டப்போகுதாம்...
இன்றைய தினம் ஏதாவது லக் அடிக்குமா? ஏதாவது அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு பரிசு கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் இன்றைய ராசிப
இன்றைய தினம் ஏதாவது லக் அடிக்குமா? ஏதாவது அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு பரிசு கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள். உங்கள் அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

மேஷம்
இன்னிக்கு உங்களுக்கு பண வரத்து அமோகமா இருக்கும்கிறதுனால, குடும்பத்தோட ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. கூடப்பொறந்தவங்களும் உங்களுக்கு ரொம்பவே ஒத்தாசை பண்ணுவாங்க. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க சிலருக்கு திடீர்னு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்க வாய்ப்பிருக்கு. இருந்தாலும் கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல யோசிச்சி முடிவெடுங்க. ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிடுங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.30 மணி இரவு 9.15 மணி

ரிஷபம்
இன்னிக்கு பிள்ளைங்க மூலமா நல்ல விஷயங்கள் நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு. கூடவே குடும்பத்துலயும் ரொம்பவே சந்தோஷம் கொடுக்கக்கூடிய சுப நிகழ்ச்சிங்களும் நடக்கலாம். நிச்சயதார்த்தம், கல்யாண பேச்சு வார்த்தைங்கள்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். விலை கூடுன பொருள்களை வாங்கிடுவீங்க. பிசினஸ்லயும் நீங்க எதிர்பாத்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி - இரவு 9 மணி

மிதுனம்
இன்னிக்கு பிள்ளைங்களால ஏற்பட்ட மனஸ்தாபங்கள் காணாம போயிடும். ஆஃபீஸ் உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் போறதா இருந்தா இந்த சமயத்துல அதை ஒத்திப்போடுறது நல்லது. பார்ட்னரோட சேர்ந்து பிசினஸ் பண்றவங்க புரிஞ்சி நடந்துகிட்டா லாபம் கொட்டும். நீங்க நெனைச்சதும் நடந்துடும். உங்க குடும்பத்துலயும் அமைதியான சூழ்நிலையே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.45 மணி முதல் மாலை 5.20 மணி வரை

கடகம்
இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க கூட சின்னதா மனஸ்தாபம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. பிசினஸ் சம்பந்தமா பேங்க் லோன் முயற்சி பண்றவங்களுக்கு லோன் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. செய்யுற வேலையில தடை தாமதம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னதா பாதிப்பு உண்டாகலாம், எச்சரிக்கையா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 19
அதிர்ஷ்ட நேரம் : காலை 4.50 மணி முதல் பிற்பகல் 1.15 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு குடும்பத்துலு செலவுங்க கம்மியா தான் இருக்கும். கடன் பிரச்சனையும் காணாம போயிடும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன் அற்புதமா இருக்கும். இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிங்கள்ல கண்டிப்பா வெற்றி கிடைக்கும். சொந்தக்காரங்களோட இருந்து வந்த மனஸ்தாபம் காணாம போயி சந்தோஷம் வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1 மணி மாலை 5 மணி

கன்னி
இன்னிக்கு நீங்க எடுக்குற சுபகாரிய முயற்சிங்கள்ல இடைஞ்சல், தடங்கல் வந்து சங்கடத்தை கொடுக்கலாம். அதோட பணப் பிரச்சனையினால குடும்பத்துலயும சின்ன சின்னதா பிரச்சனைங்க தலை தூக்கிடும். வெளியில எதிர்பாத்துட்டு இருந்து உதவி, ஒத்தாசை கிடைக்காம போறதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க. பிசினஸ்ல இருந்துவந்த எதிர்ப்புங்களும் காணாம போயிடும். சொந்தக்காரங்களோட ஒத்தாசையால பணக் கஷ்டம் காணாம போயிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண்: 42
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.45 மணி முதல் மாலை 5.20 மணி வரை

துலாம்
இன்னிக்கு பூர்வீக சொத்து சம்பந்தமா இருந்துவந்த சிக்கல்கள் காணாம போயிடும். நீங்க நெனைச்ச காரியத்தை நல்லவிதமா செஞ்சி முடிச்சிடுவீங்க. கவர்மெண்ட் மூலமா எதிர்பாத்துட்டு இருந்த ஹெல்ப் ரொம்ப சுலபமா கிடைச்சிடும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்குற யோகம் இருக்கு. பிசினஸும் அமோகமா நடந்து லாபம் பெருகிடும். வருமானமும் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 21
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12 மணி இரவு 9 மணி

விருச்சிகம்
இன்னிக்கு எதுலயும் சிக்கனமா செலவழிக்குறது நல்லது. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து போன எல்லா பிரச்சனையும் சுலபமா முடிஞ்சிடும். இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா இன்னிக்கு நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. சொந்தக்காரங்களால அநாவசிய செலவுங்க வந்தாலும், பணவரத்தும் சுமாரா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.30 மணி பிற்பகல் 11 மணி

தனுசு
இன்னிக்கு பூர்வீக சொத்து சம்பந்தமா இருந்து வந்த சிக்கலுக்கு, ஃப்ரண்ட்ஸுங்க, சொந்தக்காரங்க மூலமா நல்ல செய்திங்க உங்க காதுக்கு வந்து சேரும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கி குவிச்சிடுவீங்க. ஆஃபீஸ் வேலை பாக்குறவங்களுக்கு வேலைச் சுமை குறைஞ்சிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு புதுசா அறிமுகமாகுற ஃப்ரண்டுனால புது அனுபவம் கிடைச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம் மாலை 5 மணி - இரவு 10 மணி

மகரம்
இன்னிக்கு நீங்களே எதிர்பாக்காம திடீர் பணவரவு வரப்போகுது அதை வச்சு வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிடுவீங்க. இன்னிக்கு எடுக்குற முயற்சிங்கள்ல வெற்றி கிடைச்சிடும். பிள்ளைங்க மூலமா இனிப்பான செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். ஃப்ரண்ட்ஸுங்க தர்ற ஐடியாவுனால பிசனஸ்ல லாபம் அமோகமா இருக்கும். சொந்தக்காரங்களும் உங்களுக்கு ரொம்பவே அனுசரனையா இருப்பாங்க.
ராசியான நிறம் : மெரூன்
ராசியான எண் : 2
ராசியான நேரம் : காலை 4.20 மணி பிற்பகல் 12.00 மணி

கும்பம்
இன்னிக்கு பெரிய மனுஷங்களோட சப்போர்ட் உங்களுக்கு கிடைச்சிடும். அதனால மனசுல இருந்து குழப்பமும் காணாம போயிடும். குடும்பத்துல எல்லோருமே ஒத்துமையா இருப்பாங்க. பிசினஸ் பண்றவங்க, கொடுக்கல் வாங்கல்ல ரொம்பவே நிதானிச்சி செய்யுறது நல்லது. இல்லேன்னா இழப்புதான் உண்டாகும். புதுசா எதுலயும் இண்வெஸ்ட் பண்றதை அவாய்ட் பண்ணிடுங்க. கடன் சுமையும் காணாம போயிடும். சொந்தக்காரங்களும் உங்களோட சூழ்நிலையை புரிஞ்சி ஒத்தாசை பண்ணுவாங்க. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
ராசியான நிறம் : ப்ளூ
ராசியான எண் : 10
ராசியான நேரம் : காலை 7.15 மணி பிற்பகல் 2.05 மணி

மீனம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்குறதுனால, எந்த வேலையையும் நிதானமா யோசிச்சி செய்யுறது நல்லது. உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்க கூட தேவையில்லாம வாக்குவாதம் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. வெளியூர் பிரயாணம் போறதை கொஞ்ச நாளைக்கு ஒத்தி போட்டுடுங்க. இன்னிக்கு உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுறதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம் மாலை 5 மணி - இரவு 10 மணி



Click it and Unblock the Notifications











