For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 3 ராசிக்காரர்களுக்கும் இன்று மிக மோசமான நாள்.. கொஞ்சம் உஷாரா இருங்க…

|

நமது வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வதும், மோசமானதாக ஆக்குவதும் அவரவர் கைகளில் தான் உள்ளது. சரியான திட்டமிடல் வாழ்க்கை சரியான பாதையில் அழைத்து செல்லும். நாம் தேர்ந்தெடுக்கும் பாதை சரியானது தானா என்பதை நமக்கு உணர்த்துவது தான் ஜாதகம். தொழில், வேலை, திருமணம் என அனைத்தையுமே ஜாதகத்தால் சரியாக கணிக்க முடியும். எனவே, நமது அன்றாட வாழ்க்கை கூட ராசிபலன்கள் மூலம் தாராளமாக தெரிந்து கொள்ளலாம். வாருங்கள், இன்றைய தினம் உங்களது ராசிக்கான பலனை இப்போது தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று அலுவலகத்தில் சிறிது பதற்றமான சூழல் நிலவும். பணிசுமை திடீரென அதிகரிக்கக்கூடும். உயர் அதிகாரிகளின் கடுமையான அணுகுமுறை தொந்தரவாக அமையும். குறிப்பாக, வேலை இல்லாதவர்கள் இன்று பெரிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும். வணிகர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. வீட்டில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். வாழ்க்கை துணையின் கடுமையான சொற்களால் வருத்தம் ஏற்படும். பெரிய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியத்தை பொருத்தவரை, ஏற்கனவே உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 10 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வேலை செய்யும் அலுவலகத்தில் பிறரை பற்றி புறம் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. நகைச்சுவையாக கூறிய ஒன்று பெரிய பிரச்சனையில் சென்று முடியலாம். செய்யும் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் அவசரப்பட வேண்டாம். கூட்டு தொழில் செய்வோருக்கும் நல்ல பலன் கிடைக்கும். பெற்றோரின் பாசமும், ஆசீர்வாதமும் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கை துணைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமிது. பண வரவு உண்டு. ஆரோக்கியம் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:10 மணி முதல் இரவு 9:50 மணி வரை

மிதுனம்

மிதுனம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையென்றால், எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டியதாகிவிடும். முக்கிய முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும். உங்கள் மனநிலை இன்று ஏற்றஇறக்கத்துடன் காணப்படும். சிறு விஷயங்கள் கூட உங்களை பெரிதும் பாதிக்கக்கூடும். இதுபோன்ற சூழல்களை தவிர்க்க பழகிக் கொள்ளுங்கள். அலுவலகத்தில், சிறு வேலையை கூட மிகவும் கவனமாக செய்து முடிக்க வேண்டிய நாள். சிறு தவறு கூட பெரும் விளைவை ஏற்படுத்திவிடும். பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புள்ளது. மனஅழுத்தத்தை குறைப்பதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 மணி முதல் மதியம் 12 மணி வரை

கடகம்

கடகம்

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையப்போகிறது. மன அமைதியை பெறுவதோடு, மனரீதியாக வலுவாக இருப்பீர்கள். இன்று சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், அவற்றை மிகவும் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்பங்கள் அதிகரிக்கும். வேலை பார்ப்பவர்கள் இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவர். வேலை தொடர்பாக சிறு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆடை வியாபாரிகள் நல்ல லாபத்தை ஈட்டுவர். சேமிப்பை தொடங்குவதற்கு இன்று நல்ல நாள். உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8:55 மணி வரை

சிம்மம்

சிம்மம்

வியாபாரிகள் சட்ட விஷயங்களில் சற்று விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். சிறு கவனக்குறையும் உங்களை பிரச்சனைகளில் சிக்க வைத்துவிடும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் முன்பு சத்தமாக பேசுவதை தவிர்த்திடவும். செய்யும் தவறை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஆணவத்தை தவிர்க்க வேண்டிய நாள். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

கன்னி

கன்னி

வேலை தேடி அலைபவர்களுக்கு இன்று விரக்தி மட்டுமே மிஞ்சும். இருந்தாலும், தைரியத்தை இழக்கத் தேவையில்லை. தொடர்ந்து முயற்சித்தால், அனைத்தும் சாதகமாக மாறக்கூடும். பங்கை சந்தை தொடர்பான வேலை பார்ப்பவர்களுக்கு, இன்றைய தினம் சிறப்பாக இருக்கும். பண வரவு மேலோங்கும். சேமிப்பை அதிகரிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் நிச்சயம் பயனடைவீர்கள். உங்களது பெற்றோருடனான உறவு சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் வீண் விவாதங்கள் உருவாகக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய தினம் சாதகமாக இருக்கும். நீங்கள் இன்று மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

துலாம்

துலாம்

இன்றைய தினம் சிறப்பான தொடக்கமாக இருக்கும், காலையிலேயே நல்ல செய்தி உங்களை தேடி வரும். மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி தொடர்பாக பெரிய விஷயங்களில் இன்று இறங்க வேண்டாம். அலுவலகத்தில் எந்தவொரு வேலையையும் அவசர அவசரமாக செய்து முடிக்க வேண்டாம். வீட்டின் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கை துணையுடனான அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, நேரத்திற்கு சாப்பிட தவறாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. வீட்டு பிரச்சனைகளால், மனஅழுத்தம் அதிகரிக்கக்கூடும். உறவில் ஏற்பட்ட கசப்பை போக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதன் மூலம் நிலைமை மேம்படும். உறவுகளில் வெளிப்படைத்தன்மையை வைத்திருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கை துணையின் ஆதரவை பெற முடியாமல் போகலாம். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை கடின உழைப்பில் மூலம் சிறப்பாக முடிக்க முயற்சியுங்கள். உங்களது கடின உழைப்பிற்கு பலன் நிச்சயம் கிடைக்கப்பெறுவீர்கள். வணிகர்களுக்கு இன்று நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும். உடல்நலனை பொருத்தவரை, சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிக்குள்ளாவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

தனுசு

தனுசு

வணிகர்கள் இன்று நல்ல லாபத்தை காணலாம். குறிப்பாக, மருத்துவம் சார்ந்த பணியை மேற்கொள்பவர்கள் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். இரும்பு சம்பந்தப்பட்ட வணிகர்கள் எதிர்பார்த்த லாபத்தை காண்பர். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இன்று உங்கள் பணிகள் அனைத்தும் வேகமாக முடிக்கப்படும். நாளின் இரண்டாம் பகுதியில் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை

மகரம்

மகரம்

ஊதிய உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. மூத்த அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மீதான மதியாதை அதிகரிக்கப் போகிறது. வணிகர்கள் சட்டம் சார்ந்த விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. திட்டமிட்டு செய்யும் எந்தவொரு காரியத்திலும் வெற்றியை பெறுவீர்கள். உறவினர்களின் நல்லுறவை பெறுவீர்கள். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம்

கும்பம்

வேலையை பொறுத்தவரை இன்று சிறப்பான நாள். மூத்த அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் கிடைக்கும். உங்களது செயல்திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களது வேலையால் உயர் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். வணிகம் சார்ந்த பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணம் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரப் போகிறது. கடும் போராட்டத்திற்கு பிறகு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வேலையுடன் சேர்த்து ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகள் வந்து சேரலாம். அவர்கள் கல்வித்துறையில் சில பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட மதிப்பெண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

மீனம்

மீனம்

பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். குறிப்பாக இந்த நேரத்தில் கடன்கள் பெறுவதை தவிர்த்திடுங்கள். வீண் செலவுகளை தவிர்த்து கொள்வதும் நல்லது. அலுவலக வேலைகள் மன அழுத்தம் அதிகரிக்ககூடும். இதுபோன்ற தருணங்களில், வேலையில் கவனம் செலுத்தி அவற்றை விரைவாக முடிக்க முயற்சியுங்கள். நடக்கும் அனைத்து விஷயங்களையும் நல்லதுக்கே என நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்க இன்று சரியான நாள் கிடையாது. உடல்நலம் பற்றி பேசும்போது, வயிறு தொடர்புடைய பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உண்ணும் உணவில் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 3rd December 2020 Thursday In Tamil

Check out the daily horoscope for 3rd December 2020 thursday in Tamil. Read on.
Story first published: Thursday, December 3, 2020, 5:00 [IST]