Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
குருவின் அருளால் குதூகலம் அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
குரு அருள் நிறைந்த வியாழக்கிழமை. இன்றைய தினம் பலரது மனநிலையில் இந்த ஊரடங்கு நீடிக்குமா? மூன்று நாட்களில் முடிந்து விடுமா என்ற யோசனையாக இருக்கும். வேலையில் ஏதாவது பிரச்சினை வருமா?
குரு அருள் நிறைந்த வியாழக்கிழமை. இன்றைய தினம் பலரது மனநிலையில் இந்த ஊரடங்கு நீடிக்குமா? மூன்று நாட்களில் முடிந்து விடுமா என்ற யோசனையாக இருக்கும். வேலையில் ஏதாவது பிரச்சினை வருமா? இந்த மாத சம்பளம் இன்றைக்காவது வருமா என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம் உங்களின் நிதி நிலைமை உடல் ஆரோக்கியம் பற்றிய பல கேள்விகளுக்கு விடை தருகிறது இன்றைய ராசி பலன்கள்.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்னிக்கு எந்த வேலையையும் துணிஞ்சி நின்னு இறங்கி அடிப்பீங்க. பேச்சுவார்த்தையில ரொம்பவே கவனமா இருக்க பாருங்க. தேவையில்லாத விஷயத்துக்கு வாக்குவாதம் பண்ணாதீங்க. கொடுத்த கடனும் இன்னிக்கு வசூலாகும். அரசு வழியில கிலருக்கு எதிர்பாத்த சலுகைகள் கிடைக்கும். வீட்டுத் தேவைகளும் இன்னிக்கு பூர்த்தியாகும். பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் மேற்கொள்ள நேரிடும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 4
ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க வருமானம் பெருகி பேங்க் பேலன்ஸும் கூடும். கூடப்பொறந்தவங்க மூலமா எதிர்பாத்த உதவிகளும் கிடைக்கும். சில பேருக்கு வேலையில புரமோஷனும் கிடைக்கும். கல்யாண சுபகாரிய பேச்சுவார்த்தையில வெற்றி கிடைக்கும். பிள்ளைங்க வழியில மனசுக்கு உற்சாகம் கொடுக்குற சம்பவங்கள் நடந்துடும்.
ராசியான நிறம்: க்ரீம்
ராசியான எண்: 7
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க செய்யுற உதவியினால உங்களோட ஃபைனான்ஸ் பிரச்சனைகள் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு. பிசினஸ்ல திடீர்னு எதிர்பாக்காம பிரச்சனைகள் வரலாம். கவனமா இருங்க. பணப் பிரச்சனையை சமாளிக்க கொஞ்சம் பாக்கெட்டை இறுக்கி பிடிச்சி செலவு பண்ணுங்க. குடும்ப உறுப்பினர்களோட அநாவசிய கருத்து வேறுபாடுகள் வரலாம்.
ராசியான நிறம்: இளம் சிவப்பு
ராசியான எண்: 14
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கொஞ்சம் கவனம் அவசியம். கணவன் மனைவிக்குள்ள விட்டுக்கொடுத்து தாஜா பண்ணி போறது நல்லது. பிசினஸ் ரீதியா எடுக்குற புது முயற்சிகள்ல நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதோட கூட்டாளிகளும் ஒத்துமையா இருப்பாங்க. இன்னிக்கு பணவரத்தும் தாராளமா இருக்கும். மனசளவுலயும் ஹெல்த் ரீதியாவும் ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க.
ராசியான நிறம்: வெள்ளை
ராசியான எண்: 2
ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல பிரச்சனைகள் வரலாம். கொஞ்சம் எச்சரிக்கையா இருக்குறது நல்லது. சொந்தக்காரங்க மூலமா உதவிகளும் கிடைக்கும். பிசினஸ்ல வெளியூர் தொடர்புகள் மூலமா உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அநாவசியமா செலவழிக்குறதை அவாய்ட் பண்ணிட்டு சிக்கனமா செலவழிச்சா பணத் தட்டுப்பாடு வராம பாத்துக்கலாம். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் ரொம்பவே மந்தமா இருக்கும்.
ராசியான நிறம்: ப்ரௌன்
ராசியான எண்: 37
ராசியான நேரம்: பிற்பகல் 4.30 மணி - இரவு 11 மணி

கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்னிக்கு கவர்மெண்ட் மூலமா எதிர்பாத்த உதவிகள் கிடைச்சிடும். பெரிய மனுஷங்களோட அறிமுகம் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளும் இன்னிக்கு கைகூடி வரும். சொந்தக்காரங்களால சுபச் செலவுகள் ஏற்படலாம். பிசினஸ்ல இன்னிக்கு வியாபாரம் அமோகமா நடந்து லாபமும் பெருகிடும். பேங்க் பேலன்ஸும் கூடும். ஹெல்த் கண்டிஷன்ல இருந்து வந்த பிரச்சனைகள் மறையும்.
ராசியான நிறம்: பச்சை
ராசியான எண்: 15
ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

துலாம்
துலா ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்களுக்கு திடீர் பண வரத்து இருக்கும். பேங்க் பேலன்ஸும் கூடும். குடும்பத்தோட வெளியூர் பிரயாணம் பண்றதுக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு அவங்கவங்க தகுதி திறமைக்கேத்த மாதிரி ப்ரமோஷன் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க உதவியால பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்னிக்கு மனசளவுல புது தெம்பும் உற்சாகமும் கிடைக்கும்.
ராசியான நிறம்: க்ரீம்
ராசியான எண்: 6
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல புதுசா மாற்றம் பண்றதுனால வியாபாரம் அமோகமா நடந்து லாபம் குவியும். இருந்தாலும் நீங்க கொஞ்சம் எச்சரிக்கையோட இருக்குறது நல்லது. குடும்பத்துல பிள்ளைங்களால வீண் மன வருத்தம் உண்டாகலாம். அதனால கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. தண்டச் செலவுங்களை குறைச்சிகிட்டா பணத்தட்டுப்பாடு வராமா பாத்துக்கலாம்.
ராசியான நிறம்: இளம் சிவப்பு
ராசியான எண்: 6
ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வண்டி வாகனத்துல வெளியில போகும்போது கூடுதல் எச்சரிக்கையோட போறது நல்லது. மத்தவங்க கிட்ட பேசும்போது, நிதானமா யோசிச்சி பேசி பழகுங்க. மூணாம் மனுஷங்களோட பிரச்சனையில தலையிடாம பேசாம ஒதுங்கி போறது நல்லது. இன்னிக்கு செய்யுற காரியத்துல தடங்கல், இடைஞ்சல் வரலாம். எச்சரிக்கை அவசியம்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 3
ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

மகரம்
மகர ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல லாபம் கிடைக்கும். வருமானமும் கூடும். வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்கி குவிப்பீங்க. உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களோட சப்போர்ட் கிடைக்கும். வழக்கு, பஞ்சாயத்துல உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பிள்றைங்க மூலமா மகிழ்ச்சிகரமான செய்திகளும் வந்துடும். கணவன் மனைவிக்கு நடுவுல சின்னச் சின்ன பிரச்சனைகள் முளைக்கலாம். வாயை கிளறாம விட்டுக்கொடுத்து போறது நல்லது.
ராசியான நிறம்: ப்ளூ
ராசியான எண்: 8
ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல பணம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையில லாபம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீங்க. சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். சுபச் செய்திகள் உங்களை தேடி வரும். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனம் அற்புதமா இருக்கும். அதனால நீங்க மனசளவுல உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.
ராசியான நிறம்: ஆரஞ்ச்
ராசியான எண்: 17
ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகஸ்தர்களுக்கு கூட வேலை பாக்குறவங்க நல்ல சப்போர்ட் பண்ணுவாங்க. இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த கடன் பிரச்சனை காணாம போகும். சரியான நேரத்துல நல்ல சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டு வாங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல சின்னச் சின்ன பிரச்சனைகள் எழலாம். கவனமா இருங்க. மனசு அமைதியா இருக்க ஆன்மீகத்துல நாட்டம் செலுத்துங்க. தான தர்மம் பண்ணுங்க. உங்க எல்லா பிரச்சனையும் தீரும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 30
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 10 மணி



Click it and Unblock the Notifications