Latest Updates
-
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 28, 2020
இன்றைய தினம் நவகிரகங்களின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் உங்க ஆரோக்கியத்தை பற்றிய கவலை இருக்கிறதா பண வருமானம் வருமா? மருத்துவ செலவுகள் வருமா என்று யோசிக்கிறீங்களா இன்றைய ராசி பலன்களை படிங
இன்றைய தினம் நவகிரகங்களின் சஞ்சாரத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும் உங்க ஆரோக்கியத்தை பற்றிய கவலை இருக்கிறதா பண வருமானம் வருமா? மருத்துவ செலவுகள் வருமா என்று யோசிக்கிறீங்களா இன்றைய ராசி பலன்களை படிங்க உங்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, ஆஃபீஸ்ல வேலை பார்க்க முடியாதவங்க வீட்ல இருந்து ஒர்க் ப்ண்றீங்க. வீட்டை விட்டு வெளியே போகலைன்னாலும் புதுசா ஃப்ரண்ட்ஷிப் கிடைக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நல்ல முன்னேற்றம் தான். இதனால பணவரத்தும் அதிகமா இருக்கும். வெளியில கொடுத்து வச்சிருந்த பழைய கடன்களும் வசூலாகிடும். ஹெல்த் கண்டிஷனும் சந்தோஷத்தை கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம் : மாலை 1.30 மணி முதல் இரவு 8.05 மணி

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்ளே இன்னிக்கு மாலைக்கு மேல சந்திரன் உங்க ராசிக்குள்ள நுழையுறதுனால, நல்ல சந்தோஷமான செய்தி உங்க காதுக்கு எட்டிடும். வேலை பாக்குறவங்களுக்கு சந்தோஷமான சம்பவங்கள் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்குது. கூடப்பொறந்தவங்க ஒத்தாசை பண்றதுனால உங்க பிரச்சனை காணாம போயிடும். பயணம் வேண்டாம். இன்று குடும்பத்தில குதூகலமாக இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.05 மணி முதல் 6.15 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்குள்ளாற சுக்கிரன் என்ட்ரி கொடுக்குறதனால, ஆடம்பர செலவுங்க செய்யுறதுனால கையிருப்பு குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல யோசிச்சி செலவழிங்க. இல்லாட்டி அவஸ்தைபடுவீங்க. சொந்தக்காரங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போறது நல்லது. பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் செய்யுறதுனால கூடுதல் லாபம் கிடைச்சிடும். குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட வீண் வாக்குவாதம் பண்ண வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 19
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.20 மணி இரவு 11 மணி

கடகம்
வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு கூடுதல் வேலைச்சுமை உண்டாகலாம். பிள்ளைங்களும் உங்க சொல் பேச்சை கேட்டு நடந்து உஙகளுக்கு பெருமை சேர்ப்பாங்க. இன்னிக்கு உங்க ராசிக்கு லாப ஸ்தானத்துல சந்திரன் உலாவுறதுனால உங்க வருமானமும் கூடிடும். வீட்டுல சுபச் செலவுங்களும் கூடவே வந்துடும். கூடவே, புதுசா வண்டி வாகனம் வாங்குறதுக்கு வாய்ப்பிருக்குது. பிசினஸ் பண்றவங்க எடுக்குற முயற்சிங்களுக்கு ஃப்ரண்ட்ஸுங்களும் ஹெல்ப் பண்ணுவாங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி இரவு 7 மணி

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு எடுக்குற சுபகாரிய முயற்சிங்கள்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அதனால எந்த வேலைய செஞ்சாலும் அதை உற்சாகத்தோட செய்வீங்க. பூர்வீக சொத்து சம்பந்தமா உங்களுக்கு சாதகமாவே எல்லாம் நடக்கும். புதுசா ஏதுனாச்சும் பிசினஸ் பண்ற ஐடியா இருந்தா அதுக்கு ஃப்ரண்ட்ஸுங்களோட ஒத்தாசை கிடைச்சிடும். கூடவே பேங்க் லோன் கிடைக்குறதுக்கும் வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி மாலை 4.20 மணி

கன்னி
கன்னி ராசிக்காரங்க இன்னிக்கு மத்தவங்களை நம்பி எந்த வேலையையும் கொடுக்காதீங்க. இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, கொஞ்சம் மந்தமாவே இருப்பீங்க. அதனால மத்தவங்க விஷயத்துல அநாவசியமா தலையிடாம இருக்குறது நல்லது. எந்த வேலையை செஞ்சாலும் கொஞ்சம் நிதானிச்சி செய்யுறது நல்லது. கொரோனா பீதி இருக்குறதுனால தயவு செஞ்சி வெளியில எங்கயும் போக நினைக்காதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 45
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி இரவு 10.10

துலாம்
துலாம் ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க பொருளாதார நிலைமை ஓரளவு நல்லா இருக்கும். குடும்பத்துல இருக்குறவங்க எல்லாருமே ஒத்துமையா இருப்பாங்க. வெளியூர் பிரயாணம் செய்வது பற்றி இப்போதைக்கு நினைச்சு கூட பார்க்காதீங்க. சாயங்காலத்துக்கு மேல உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் ஏற்படுறதுனால அநாவசியமா வாயை விட்டுறாதீங்க கவனமாக இருங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும்.
ராசியான நிறம்: குங்குமப்பூ நிறம்
அதிர்ஷ்ட எண் : 38
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி இரவு 7.20 மணி

விருச்சிகம்
இன்னிக்கு உங்களுக்கு விஐபிக்களுக்கு அறிமுகம் கிடைச்சிடும். கூடவே பணவரத்தும் வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. அதனால வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். புருஷன் பொண்டாட்டிக்குள்ளாற நெருக்கும் கூடிடும். கல்யாண பேச்சுவார்த்தையில இருந்த தடங்கல் இடைஞ்சல் சரியாகிடும். புதுசா ஏதுனாச்சும் ஆரம்பிக்கிறதுக்கும் இன்னிக்கு சந்தர்ப்பம் கிடைச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் காலை 6.30 மணி மாலை 4.00 மணி

தனுசு
தனுசு ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா பண நெருக்கடி வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. மறைஞ்சிருந்த நோய் பாதிப்புகள் வெளியில தெரியுறதுக்கு வாய்ப்பிருக்கு. கடன் பிரச்சனையும் உங்களை வாட்டி வதைக்கும். இருந்தாலும், திடீர்னு எதிர்பாக்காம எங்கிருந்தாச்சும் உங்களுக்கு ஹெல்ப் கிடைக்குறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பசங்களும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 32
அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.30 மணி இரவு 8 மணி

மகரம்
சொந்தக்காரங்க கூட அநாவசியமா வாய் தகறாரு வராம பாத்துக்கோங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களோட கெடுபிடி ஜாஸ்தியா இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு வியாபாரத்துக்கு ஏத்த பலன் கிடைச்சிடும். வீட்டுல மனைவி மூலமா நல்ல விஷயம் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால அவங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. வரவுக்கு மீறுன செலவுங்களும் வந்து கையை கடிக்கும். கவனமா நடந்துக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம் : இரவு 4 மணி இரவு 9மணி

கும்பம்
கும்ப ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு குடும்பத்துல இருந்துவந்த சண்டை சச்சரவுங்க காணாம போயி சந்தோஷம் வந்துடும். பிசினஸ்ல இருந்துவந்த எதிரிங்களோட தொந்தரவு குறைஞ்சி லாபமும் கூடிடும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. புதுசா வண்டி வாகனம் வாங்குறதுக்கும் யோகம் இருக்குது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களோட ஒத்தாசையும் கிடைச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 45
அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி இரவு 8.20 மணி

மீனம்
மீன ராசிக்காரங்களுக்கு இன்னிக்கு எதிர்பாக்காம சுபச்செலவுங்க வந்து கையை கடிக்கும். இருந்தாலும் சொந்தக்காரங்க மூலமா எதிர்ப்க்காத ஒத்தாசை தாராளமா கிடைச்சிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு சின்னதா ஒரு லாபம் பார்க்கலாம். வருமா வராதான்னு நினைச்சிட்டு இருந்த பணமும் வந்து சந்தோஷத்தை கொடுக்கும். ஆஃபீஸ்ல இருந்து நல்ல செய்தி வரும் வீட்ல வேலை பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களால நல்லது நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் காலை 3.30 மணி இரவு 8 மணி



Click it and Unblock the Notifications