Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
சிம்ம ராசிக்காரங்களுக்கு இன்று கோபம் அதிகம் வருமாம் கவனம்...
இன்று பிப்ரவரி 26 ஆம் நாள் சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.
இன்று பிப்ரவரி 26 ஆம் நாள் சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுப விரைய செலவுகள் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். காதல் விவகாரங்கள் அற்புதமாக இருக்கும் மண வாழ்க்கை மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 25
சாதகமான நேரம் : முற்பகல் 10:10 முதல் இரவு 9:45 மணிவரை

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழிலில் லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இன்று உற்சாகமான நாள். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். காதல் வாழ்க்கையில் ஊடலும் கூடலுமாய் குதூகலமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 12:05 முதல் இரவு 8:00 மணிவரை

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் வேலை செய்யும் இடத்தில் அதிக வேலை செய்ய வேண்டியிருக்கும். இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்வீர்கள். அன்பானவருடன் மகிழ்ச்சியான பயணம் செல்ல வேண்டியிருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். காதல் விவகாரங்களும் மண வாழ்க்கையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : பிற்பகல் 3:15 முதல் இரவு 10:45 மணிவரை

கடகம்
சந்திரன் இன்றைய தினம் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இன்றைக்கு ரொமான்ஸ் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் கொஞ்சம் நேரம் செலவு செய்யுங்கள். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 8:00 மணிவரை

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டில் சந்திரன் இருப்பதால் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது விழிப்புணர்வு அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : முற்பகல் 11:45 முதல் இரவு 9:45 மணிவரை

கன்னி
சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகமாகும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளுடன் சந்தோஷமாக பேசுவீர்கள். இன்று உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவு அற்புதமாக இருக்கும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். இன்றைக்கு உங்களுக்கு ரொமாண்டிக்கான நாளாக அமையப்போகிறது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 10:00 மணிவரை

துலாம்
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு உங்களுக்கு சுமாரான நாள்தான். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். காதல் வாழ்க்கை மனதில் உற்சாகத்தை தரும். மண வாழ்க்கை மனதில் இதம் புரியாத உற்சாகத்தை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : பிற்பகல் 3:30 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். கடன்கள் குறையும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : அதிகாலை 5:10 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

தனுசு
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் உங்களுடைய பிரச்சினைகள் குறையும். எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். உங்க உடல் நலம் சுமாராக இருக்கும். மண வாழ்க்கையில் இன்று சுமராக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 2.00 முதல் இரவு 10:10 மணிவரை

மகரம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் உங்களுடைய உடல் நலம் நன்றாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காதல் விவகாரம் இன்றைக்கு சுமாராக இருக்கும். மண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 2.00 முதல் இரவு 10:10 மணிவரை

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீடான தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். இன்றைய தினம் வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். காதல் இன்றைக்கு சந்தோஷத்தை கொடுக்கும் மண வாழ்க்கை இன்றைய தினம் மனதில் மகிழ்ச்சியை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : காலை 8.10 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மீனம்
சந்திரன் தினம் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். உங்க உடல் நலம் அற்புதமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இன்று ஒற்றுமை குறையும். இன்றைக்கு நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 33
சாதகமான நேரம் : விடிகாலை 4.30 முதல் பிற்பகல் 2:45 மணிவரை



Click it and Unblock the Notifications