Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு லக்கியான நாள் தெரியுமா?
சந்திரன் இன்றைய தினம் சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார் இந்த சஞ்சாரத்தினால் மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. சில ராசிக்காரர்கள் மவுன விரதம் இருப்பது நல்லது.
தினசரி ராசி பலன் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது. அக்டோபர் 24 ஆம் தேதி உங்களின் நிதி நிலை வேலை, தொழில் உடல் நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இன்றைக்கு உங்களின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு ராசியான நிறம், நம்பர், நல்லநேரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு பாருங்க. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம்.

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் யாருக்கு திருப்பு முனையை தரும் யாருக்கு சந்தோஷத்தை தரும் என்று பார்க்கலாம். உங்க உண்மையான உழைப்புக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும். இன்றைக்கு தினசரி ராசிபலனை படிங்க உங்க எல்லா கேள்விக்கும் நிச்சயம் பதில் கிடைக்கும்.

மேஷம்
இன்றைய தினம் உங்களுக்கு அற்புதமாக இருக்கிறது உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சந்திரன் பயணிக்கிறார். முதலீடுகள் லாபத்தை தரும் பங்குச்சந்தை முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும் தைரியமாக முதலீடு செய்யலாம். இன்றைய தினம் உங்க வீட்டில் நீங்க உபயோகப்படுத்தும் பொருட்கள் ரிப்பேர் ஆகலாம் டென்சன் ஆகாதீங்க. ஈஸியா ஹேண்டில் பண்ணுங்க உங்க வாழ்க்கை துணையோட நீங்க சந்தோஷமா ஜாலியாக ஒரு வாக் போயிட்டு வாங்க. உங்க ஆரோக்கியம் இன்றைக்கு அற்புதமாக இருக்கும். உங்க சந்தோஷமும் உற்சாகமும் கூடும்.
ராசியான நிறம் : வெள்ளை
ராசியான எண் : 42
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம்
உங்க ராசிக்கு நான்காவது வீட்டில் சந்திரன் பயணிக்கிறார். வம்பு வழக்குகள் பிரச்சினை தீரும் ரொமான்ஸ் அதிகரிக்க எதையும் சாப்ட் ஆக ஹேண்டில் பண்ணுங்க. உங்க வீட்டுல இன்னைக்கு சீரியஸா பிரச்சினை ஓடும். சின்ன சின்ன பிரச்சினைகளை சீரியஸாக அணுகவேண்டாம். கணவனோ மனைவியோ டேக் இட் பாலிசியை கையாண்டால் உங்க குடும்ப உறவில் குதூகலத்தை தரும். பணத்தை கணக்கு பார்த்து செலவு பண்ணுங்க. விரைய செலவு வரத்தான் செய்யும் வேலை விசயமாக செல்லும் பயணம் வெற்றியை தேடித்தரும்.
ராசியான நிறம் : பிங்க்
ராசியான எண் : 17
ராசியான நேரம் : இரவு 8.20 மணி முதல் இரவு 8.40 மணி வரை

மிதுனம்
உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். நீங்க செய்யும் முயற்சிகள் வெற்றியை தரும். உங்க துணையோட நீங்க ரொம்ப நேரம் செலவு பண்ணுவீங்க. உங்க மனசு உற்சாகமாக இருக்க நீங்க உங்க குடும்ப உறுப்பினர்களோட நேரம் செலவு பண்ணுங்க. உங்க பிசினஸ் பிரச்சினைகள் ஈசியாக சால்வ் ஆகும். இன்றைக்கு உங்க நிதி நிலைமை சூப்பராக இருக்கும். புதிய வாய்ப்புகள் சந்தோஷத்தை தரும். உங்க ஆரோக்கியம் இன்றைக்கு நல்லா இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.
ராசியான நிறம் : ப்ரௌன்
ராசியான எண் : 2
ராசியான நேரம் : மாலை 4.05 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்
இன்றைய தினம் சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் இருக்கிறார். பணவரவு அற்புதமாக இருக்கும். உங்க வேலைப்பளு இருந்தாலும் எளிதாக கையாளுவீர்கள். பண விசயத்தில் ஜாக்கிரதையாக இருங்க இல்லாவிட்டால் பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும். உங்க வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவு பண்ணுங்க. உங்க காதல் துணைக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுங்க. உங்களுக்கு பொருளாதார ரீதியான வருமானம் வரும். உடம்பு கொஞ்சம் அசதியாக இருக்கும் கவனமாக இருங்க.
உங்க ராசியான நிறம் : ப்ளூ
ராசியான எண் : 20
ராசியான நேரம் : காலை 5.15 மணி பிற்பகல் 3 மணி

சிம்மம்
உங்க ராசியில மனோகாரகன் சந்திரன் சஞ்சரிக்கிறார் மனதில சின்ன சின்ன சஞ்சலங்கள் ஏற்படும் வேலைப்பளுவினால் பிரச்சினைகள் வரும் முடிவுகள் எடுக்கும் முன்பாக யோசிக்கவும். உங்க குடும்பத்திற்கு நீங்க செய்யும் காரியங்களால் சந்தோஷங்கள் எதுவும் ஏற்படாது. உங்க துணை இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் லெஸ் ஆக இருப்பாங்க. உங்க தரப்பு கருத்துக்களை தெளிவாக எடுத்து புரிய வையுங்க. உங்க காதல் திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை ஈஸியாக ஹேண்டில் பண்ணுங்க. உங்க வேலைப்பளு அதிகரிக்கும். உடம்புலஹயம் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. சின்னச் சின்ன பிரச்சினைகளையும் கவனிங்க.
ராசியான எண் : அடர் பச்சை
ராசியான எண் 7
ராசியான நேரம் : காலை 9 மணி பிற்பகல் 12 மணி

கன்னி
கன்னி ராசிக்காரங்களே இன்றைய தினம் சந்திரன் விரைய ஸ்தானத்தில சஞ்சரிக்கிறார். பணம் செலவு அதிகமாகும். சுப செலவாக மாற்றுங்க. உங்க நேர்மையை உங்க வேலையில காட்டுங்க. வேலையில உங்க மேலதிகாரியின் ஹெல்ப் கிடைக்கும். வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பிசினஸ்ல பார்ட்னர் நல்லா சப்போர்ட் பண்ணுவார். உங்க காதல் வாழ்க்கையில திடீர் திருப்பங்களும் சந்தோஷமான சர்ப்ரைஸ்களும் ஏற்படும். உங்க காதலர் அல்லது காதலி திருமணத்திற்காக புரபோஸ் பண்ண வாய்ப்பு உள்ளது. திருமணமானவராக இருந்தால் உங்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்று தேடி வரும்.
ராசியான நிறம் : காவி
ராசியான எண் : 20
ராசியான நேரம் காலை 8.25 பிற்பகல் 12.55

துலாம்
இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்க எனர்ஜியை நீங்க வேஸ்ட் பண்ணாதீங்க. உங்க குடும்ப வாழ்க்கையில சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் காரணம் உங்க ராசியில சூடான கிரகங்கள் இருக்கின்றன. சுக்கிரன் புதன் கூட்டணியால் பணப்பிரச்சினை தீரும் உங்க துணையோட பேசும் போது அமைதியை கையாளுங்கள். விட்டுக்கொடுத்து போங்க மனைவியோட உடல் நலத்தில கவனமாக இருங்க. நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க. சில கடன்கள் அடைபடும். பணத்தை தேவையில்லாம செலவு பண்ணாதீங்க. எதிர்காலத்தை திட்டமிடுங்க.
ராசியான நிறம் : ப்ரௌன்
ராசியான எண் : 6
ராசியான நேரம்: பிற்பகல் 12.20 மாலை 4 மணி

விருச்சிகம்
உங்க வாழ்க்கையோட சந்தோஷம் தேடி வரும். திருமண வாழ்க்கையில லைப் பார்ட்னர் உடனான அமைதியும் சந்தோஷமும் திரும்ப வரும். மகிழ்ச்சியான தருணங்களால் குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். சின்ன சின்ன டென்சன்களையும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். பொருளாதாரம் கொஞ்சம் உயரும். இவ்வளவு நாளா கஷ்டப்பட்ட உங்களுக்கு இது சந்தோஷமான சமாச்சாரம்தானே. பிசினஸ், வேலையில் உங்களுக்கு பிடிச்சமாதிரி வருமானம் வரும். பத்தாம் வீட்டில் சந்திரன் பயணிக்கிறார். எந்த முக்கிய முடிவையும் எடுக்கும் முன்பாக நீங்க கொஞ்சம் ஒத்திப்போடுங்க. பயணத்திற்கு இது சரியான நேரமில்லை. பயணத்தை தவிருங்க இல்லாட்டி உங்க உடம்பு சோர்வாகிடும் கவனம் தேவை.
ராசியான நிறம் : மெருன்
ராசியான எண் : 7
ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி மாலை 4.20 மணி

தனுசு
உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் பயணிக்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கும். சின்னச் சின்ன சங்கடங்கள் முடிவுக்கு வரும் காதல் திருமண வாழ்க்கை சந்தோஷத்தை தரும். உங்க முக்கிய வேலைகளை நீங்க சந்தோஷமாக முடிப்பீங்க. உங்க உடல்நலமும் உங்க அம்மா உடைய உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும். பணத்தை யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உங்க லைப் பார்ட்னர் இன்னைக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. சந்தோஷம் அதிகரிக்கவும் மன அமைதிக்காகவும் நீங்க ஆலய தரிசனம் பண்ணுங்க.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண்: 22
ராசியான நேரம் ; காலை 9 மணி, இரவு 1.30 மணி

மகரம்
ராசிக்கு எட்டாம் வீட்ல சந்திரன் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு இன்னைக்கு டென்சன் அதிகரிக்கும். வேலையில பளு அதிகரிக்கும். எட்டாம் வீட்டில் சந்திரன் பயணிக்கிறார். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருங்க. பொருளாதர நிலை சராசரியாக இருக்கும். வேலை பிசினஸ்ல நீங்க பெரிய வேலை பண்ணுவீங்க. இன்னைக்கு புது வேலை எதையும் ஒத்துக்கொள்ளாதீங்க. அது தோல்வியிலதான் முடியும். உங்க வாழ்க்கை துணையோட வார்த்தையை சரியாக புரிந்து கொள்ளுங்க இல்லாட்டி பிரச்சினைல முடியும். வாயை மூடி மவுனமாக இருந்தாலே போதும் வம்பு வழக்குல இருந்து தப்பிக்கலாம்.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான எண் : 9
ராசியான நேரம்: காலை 8 மணி பிற்பகல் 12.30 மணி

கும்பம்
இன்றைய தினம் உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் பயணிக்கிறார். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வந்து போகும். எந்த பிரச்சினைகளையும் விட்டுக்கொடுத்து போவதன் மூலம் எளிதாக சமாளிக்கலாம். உங்க பொருளாதார சூழ்நிலை இன்றைக்கு சூப்பராக இருக்கும். உங்க குழந்தைகள் மூலம் நீங்க சந்தோஷமாக இருப்பீங்க. விரைய செலவுகளை தவிர்த்து விடுங்க இல்லாட்டி வீணான பிரச்சினையில கொண்டு போய் விட்டு விடும். உங்க ரொமான்டிக் லைப் சந்தோஷமாக இருக்கும். உங்க லைப் பார்ட்னர் நீங்க சந்தோஷப்படும்படியான சர்ப்ரைஸ் கொடுப்பார் அனுபவிக்க தயாராகுங்கள்.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான நிறம் : 5
ராசியான நேரம்: பிற்பகல் 5 மணி பிற்பகல் 9.40 மணி

மீனம்
ராசியான நாள் இது உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். நல்லதும் கெட்டதுமான செயல்பாடுகளால் மனம் அலைபாயும். பண விசயத்தில் கவனமாக இருங்க. பணம் ஒரு பக்கம் வந்தாலும் செலவு மற்றொரு பக்கம் வந்து கொண்டே இருக்கும். குடும்ப பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும் வெட்டிப்பேச்சுக்களை நீக்கி விட்டுக்கொடுத்து போனால் பிரச்சினைகள் தீரும். உங்க உடம்புல நீங்க கவனம் வையுங்க இல்லாட்டி மனதளவிலும் பிரச்சினை ஏற்படும்.
ராசியான நிறம் : பர்ப்பிள்
ராசியான எண் : 20
ராசியான எண் பிற்பகல் 12 மணி இரவு 7.30 மணி



Click it and Unblock the Notifications











