For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு விரைய செலவு வீடு தேடி வரப்போகுது...

சந்திரனின் சஞ்சாரம் சில ராசிக்காரங்களுக்கு சாதகமாகவும் சில ராசிக்காரங்களுக்கு பாதகமாகவும் இருக்கப் போகுது. பணவரவு, திடீர் செலவுகள் சிலருக்கு வரும்.

|

சந்திரனின் சஞ்சாரம் சில ராசிக்காரங்களுக்கு சாதகமாகவும் சில ராசிக்காரங்களுக்கு பாதகமாகவும் இருக்கப் போகுது. பணவரவு, திடீர் செலவுகள் சிலருக்கு வரும். அதே போல உடல் ஆரோக்கியமும் வியாபாரமும் மந்தமாக இருக்கும். நமக்கு எப்படி இருக்கும்னு கேட்கறீங்களா? இன்றைய ராசி பலன்களைப் படிச்சு தெரிஞ்சுக்கங்க. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கப் போகுது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு சந்திரன் உங்க ராசியில உலாவுறதுனால, ஃப்ரண்ட்ஸுங்க கிட்ட இருந்து எதிர்பாத்த உதவி கிடைக்கும். பிசினஸ்லயும் எதிர்பாத்த லாபம் கிடைக்கும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளியூர் பிரயாணத்தை அவாய்ட் பண்றது ரொம்ப நல்லது. வீட்ல இருந்து வந்த மனஸ்தாபம் விலகி ஒத்துமையா இருப்பாங்க. எந்த வேலையையும் ஆத்ம திருப்தியோட செய்வீங்க. திடீர் செலவுகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிங்கள்ல போராடி தான் ஜெயிக்க வேண்டியதிருக்கும். பிசினஸ்ல இது வரைக்கும் இருந்து வந்த பிரச்சனைங்க கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு. சொந்தக்காரங்க மூலமா இருந்த பாதிப்பு மறைஞ்சி நல்லது நடந்துடும். உங்க ஹெல்த் கண்டிஷன்லயும் குடும்பத்துல இருக்குறவங்களோட ஹெல்த் கண்டிஷன்லயும் அக்கறை காட்டுறது நல்லது. இல்லேன்னா டாக்டருக்கு பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்த சகோதர சகோதரிங்களால உங்களுக்கு லாபம் கிடைக்கலாம். பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபம் அதிகமா கிடைக்கும். அதனால வருமானமும் பெருகிடும். பெண்களுக்கு நகை நட்டு வாங்குறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பிள்ளைங்களால மனசுக்கு சந்தோஷம் கிடைக்கும். குடும்ப செலவும் கண்ட்ரோல்ல இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 1:00 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க ரொம்ப பொறுமையா இருந்தா, தேவையில்லாத பிரச்சனைகள்ல இருந்து தப்பிச்சிடலாம். கூடப்பொறந்தவங்களால நிறைய நல்லது நடந்துடும். பிசினஸ்லயும் லாபம் அமோகமா இருக்கும். பண வரத்து அமோகமா இருக்கும். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல இருந்து பாதிப்புகள் சரியாகிடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு மனைவி வழி சொந்தக்காரங்க மூலமா உங்களுக்கு உதவி, ஒத்தாசை கிடைக்கும். சுபகாரியம் சம்பந்தமா பேச்சு வார்த்தை நடத்த இன்னிக்கு நல்ல நாள். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களால திடீர் நெருக்கடிங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால எச்சரிக்கையா இருங்க. அதோட எந்த விஷயத்தையும் கொஞ்சம் நிதானமா யோசிச்சி செய்றது நல்லது. இன்னிக்கு பணவரத்து அமோகமா இருந்தாலும், அதுக்கேத்த மாதிரி செலவுங்க வந்து நிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பாதிப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க. மத்தவங்க விஷயத்துல அநாவசியமா தலையிடாம ஒதுங்கி போறது நல்லது. அதே மாதிரி சாப்பாட்டு விஷயத்துல நாக்கை கண்ட்ரோல் பண்ணிக்கோங்க. குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட அநாவசியமா பேசி வம்பிழுக்காம அனுசரிச்சி போங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் காலை 8:45 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு புதுசா ஃப்ரண்ட்ஸுங்க அறிமுகமாவாங்க. குடும்பத்துல இருக்குறவங்க கூட இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறைஞ்சிடும். புதுசா சொத்து பத்து வாங்குறதுல ஆர்வம் வந்துடும். பணம் கொடுக்கல் வாங்கல் பிசினஸ் திருப்திகரமா இருக்கும். அதனால சேமிப்பும் கூடிடும். கூடவே உங்களுக்கு நம்பிக்கையும் தெம்பும் வந்துடும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துலு கூடுதல் சந்தோஷம் ஏற்பட்டுடும். அதோட சுப காரிய செலவுங்களும் வந்துடும். ரொம்ப சிக்கனமா செலவு செஞ்சா, கடன் பிரச்சனையில இருந்து தப்பிச்சிடலாம். ஃப்ரண்ட்ஸுங்களோட அட்வைஸ்னால பிசினஸ்ல இருந்து வந்த மந்தகதி மாறி வியாபாரம் பெருகி லாபம் கிடைக்கும். பணவரத்தும் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல பெருசா எந்த முதலீடும் செய்ய வேணாம். எந்த காரியத்தையும் நிதானமா யோசிச்சி செய்யுறது நல்லது. எதிர்பாத்துட்டு இருந்த உதவி, ஒத்தாசை சரியான சமயத்துல இன்னிக்கு கிடைக்கும். சுப காரிய முயற்சிங்கள்ல நல்லது நடந்துடும். பிள்ளைங்க மூலமா தொல்லைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. செய்யுற வேலைக்கு ஏத்த மாதிரி பலன் கிடைக்குறதுல கால தாமதம் உண்டாகிடும். கர்ப்பிணிகள் கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:30 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு பிள்ளைங்களால தண்டச்செலவுங்க ஏற்படலாம், எச்சரிக்கையோட இருக்க பாருங்க. செய்யுற வேலையில நிம்மதி கிடைக்கும். இன்னைக்கு சம்பளம் குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு. எதிர்பார்த்த இடத்துல இருந்து உதவி கிடைக்குறதுல கால தாமதம் உண்டாகலாம். புதுசா சாமான்கள் வாங்குறதுல எச்சரிக்கையோட இருங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:30 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு பெரியவங்களோட மனசுல இடம் பிடிப்பீங்க. பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். பிசினஸ்லயும் வியாபாரம் பெருகி கூடுதல் லாபம் கிடைச்சிடும். சுப காரிய முயற்சிங்களை ஆரம்பிக்குறதுக்கு இன்னிக்கு அருமையான நாள். ஹெல்த் கண்டிஷன்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பண வரத்தும் இன்னிக்கு தாராளமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரங்களே, சுபகாரிய முயற்சிங்களுக்கு இன்னிக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. பிசினஸ்ல இருந்து வந்த பிரச்சனைங்க காணாம போயிடும். லவ் பண்றவங்க நிதானமா யோசிச்சி முடிவெடுங்க. அவசரப்படாதீங்க. கூடப்பொறந்தவங்களால இன்னிக்கு உங்க மனநிம்மதி பறிபோயிடும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 9:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 23rd April 2020 Thursday In Tamil

Check out the daily horoscope for 23rd april 2020 thursday in tamil. Read on...
Story first published: Wednesday, April 22, 2020, 18:35 [IST]
Desktop Bottom Promotion