For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (22.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று நீங்களுக்கு கலவையான முடிவுகளைப் பெறலாம். யாருடனாவது தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொறுமையை கையாள வேண்டியது அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை இருக்காது. வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். மனதை அமைதியா வைத்துக் கொள்ள தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம். வணிகர்கள், தொழிலை மேம்படுத்த நினைத்தால், இன்று நல்ல வாய்ப்பினைப் பெற்றிடலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். இன்று பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையும் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

உத்தியோகஸ்தர்கள், இன்று அலுவலகத்தில் பிற ஊழியர்களிடம் கோபப்படுவதை தவிர்க்கவும். குறிப்பாக, வார்த்தைகள் பார்த்து பயன்படுத்த வேண்டும். வர்த்தகர்கள் இன்று சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பண பிரச்சனைகள் எதுவும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:15 மணி முதல் மாலை 5 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்று சில்லறை வர்த்தகர்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கப்போகிறது. மிகப்பெரிய நிதி லாபத்தை ஈட்ட முடியும். உத்தியோகஸ்தர்களும் நல்ல பலன்களைப் பெறலாம். அலுவலகத்தில் சில முக்கியமான பணிகள் சரியான நேரத்தில் முடிக்க முடியும். சக ஊழியர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வாடகை வீட்டில் இருப்போரது, சொந்த வீடு வாங்கும் கனவு விரைவில் நிறைவேறப் போகிறது. தாயின் உடல்நிலை சரியில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அலட்சியப்போக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கடகம்

கடகம்

உங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில், சில அவமானங்களை சந்திக்க நேரிடும். வணிகர்கள் பொருளாதார விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். இன்று பெரிய முதலீட்டைத் திட்டமிட்டிருந்தால், இந்த நேரத்தில் அதைத் தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முக்கியமான வேலைகளை உங்களிடம் ஒப்படைத்தால், அதனை கவனமாக செய்யவும். அதிகப்படியான வேலை பளு காரணமாக, வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகலாம். இதனால் உங்களுக்கு இடையே மோசமான உணர்வுகள் உண்டாகலாம். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று குளிர்ச்சியான பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:35 மணி முதல் இரவு 7 மணி வரை

சிம்மம்

சிம்மம்

குடும்ப வாழ்க்கையில் சில சச்சரவுகள் இருக்கும். வீட்டில் நடக்கும் சர்ச்சையை அமைதிப்படுத்த இன்று சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள், வேலை காரணமாக திடீரென்று பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், உங்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட் தொடர்பான பணிபுரிவோர் இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும். உங்கள் வேலைகளில் சில நடுவில் சிக்கியிருக்கலாம். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வரவிற்கு ஏற்ப நீங்கள் செலவிடுவது நல்லது. உடல்நலம் பற்றி பேசும்போது, நீங்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு சிறந்த தொடக்கமாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிப்பதோடு, நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருப்பீர்கள். உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி ஆலயங்களுக்கு செல்லலாம். வேலையைப் பற்றிப் பேசினால், அலுவலகத்தில் கடினமாக உழைத்து, சிறந்ததைக் கொடுப்பீர்கள். உங்கள் கடின உழைப்பை உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. வர்த்தகர்கள் புதிய பங்குகள் வாங்க இது சரியான நேரம் அல்ல. பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆனால் திடீர் பெரிய செலவுகளால் கவலைப்படுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:15 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம்

நீண்ட கால கவலைகளில் இருந்து இன்று விடுபடலாம். நீண்ட காலத்திற்குப் பிறகு மனதளவில் நன்றாக உணருவீர்கள். அலுவலக பணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல், சரியான நேரத்தில் முடிக்கப்படும். பங்குச் சந்தையில் பணிபுரிவோர் இன்று எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வாழ்க்கைத் துணையுடனான உங்கள் நடத்தையை சரியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் முரட்டுத்தனமான நடத்தை அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். கடன்களை விரைவில் அடைக்க விரும்பினால், சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அழகு விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்கவும். வணிகர்கள் இன்றைய தினம் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். புதிய தொழில் தொடங்க நினைப்போர் சில பெரிய தடைகளை சந்திக்கலாம். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும். உடன்பிறப்புகளுடன் கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் மோதல் போக்கைத் தவிர்க்கவும். உடல்நிலைமைப் பொறுத்தவரை, நேரத்திற்கு உணவு உண்ண அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:15 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு

தனுசு

இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம். இருப்பினும் வேலையுடன் சேர்த்து, ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுக்கு உங்களை பற்ற புகார் அளிக்க வாய்ப்பளிக்காதீர்கள். நீங்கள் கடினமாக உழைப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் இதயங்களை வெல்ல முடியும். இது உங்கள் முன்னேற்றத்திற்கான வழியையும் திறக்கும். சிறிய பணிகளை கூட முழு அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பது நல்லது. வர்த்தகர்கள் இன்று நல்ல லாபம் ஈட்ட முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 44

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை

மகரம்

மகரம்

இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிக அருமையான, மறக்கமுடியாத நாளாக இருக்கப்போகிறது. இன்று பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு மிகவும் புனிதமானதான நாளாக இருக்கும். சிக்கிய பணத்தைப் பெறுவதன் மூலம் பெரிய கவலை நீங்கும். வர்த்தகர்கள் இன்று ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ளக்கூடும். இருப்பினும், நாளின் இரண்டாம் பாகத்தில், இந்த பிரச்சனைகள் அனைத்தும் சமாளிக்கப்படும். அலுவலக சூழல் மிகவும் நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் 12:45 மணி வரை

கும்பம்

கும்பம்

குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் மேற்கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று அலுவலகத்தில் உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். வர்த்தகர்கள் இன்று லாபம் ஈட்ட ஒரு நல்ல வாய்ப்பையும் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வாழ்க்கைத் துணை உங்களிடம் பெரிய கோரிக்கையை வைக்கலாம். இதனால் உங்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கோபத்தால் இன்று நிலைமைகள் மோசமடையக்கூடும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:40 மணி முதல் 10:05 மணி வரை

மீனம்

மீனம்

உத்தியோகஸ்தர்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை இன்று முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், உங்களுக்கு இது ஒரு பிரச்சனையாக மாறும். வணிக நபர்கள் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பைப் பெறலாம். இந்த முதலீடு வரும் நாட்களில் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதை நிரூபிக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். நிலுவையில் உள்ள பழைய பாக்கிகளை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் இன்று பெரிய கொள்முதல் செய்ய திட்டமிட்டால், அதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 22nd January 2021 Friday In Tamil

Check out the daily horoscope for 22nd January 2021 friday in Tamil. Read on.
Story first published: Friday, January 22, 2021, 5:00 [IST]