சனிபகவான் இந்த ராசிங்கள இன்னைக்கு படாதபாடு படுத்த போறாராம்... உஷாரா இருங்க...!

கிரகங்களின் இயக்கம் இன்று அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கும். உங்களின் நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை உங்கள் ராசியின் கிரக நிலைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

கிரகங்களின் இயக்கம் இன்று அனைத்து ராசி அறிகுறிகளையும் பாதிக்கும். உங்களின் நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை உங்கள் ராசியின் கிரக நிலைகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். உங்கள் நிதி வாழ்க்கை, வணிகம், வேலை, காதல், திருமணம் போன்ற அனைத்து தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். சனிபகவான் இன்று சில ராசிகளை படாதபாடுப்படுத்த காத்திருக்கிறார். உங்களின் ராசிக்கு சனிபகவான் இன்று என்ன வைத்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Daily Horoscope For 20th June 2020 Saturday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

ஒரு முக்கியமான பணியை முடிக்க நீங்கள் சில நாட்களாக தொடர்ந்து பணியாற்றி வருகிறீர்கள் என்றால், இந்த நாளில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் ஒரு சிறிய தவறு கூட உங்கள் கடின உழைப்பை எல்லாம் வீணாக்கிவிடும். பணியாளர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை பேண வேண்டும். வணிக விஷயங்களில் எந்த அவசரமும் கொள்ள வேண்டாம். இன்று ஒரு சிறிய லாபத்தை சம்பாதிக்க உங்களுக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால், அதை நழுவ விட வேண்டாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவி மூலம் சில நன்மைகளை பெறுவீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 7

நல்ல நேரம்: மாலை 4:15 மணி முதல் இரவு 10:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்கள் வேலைகளில் சில சவால்கள் எழலாம், இருப்பினும் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். வணிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த பொருளாதார இலாபங்கள் இன்று தேடிவர வாய்ப்புள்ளது. நீங்கள் ஏதேனும் புதிய வேலையைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இன்று உங்கள் மனைவி உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது உங்கள் இருவருக்கும் கடினமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 14

நல்ல நேரம்: மாலை 5:10 முதல் 9:50 வரை

மிதுனம்

மிதுனம்

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நீண்ட காலமாக உங்கள் தொடரில் இல்லாதவர்களை இன்று தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை இன்று உங்களுக்கு பல சவால்கள் காத்திருக்கும், புதிய வேலைகள் எதையும் தொடங்க வேண்டாம். வணிகர்கள் இன்று நிதி சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். பணம் இல்லாததால் உங்கள் சில வேலைகள் முழுமையடையாமல் இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:55 முதல் மதியம் 12 மணி வரை

 கடகம்

கடகம்

பண விஷயத்தில் கவனமாக இருங்கள், குறிப்பாக இந்த நேரத்தில் நீங்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இது தவிர, பொழுதுபோக்கு விஷயங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள், இல்லையெனில் நீங்கள் வரும் நாட்களில் ஒரு பெரிய நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். வேலையில் இருப்பவர்களின் மனஅழுத்தம் வெகுவாக அதிகரிக்கும். வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். எந்தவொரு புதிய வேலையையும் தொடங்கஇன்று சரியான நாள் இல்லை. உடல்நலம் பற்றி பேசும்போது, வயிற்றுடன் தொடர்புடைய தொற்று இருக்கலாம், எனவே சாப்பிடவும் குடிக்கவும் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 22

நல்ல நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:55 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று வேலை முன்னணியில் ஒரு நல்ல நாளாக இருக்கும், குறிப்பாக வேலையில் இருப்பவர்களுக்கு செய்தால் மூத்த அதிகாரிகளிடமிருந்து சரியான வழிகாட்டுதல் கிடைக்கும். . உங்கள் செயல்திறனில் முன்னேற்றம் காண்பீர்கள், உங்கள் வேலையில் நீங்கள் திருப்தி அடைவீர்கள். மறுபுறம், வணிக வர்க்கம் பல போராட்டங்களுக்குப் பிறகு எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகளைக் கொண்டு வரலாம். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 19

நல்ல நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

 கன்னி

கன்னி

கிரகங்களின் செல்வாக்கு காரணமாக, நீங்கள் இன்று மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். உங்களை நீங்களே கட்டுப்படுத்துவது நல்லது. இன்று எந்த பெரிய முடிவும் எடுப்பதைத் தவிர்க்கவும். தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும். அவர்களின் எந்த ஆலோசனையையும் நீங்கள் புறக்கணிக்காமல் இருப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே இன்று சில வாக்குவாதங்கள் எழலாம், அதனை பொறுமையாக சமாளிப்பது நல்லது. இல்லையெனில் அது பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12 மணி வரை

துலாம்

துலாம்

எந்தவொரு வேலையையும் தள்ளி போடாமல் உடனடியாக முடித்தால் இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமைய வாய்ப்புள்ளது. ஏழைகளுக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால் அதனை புறக்கணிக்காதீர்கள். வேலை செய்பவர்களின் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். எதிர்கால முதலீடுகள் செய்வதற்கு இது ஏற்ற நாள் அல்ல. நாளின் பிறபகுதியில் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

நல்ல நேரம்: மாலை 6:00 மணி முதல் 10:10 மணி வரை

 விருச்சிகம்

விருச்சிகம்

எப்போதும் விரக்தியில் இருப்பவர்கள், மகிழ்ச்சியில்லாமல் இருப்பவர்கள் போன்றவர்களிடம் இருந்து விலகியிருங்கள். ஏனெனில் அவர்களின் எதிர்மறை ஆற்றல் உங்களின் மீதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்ல உறவை வைத்திருங்கள். எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள், இல்லையெனில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உங்கள் மனைவியின் நடத்தை உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஒருவேளை இன்று நீங்கள் அவர்களிடமிருந்து சில பயனுள்ள ஆலோசனைகளையும் பெறுவீர்கள். உடல்நலம் பற்றி பேசினால், தோல் பிரச்சினை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தனுசு

தனுசு

இன்று நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்கு பொங்கி எழுவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் இன்று உங்கள் நாள் பயனற்ற விஷயங்களில் வீணடிக்கப்படலாம். உழைக்கும் மக்கள் திடீரென்று ஒரு பெரிய சிக்கலை எதிர்கொள்ளக்கூடும். உங்கள் வேலையில் ஒரு தடங்கல் ஏற்படக்கூடும், இதன் காரணமாக உங்கள் பணி சரியான நேரத்தில் முடிக்கப்படாது. நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பீர்கள். அதே நேரத்தில், வணிகர்களுக்கு இலாப நிலைமை உள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:25 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மகரம்

மகரம்

வேலையில் இருப்பவர்கள் இன்று சோம்பேறித்தனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் பணிகளைப் பற்றி விழிப்புடன் இருங்கள், சுறுசுறுப்பாக வேலை செய்யவும். முக்கியமான முடிவெடுக்க சிரமப்படுவீர்கள், மனதில் இருப்பதை உங்கள் அன்புக்குரியவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பணப்புழக்கம் இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும் வரவு அதிகமாக இருப்பதை போல செலவும் குறைவாக இருக்கும். இன்று வாகனத்தைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

கும்பம்

கும்பம்

வியாபாரத்தில் இருப்பவர்கள் இன்று வாடிக்கையாளர்களுடன் பேசும்போது சொற்களை கவனமாக பயன்படுத்தவும், இல்லையெனில் உங்கள் ஒரு சிறிய தவறு உங்கள் கடின உழைப்பை வீணாக்கும். மனஅழுத்தம் அதிகம் இருப்பவர்கள் தியானம் செய்வது நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் ஒரு ஆச்சரியத்தைப் பெறலாம், குறிப்பாக உங்கள் பெற்றோருடன் பேசிய பிறகு, நீங்கள் மிகவும் நன்றாக உணருவீர்கள். உங்கள் நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் உடல்நிலையைப் பொருத்தவரை, சிகரெட் மற்றும் ஆல்கஹால் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் உங்கள் உடல்நலம் குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:20 மணி முதல் இரவு 7:15 மணி வரை

மீனம்

மீனம்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டில் பெரியவர்க வழிகாட்டுதல் கிடைக்கும். பெற்றோருடனான உறவு வலுவாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். இன்று நீங்கள் பொழுதுபோக்கு வேடிக்கைக்காக கொஞ்சம் பணம் செலவிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாள் சாதகமாக இருக்கும். மனரீதியாக இன்று நீங்கள் நன்றாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 18

நல்ல நேரம்: மாலை 5:00 மணி முதல் 9:45 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, June 20, 2020, 5:00 [IST]
Desktop Bottom Promotion