For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாவம் இன்னைக்கு இந்த ராசிக்காரங்க நிம்மதியே இல்லாம தவிக்கப் போறாங்களாம்...!

|

உங்களின் ராசிதான் உங்களின் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்கான சாவி ஆகும். உங்களின் ராசியைக் கொண்டு வருங்காலம் மட்டுமின்றி உங்களின் ஒவ்வொரு நாளின் நிகழ்வுகளையும் கோள்களின் நகர்வுகள் கொண்டு முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.

இது உங்களை பல ஆபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும். இன்று உங்களின் ராசிக்கு என்னென்ன ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் காத்திருக்கிறது தெரியுமா?. இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று நீங்கள் வேலை விஷயமாக பயணம் செய்வதாக இருந்தால் அதற்கு தேவையான ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்ல மறந்துவிடாதீர்கள். ஒருவேளை இதனை எடுத்துச்செல்ல மறந்து விட்டாலும் அதனை நினைத்து கவலைப்படாதீர்கள், இது உங்கள் உடல்நிலையை மிகவும் மோசமாக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு மிதமாக இருக்கும். உங்களுக்காக இன்று கூடுதல் நேரத்தை நீங்கள் ஒதுக்குவீர்கள். உங்கள் மனைவியுடனான உறவு இனிமையாக இருக்கும், உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை, அதிர்ஷ்டமான எண் 6.

 ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்கள் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வாய்ப்புள்ளது, எனவே வேலையில் முழுகவனம் செலுத்துங்கள். நிதிநிலை சீராக இருக்கும், பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் தேடிவரும். தந்தையின் உதவி உங்களுக்கு பெரும் ஆறுதலாய் இருக்கும். ருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் ,. உங்கள் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கிடையில் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும் என்பதால், இன்று உங்கள் துணையின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பச்சை, அதிர்ஷ்டமான எண் 1.

மிதுனம்

மிதுனம்

குடும்பத்தில் மகிழ்ச்சியு, அமைதியும் நிலவும். உங்கள் மனைவியுடன் சிறிய வாக்குவாதங்கள் ஏற்படும் ஆனால் விரைவில் தீர்ந்துவிடும். அலுவலகத்தில் கிசுகிசுக்களிலிருந்து விலகி, நிலுவையில் உள்ள பணிகளையும் முடிக்க முயற்சிக்கவும். பொருளாதார முன்னணியில் இன்று ஒரு நல்ல நாள். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்புள்ளது. பயணம் செய்வதற்கு இந்த நாள் நல்லதல்ல. நீண்ட பயணத்தை மேற்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது உங்களுக்கு சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் கருநீலம், அதிர்ஷ்டமான எண் 2.

MOST READ: பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...!

 கடகம்

கடகம்

இன்று வேலை விஷயத்தில் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும், உங்கள் மனைவி உங்களுக்கு ஆதரவளிப்பார். உங்கள் தாராள மனப்பான்மையைப் பயன்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். எந்தவொரு நிதி முடிவுகளையும் எடுப்பதற்கு முன் நன்றாக சிந்தியுங்கள், ஏனெனில் இன்று ஒரு பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியமாக இருக்க, நல்ல உணவை சாப்பிடுவதோடு போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் அடர்நீலம், அதிர்ஷ்டமான எண் 6.

சிம்மம்

சிம்மம்

நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்துசேரும். இன்று நீங்கள் அதிக பணம் செலவழிக்கும் மனநிலையில் இருப்பீர்கள், ஆனால் அதனை தவிர்த்து சேமிக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கலாம். சில சிக்கல்களுக்கு உடனடி கவனம் தேவை, இல்லையெனில் அது உங்கள் வேலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். நீங்கள் முழுமையற்ற சில பணிகளை இன்று முடிப்பீர்கள். உங்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படலாம். இது உங்களுக்கு கொஞ்சம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், ஆனால் அமைதியான மனதுடனும் நல்ல திட்டமிடலுடனும் எல்லாம் சாத்தியமாகும். உங்கள் மனைவியுடன் உறவு நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள், அதிர்ஷ்டமான எண் 9.

கன்னி

கன்னி

பணத்தின் அடிப்படையில் இது மிகவும் சிற்பனன் நாளாக இருக்கும் உங்களின் நிதிநிலை மேம்படும். உங்களின் பழைய கடன்களை இன்று அடைத்துவிடுவீர்கள். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமண வாழ்க்கையிலும் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்கள் கூட்டாளருடன் பகிரங்கமாக உரையாட முயற்சி செய்யுங்கள், அவரிடம் / அவளிடம் பொய் சொல்ல வேண்டாம். வணிகம் தொடர்பான பயணம் நன்மை பயக்கும். நீங்கள் மாலையில் கோவிலுக்குச் செல்வது நல்லது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் ஊதா, அதிர்ஷ்டமான எண் 8.

துலாம்

துலாம்

உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் உங்களை தேடிவரும். வேலையில் இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் விரும்பிய அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள். இன்று நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பது நல்லது, இன்று உங்கள் மனைவியின் மூலம் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழலாம். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் இளஞ்சிவப்பு, அதிர்ஷ்டமான எண் 5.

விருச்சிகம்

விருச்சிகம்

அலுவலக சூழல் நன்றாக இருக்கும், மேலும் உங்கள் செயல்திறனும் மேம்படும். உங்களின் அனைத்து முயற்சிகளும் பலனளிப்பதால் இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று நீங்கள் ஒரு சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டால், உங்கள் அணுகுமுறையை நேர்மையாகவும் தெளிவாகவும் வைத்திருங்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் உணர்வுகளை உங்கள் துணைக்கு முன்னால் வெளிப்படையாக வெளிப்படுத்தலாம். இன்று சிக்கலைத் தவிர்க்க மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் பழைய மற்றும் முக்கியமான தொடர்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். இது பயணத்திற்கு நல்ல நாள் அல்ல. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் மெரூன், அதிர்ஷ்டமான எண் 7.

தனுசு

தனுசு

நேர்மறையான அணுகுமுறையுடன், உங்கள் திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள். காதல் வாழ்க்கையில் எல்லாம் இயல்பாக இருக்கும், உங்கள் துணையுடன் பரஸ்பர புரிதல் இன்று சிறப்பாக இருக்கும். கடந்த காலத்தில் எடுத்த ஒரு தவறான முடிவு இன்று உங்கள் நிம்மதியை கெடுக்கும். இன்று அதிக நேரத்தை தனிமையில் செலவழிப்பீர்கள், வேலை செய்பவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும். மூத்தவரின் அறிவுரைகளை பின்பற்றுவது நல்லது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு, அதிர்ஷ்டமான எண் 8.

மகரம்

மகரம்

உங்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் பெரியவர்களின் ஆலோசனையை கேளுங்கள், இது உங்கள் பிரச்சினைகளுக்கு கண்டிப்பாக தீர்வளிக்கும். உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் சரியான நேரத்தில் முடிக்கப்படும், அதே நேரத்தில் வணிக நபர்கள் கவனமாக இருக்கவும் உங்கள் கூட்டாளருடன் வாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் மனைவியின் மோசமான உடல்நிலை கவலைக்குரியதாக இருக்கும். இன்று கடன் கொடுக்க வேண்டாம். பெற்றோரின் அன்பு மற்றும் ஆதரவுடன் நீங்கள் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களுக்கு காயம் ஏற்படக்கூடும் என்பதால் இன்று ஆபத்தான வேலைகளை செய்வதைத் தவிர்க்கவும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை, அதிர்ஷ்டமான எண் 3.

கும்பம்

கும்பம்

திருமணமான தம்பதிகளுக்கு இன்று ஒரு சிறந்த நாள். உங்கள் அன்பு, நட்பு மற்றும் பிணைப்பு அதிகரிக்கும். உங்கள் துறையில் வெற்றியை அடைவீர்கள். நாள்முழுவதும் ஆற்றல் நிறைந்திருக்கும். . வணிக நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் நல்லதாக இருக்கும். இன்று எந்தவொரு விவாதத்தையும் தவிர்க்கவும், ஏனென்றால் விஷயங்கள் உங்களுக்கு எதிராக செல்லக்கூடும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் இது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பிங்க், அதிர்ஷ்டமான எண் 4.

 மீனம்

மீனம்

இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மறக்க முடியாத நாளாக இருக்கும். உங்கள் இருவருக்கும் இடையிலான அனைத்து தவறான புரிதல்களும் இன்று முடிவடையும். எல்லாவற்றையும் அன்பால் வெல்ல முடியும் என்று நீங்கள் உணருவீர்கள். இன்று நீங்கள் ஒரு சர்ச்சையில் சிக்கினால், நீங்கள் பொறுமை மற்றும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். பணவிஷயத்தில் இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும், உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் உங்களை வந்து சேரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் சாம்பல் நிறம், உங்களுக்கான அதிர்ஷ்டமான எண் 9.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 18th october 2019 Friday

Check out the daily horoscope for 18th october 2019 Friday.
Story first published: Friday, October 18, 2019, 6:00 [IST]