For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏகாதசி நாளில் சந்திரனால் இந்த 5 ராசிக்காரங்களும் ரொம்ப ஜாலியா இருப்பீங்க...

இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும்? கொரோனா லாக்டவுன்ல வீட்டுக்குள்ள இருந்தாலும் செய்ய வேண்டிய செலவு வந்துக்கிட்டுதான் இருக்கு.

|

திங்கட்கிழமையான இன்றைய தினம் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் ஏகாதசி திதியும் இணைந்து வருவது சிறப்பு. இந்த நாளில் யாருக்கெல்லாம் உற்சாகமாக இருக்கும் யாருக்கெல்லாம் சோர்வாக இருக்கும். யாருடைய வேலையில் வேகம் அதிகரிக்கும் யாரெல்லாம் தன்னம்பிக்கையும் தைரியத்தோடும் இந்த நான்காவது ஊரடங்கை எதிர்கொள்வார்கள் என்று பார்க்கிறீர்களா? உங்களின் கேள்விகளுக்கு விடை தருகிறது இன்றைய ராசிபலன்கள். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சந்திரன் சஞ்சாரத்தினால் விரைய செலவுகளும் சூரியனால் உற்சாகமும் அதிகரிக்கும். என்னதான் ஊரடங்கில் முடங்கி இருந்தாலும் என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்னு தைரியமாக இருப்பீங்க. சிலரோட ஊர்களில் தளர்வுகள் இருப்பதால் கடையை திறந்து வியாபாரத்தை தொடங்குவீங்க. சிலர் நீண்ட நாள் கழித்து ஆபிஸ் போகப்போறீங்க ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் கவனமாக இருங்க. இன்றைக்கு உங்களுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உச்சமடையும் ராசிக்காரர் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த உங்க ராசியில சூரியன், புதன் சுக்கிரன் கூடியிருப்பதால் நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. சிலர் ரொம்ப நாள் கழிச்சு வெளியூர் போக முயற்சி செய்வீங்க. பயணம் வெற்றிகரமாக முடியும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பழைய கடன்கள் வசூலாகும் வங்கி சேமிப்பு உயரும். ரொம்ப சந்தோஷமான நாளாக அமைஞ்சிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : வயலட்

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : காலை 9: 00மணி முதல் பகல் 11:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இன்றைக்கு குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். ஊரடங்கு தளர்த்திட்டாங்களேன்னு நீங்க பாட்டுக்கு வெளியே சுத்த வேண்டாம் இன்னமும் வைரஸ் பாதிப்பு நீங்கலை கவனமாக இருங்க இல்லாட்டி தேவையில்லாத டென்சன் ஏற்படும். வீட்ல சொந்த பந்தங்களோட கூடி இருந்த அருமையை உணர்ந்து நடந்துக்கங்க. வேலை செய்யிற இடத்தில இருந்து அழைப்பு வந்துக்கிட்டே இருக்கும் கவனமாக போய் வேலையை முடிச்சிக்கொடுத்துட்டு வாங்க.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3: 00மணி முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு கிரகங்கள் ரொம்ப சாதகமாக இருக்கு. இன்றைக்கு ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க என்றாலும் உங்களுக்கு டென்சன் தருவதற்காக சில உறவினர்கள் வரலாம் திடீர் செலவுகள் வரும். வேலை செய்யும் இடத்தில் சிலரை அனுசரித்து போய்த்தான் ஆகவேண்டும். சின்னதாக வேலைச்சுமை இருக்கும் அனுசரித்து போங்க. இன்றைக்கு சந்தோஷமாக நாளை அனுபவிப்பீங்க. தொட்டது துலங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 : 00மணி முதல் மாலை 5:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சூரியன் ஆதிக்கம் நிறைந்த சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு இன்றைக்கு கோபம் வரும் கவனமாக இருங்க. இன்றைக்கு சந்திராஷ்டமம் இருக்கு நிதானமாக எச்சரிக்கையாக இருங்க. எதையும் பொறுமையாக ஹேண்டில் பண்ணுங்க. ராத்திரியில கண் விழிக்காதீங்க. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பா இருங்க. எந்த காரணத்திலும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

கன்னி

கன்னி

புதன் ஆதிக்கம் நிறைந்த கன்னி ராசிக்காரர்களே, உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சினைகள் எளிதில் தீரும் வழக்குகள் சாதகமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அம்மா உடைய ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவீங்க. வியாபாரம் லாபகரமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட நீங்க இன்றைக்கு ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க ரொம்ப பரபரப்பாக இருப்பீங்க. ஷேர் மார்க்கெட்ல முதலீடு பண்ணுங்க. லாபம் பணவரவு அதிகமாக இருக்கும் கொடுத்த கடன்கள் வசூலாகும். எட்டாம் வீட்டில் கிரகங்கள் இருந்தாலும் சில காரியங்கள் தடைகள் தாண்டி முன்னேற்றம் வரும். கடைகளை பராமரிப்பு செய்து வியாபாரத்தை விரிவு செய்வீங்க. உங்க உடல்நிலை சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

அதிர்ஷ்ட எண் : 15

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12 : 00மணி முதல் பிற்பகல் 3 :30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இன்னைக்கு உங்களுக்கு சில பிரச்சினைகளும் தொல்லைகளும் வரலாம். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீங்க. வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் தீரும். புதிய வியாபாரம் தொடங்கலாமா என்று யோசிப்பீங்க. தடைகளை தாண்டி முன்னேறுவீங்க. கணவன் மனைவிக்குள்ள நெருக்கம் கூடும். வியாபாரத்தில லாபம் வரும். புது வாடிக்கையாளர்கள் வருவாங்க. கடன்சுமை குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : காலை 10: 45 மணி முதல் பிற்பகல் 1 :30 மணிவரை

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு ஆதரவாக கிரகங்கள் இருக்கின்றன. பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். பிள்ளைகள் கல்யாணம் சுபகாரியம் தொடர்பாக பேசுவீங்க. வீடு மாற நினைக்காதீங்க. நேரம் சரியில்லை. குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வைரஸ் தொற்று ஏற்படாமல் கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு ஆரோக்கியத்தில குறைபாடுகள் வரலாம் அக்கறை காட்டுங்க. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிடுங்க. இன்றைக்கு நீங்க உங்க வியாபாரத்தில கவனம் செலுத்துவீங்க. பிள்ளைகள், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்றைக்கு அதிரடி முன்னேற்றங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 : 00மணி முதல் மாலை 5:00 மணிவரை

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே இன்றைக்கு உங்களுக்கு சந்திரன் சாதகமாக இருக்கிறார். ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. வியாபாரத்தை உற்சாகமாக தொடங்குவீங்க. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை சாப்பிடுங்க. பங்குச்சந்தையில் பங்குகள் மூலம் லாபம் வரும் வேலையில் இருந்த நெருக்கடிகள் தீரும். உயரதிகாரிகளால் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு நிம்மதி தரும் நாளாக அமையப்போகிறது.

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 : 20 மணி முதல் இரவு 9 :00 மணிவரை

மீனம்

மீனம்

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் சுமாரான நாள்தான் அப்படி இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாக தன்னம்பிக்கையோட இந்த நாளை எதிர்கொள்வீங்க. சொந்தக்காரங்க மூலம் தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். ரொம்ப கோபப்படாதீங்க. நிதானமாக இருங்க. வியாபாரத்தில நல்ல மாற்றங்கள் வரலாம். குடும்ப விசயங்களை யார் கிட்டையும் ஷேர் பண்ணாதீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க சிக்கலாயிரும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 :00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 18th May 2020 Monday In Tamil

Check out the daily horoscope for 18th may 2020 monday in tamil. Read on...
Desktop Bottom Promotion