இன்றைக்கு மேஷம் விருச்சிகத்திற்கு கோபம் அதிகம் வருமாம்...

வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை இன்று சிலருக்கு சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். சந்திரன் சஞ்சாரத்தினால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் வரும், சந்திராஷ்டமத்தால் மேஷ

வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை இன்று சிலருக்கு சாதகமாக இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். சந்திரன் சஞ்சாரத்தினால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் வரும், சந்திராஷ்டமத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு கோபம் வரும். இன்றைய ராசி பலன்கள் எப்படி 12 ராசிக்காரர்களுக்கும் படித்து பலன் தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது நீண்ட தூர பயணம் வேண்டாம். பொருளாதார நிலை சுமார்தான். அதே போல உடல் ஆரோக்கியமும் சுமாராகவே இருக்கும். ஒரே ஒரு சந்தோஷம் காதல் துணையுடன் உற்சாகமாக நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்ப வாழ்க்கையும் குதூகலமாக இருக்கும். பண விவகாரங்களில் கவனம், கடன் கொடுக்க வேண்டாம், ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கித்தர வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று உங்களுக்கு ரொம்ப நல்ல நாள். சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். ரொமான்ஸ் ஆன நாள் காதல் துணையுடன் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நன்மைகள் நடக்கும். கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். விரும்பி இடத்திற்கு சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். உங்க உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 1:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் மறைகிறார். இன்று ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். கடன் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். நினைத்தது நிறைவேறும். காதல் விவகாரங்கள் கலகலப்பாக இருக்கும். உங்க துணை உங்களுக்கு சர்ப்ரைஸ் ஆக சில கிப்ட் கொடுப்பார்.

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்

கடகம்

உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளிடம் கவனமாக பேசுங்கள். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். பிற்பகுதியில் நல்ல செய்திகள் வந்து சேரும். வேலையில் சுமாரான நாள்தான். நிறைய வேலைகள் பெண்டிங் ஆகும். உங்க வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவு செய்யுங்கள். இல்லாவிட்டால் அதுவே சிக்கலாகிவிடும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு சில பிரச்சினைகள் வரும் அதை சாமர்த்தியமாக கையாளுங்கள். இன்று பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும். இன்று சில பிரச்சினைகள் காணப்படும். அவற்றை நீங்கள் சாமார்த்தியமாக கையாள வேண்டும். விவேகமாக நடந்து கொள்ள வேண்டும். பிறருடன் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். வேலைச்சுமை அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளுடன் மோதல் இருக்கும். காதல் துணையுடன் பொறுமையாக பேசுங்கள். உங்க பணத்தை

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 9:00 மணிவரை

கன்னி

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். அலுவலகத்தில் வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். அதை பத்திரமாக சேமிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும். இன்று முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். சந்தோஷம் அதிகம் தரக்கூடிய நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:30 மணிவரை

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைக்கு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.பண வருமானம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொறுமையாக இருங்க. நிதானம்தான் உங்களுக்கு ரொம்ப நல்லது. இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதற்றமாக இருப்பீர்கள். அதுவே சில தவறுகளை செய்யவைக்கும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பணத்தை கவனமாக கையாளுங்கள் இல்லாவிட்டால் நஷ்டப்பட நேரிடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்படுங்கள். இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அலுவலக சூழல் சில நேரங்களில் கோபத்தை ஏற்படுத்தும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிட்டும். பண வரவு சுமாராகத்தான் இருக்கும். இன்று காதல் வாழ்க்கையில் சுமாரான நாளாகவே இருக்கும். துணையுடன் விட்டுக்கொடுத்து போங்கள். உடல் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு இன்றைக்கு சந்திரன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுப விரைய செலவுகள் ஏற்படலாம். பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். எதையும் எதிர்கொள்ளும் மன நிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும் கட்டுக்கடங்காத செலவுகளை சமாளிக்க கடன் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

மகரம்

மகரம்

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பண வரவு அபரிமிதமாக இருக்கும் செய்யும் தொழிலில் லாபம் வரும். நிதிநிலைமை உற்சாகத்தை தரும் பணம் கையிருப்பு உற்சாகத்தை தரும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள்.

அலுவலகத்தில் உங்களுக்கு கொடுத்த வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபமும் வருமானம் அதிகரிக்கும். குடும்ப சூழ்நிலை குதூகலமாக இருக்கும். உற்சாகமான மனநிலை உடல் ஆரோக்கியத்தை அதிகமாக்கும். பூர்வீக சொத்து மூலம் பண வரவு அதிகரிக்கும். காதல் துணையுடன் சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் காலை 8:45 மணிவரை

மீனம்

மீனம்

சந்திரன் இன்று உங்களுக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அலுவலகத்தில் சக பணியாளர்களால் போட்டி பொறாமை ஏற்படும்.

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடுமையான உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பொருளாதார சூழ்நிலை சுமாராகத்தான் இருக்கும் இதுவே உங்களின் கவலையை அதிகரிக்கும். காதல் திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. உங்க துணை நீங்க சொல்வதை சரியாக புரிந்து கொள்ளாமல் பிரச்சினை வரலாம். உணவில் கவனம் செலுத்துங்கள் வயிறு பிரச்சினைகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, February 17, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion