Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
இந்த ராசிக்காரங்க வாயை அடக்கலைன்னா வாழ்க்கையில நிறைய பிரச்சனைய சந்திப்பாங்க....
இன்றைய தினம் கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மவுன விரதம் இருப்பது நல்லது. இன்றைய தினம் யாருக்கு பணவரவு யாருக்கு செலவு வரும் என்று பார்க்கலாம்.
இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மிதுனம் ராசியில் ராகு கன்னி ராசியில் சந்திரன் செவ்வாய், துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன், விருச்சிகத்தில் புதன், குரு, தனுசு ராசியில் கேது, சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இன்றைய தினம் கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மவுன விரதம் இருப்பது நல்லது. இன்றைய தினம் யாருக்கு பணவரவு யாருக்கு செலவு வரும் என்று பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.05 மணி முதல் இரவு 10.45 வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
அதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். மேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருள் சேரும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் மாலை 4.55 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 22
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 42
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண் : 30
அதிர்ஷ்ட நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 14
அதிர்ஷ்ட நேரம் : இரவு 7 மணி முதல் இரவு 9.05 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 25
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 13
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.30 மணி வரை இரவு 10 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 முதல் மதியம் 3 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1.30 மணி முதல் 10 மணி வரை



Click it and Unblock the Notifications
