Latest Updates
-
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறப் போகுது தெரியுமா?
இன்றைய தினம் ஏதாவது லக் அடிக்குமா? ஏதாவது அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப
இன்றைய தினம் ஏதாவது லக் அடிக்குமா? ஏதாவது அதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெறுமா? ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா? கடின உழைப்புக்கு நமக்கு ரிவார்ட் கிடைக்குமா? என்று நினைக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களைப் படியுங்கள் உங்க அனைத்து கேள்விக்கும் விடை கிடைக்கும்.

மேஷம்
உங்களுக்கு இன்றைக்கு காதலான நாள். வேலை சுமாராக இருந்தாலும் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமும் சௌக்கியமும் அதிகரிக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கூட்டுத்தொழில் வளர்ச்சி அடையும். இன்று பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

ரிஷபம்
இன்றைக்கு உங்களுக்கு பணவருவாய் அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மிதுனம்
உங்களுக்கு எதிரிகள் தொல்லைகள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வேலையில் இடமாற்றம் கிடைக்கும். காதல் வாழ்க்கை கலகலப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

கடகம்
இன்றைக்கு உங்களுடைய சுக ஸ்தானத்தில் இருக்கும் சந்திரனால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிலும் கவனம் தேவை. நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும். பணவரவு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ கலர்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

சிம்மம்
இன்றைக்கு உங்க தைரியம் தன்னம்பிக்கை கூடும். உங்களுக்கு வெற்றிகள் தேடி வரும் நாள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்க வருமானம் இரட்டிப்பாகும். பணவரவு அற்புதமாக இருக்கும். இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். உடல் நலம் சுமாராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

கன்னி
உங்களுக்கு இன்றைக்கு ஆரோக்கியமான நாள். சுறுசுறுப்பாக இருப்பீங்க. இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்க காதல் வாழ்க்கை கவலையை தரும். மண வாழ்க்கை மன நிம்மதியை குறைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

துலாம்
உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் உள்ள சுக்கிரன் பார்வை கிடைக்கிறது. இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் நன்மைகள் நடக்கும். உங்களுக்கு வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். நோய்கள் நீங்கும். சந்தோஷமான நாளாக அமையப்போகிறது. குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

விருச்சிகம்
உங்களுடைய நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளிநாட்டு பயணத்திற்காக செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உங்க உடல் நலம் அற்புதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீங்க. காதல் துணையோடு கலகலப்பாக வலம் வருவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

தனுசு
நீங்க செய்யும் தொழிலில் இன்றைக்கு லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களுக்கு இன்றைக்கு பணவரவு அதிகமாக இருக்கும். செல்வம் செல்வாக்கு கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்
இன்றைக்கு நீங்க செய்யும் வேலையில் உற்சாகம் அதிகமாகும். மாணவர்களுக்கு ரொம்ப நல்ல நாள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். இன்று குடும்பத்தில் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். அது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை உங்க கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.
காதல் துணையோடு இன்றைக்கு நீங்க டேட்டிங் போவீங்க. மண வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : பிற்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உங்க உடன்பிறந்தவர்கள் மூலம் இன்றைக்கு உங்களுக்கு உதவி கிடைக்கும்.
உங்க உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கை துணையோடு அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பீர்கள். உற்சாகமான நாளாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

மீனம்
இன்றைக்கு உங்க உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் கவனமாக இருங்க. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். இன்றைக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. சுப காரிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தேன் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வந்து சுப காரியங்கள் செய்யலாம். கூடுமானவரைக்கும் வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். உங்க வாழ்க்கை துணை உங்களை புரிந்து கொள்வார் திருமண பந்தந்தை திகட்ட திகட்ட அனுபவிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை



Click it and Unblock the Notifications











