இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?

ஒவ்வொரு நாளும் கிரக நிலைகளைப் பொறுத்து 12 ராசிக்காரர்களின் பலன்களும் வேறுபடும். அதுவும் சமீபத்தில் சனிப் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சிக்கு பின், பலரது வாழ்க்கையே மாறியிருக்கும். உங்களுக்கு இன்றைய த

ஒவ்வொரு நாளும் கிரக நிலைகளைப் பொறுத்து 12 ராசிக்காரர்களின் பலன்களும் வேறுபடும். அதுவும் சமீபத்தில் சனிப் பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சிக்கு பின், பலரது வாழ்க்கையே மாறியிருக்கும். உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், இன்றைய ராசிப்பலனைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் சிலர் உங்களை எரிச்சலடையச் செய்யலாம். அம்மாதிரியான சூழ்நிலைகளில் பொறுமையாகவும், அமைதியுடனும் பணியை செய்யுங்கள். இன்று அலுவலகத்தில் அதிக வேலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களுடன் சேர்ந்து வேகமாக செயல்பட்டால், வெற்றியை அடைவீர்கள். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். மற்றவர்களின் மீதுள்ள கோபத்தை உங்கள் வாழ்க்கைத் துணையிடம் காண்பித்து, அவர்களை வருத்தப்பட செய்வீர்கள். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக வழக்கமான பரிசோதனையை மேற்கொள்ளாமல் இருந்தால், இன்று அதை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5 மணி முதல் காலை 9.50 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் சிறு இடையூறுகள் இருந்தாலும், வெற்றிப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வர்த்தகர்கள் தங்களின் பங்குதாரர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இன்று குடும்பத்திற்கு மிகவும் முக்கியமான நாள். வீட்டில் உள்ள பிரச்சனைகளை நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்கள் நுழைய அனுமதிக்காதீர்கள். பொருளாதார நிலைமை சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 14

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று அன்பானவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்பு கிட்டும். குடும்பத்துடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை கவனமாக முடிக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் உயர் அதிகாரிகள் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை அளிக்காதீர்கள். சொந்தமாக தொழில் செய்பவர்கள், புதிய வேலைக்காக பயணத்தை மேற்கொள்வீர்கள். பணத்தின் அடிப்படையில் இன்று சிறப்பான நாளாக இருக்கும். எதிர்காலத்திற்காக சிறிது பணத்தை முதலீடு செய்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் மிகவும் கவனமாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நேரம் : காலை 10.30 மணி முதல் மதியம் 2.40 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். செலவுகளைப் பொறுத்தவரை, இன்று அதிகமாக செலவழிப்பீர்கள். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. வேலையில் நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் வேலையால் திருப்தியடைவதோடு, சந்தோஷப்படுவார்கள். இன்றைய தினம் சக ஊழியர்களுடன் ஆனந்தமாக இருக்கும். நீங்கள் வணிகத்தைத் தொடர விரும்பினால், உங்கள் திட்டங்கள் எதுவும் இன்று வெற்றிகரமாக முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நாட்கள் சாதகமானவை.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 6.30 மணி முதல் காலை 9.40 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களின் மனம் அமைதியற்றதாக இருக்கும். நீங்கள் உங்களின் எண்ணங்களை அன்பிற்குரியவர்களிடம் பகிர்வதன் மூலம் ரிலாக்ஸ் ஆவீர்கள். இன்று அலுவலக வேலையில் சிறப்பு எதுவும் இருக்காது. இன்று அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் செய்யலாம். நீங்கள் வரம்புகளை மீறாமல் இருந்தால், பிரச்சனையில் சிக்காமல் இருப்பீர்கள். இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். தொழில் செய்பவர்கள் இன்று முக்கியமான வேலைகளை செய்வதாக இருந்தால், அதை ஒத்தி வைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.45 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நிறைய செலவு செய்வீர்கள். அலுவலகத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று ஒரு நற்செய்தி கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு வலுவாக இருக்கும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடற்பயிற்சியுடன் சரிவிகித டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 22

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5 மணி முதல் காலை 9.50 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று குடும்ப சூழ்நிலை அமைதியாக இருக்கும். இதுவரை தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமாக இருப்பீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் இன்று வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இன்று சுய நயவாதிகளை சந்திப்பீர்கள். அத்தகையவர்களிடம் இருந்து சற்று விலகி இருங்கள். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். இன்று உற்சாகமாக இருங்கள், ஏனெனில் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் வாழ்க்கைத் துணையுடன் காதல் ஆழமடையும், பரஸ்பர பிணைப்பும் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் சற்று சோர்வுடனும், மன அழுத்தத்துடனும் இருப்பீர்கள். உங்கள் மீது அதிக கவனத்தை செலுத்துங்கள். மற்றவர்களுக்காக உங்களின் சந்தோஷத்தை தியாகம் செய்யாதீர்கள். இன்று பலம் வாய்ந்த ஒரு முக்கியமான நபரை சந்திப்பீர்கள். மேலும் அவர்களை நீங்கள் சிறப்பாக ஈர்ப்பீர்கள். இன்று அலுவலகத்தில் உங்கள் பாஸின் மன நிலை சற்று மோசமாகத் தான் இருக்கும். இம்மாதிரியான நேரத்தில், உங்களின் சிறு கவனக்குறைவும் பெரிய சுமையாக இருக்கும். பண விஷயத்தில் இன்றைய தினம் சாதாரணமாக இருக்கும். இன்று நிறைய சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் சிறப்பானது அல்ல.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 19

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.30 மணி முதல் இரவு 7.55 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தோஷமும், அமைதியும் இருக்கும். பெற்றோரிடம் இருந்து அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். இன்று உங்கள் அன்பானவர்களுடன் சிறந்த நேரத்தை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதுவரை அவர்களுக்கு நீங்கள் அளித்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றால், இன்று அதை நிறைவேற்ற சிறந்த நாள். வேலையைப் பொறுத்தவரை, இன்று சிறப்பான நாள். அலுவலகத்தில் முக்கியமான பணியை முடிக்க உங்கள் உயர் அதிகாரிகளின் உதவியுடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், பிரச்சனை மோசமாகிவிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்காது. இருந்தாலும் முக்கியமான பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பைக் கண்டு அனைவரும் பாராட்டுவார்கள். இதனால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று நண்பர்களுடன் பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் அதிக கவனத்தை செலுத்துவீர்கள். வீட்டின் நிலைமை மேம்படுத்த உறுதியான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள், சரியான முடிவுகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீண்ட காலமாக இயங்கி வந்த வேலை இன்று முடிவிற்கு வரும். நிதி நிலைமை மேம்படும். புதிய வருமானத்திற்கான ஆதாரத்தைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.55 மணி முதல் இரவு 11 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் ஏதேனும் தவறுகளை செய்திருந்தால், அதை உங்கள் வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வர். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் எதிர்பார்த்த பலனைப் பெறமாட்டீர்கள். இம்மாதிரியான சூழ்நிலையில், எரிச்சல் அடைவதற்கு பதிலாக, தைரியமாக தொடர்ந்து வேலை செய்தால், பிரச்சனை தீரும். இன்று அலுவலகத்தில் சற்று தீவிரமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சிறு கவனக்குறைவும் பெரிய சிக்கலை உண்டாக்கும். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 15

அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பெரிதும் பாராட்டப்படும். உங்கள் உயர் அதிகாரி உங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பதோடு, ஒரு முக்கியமான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க உங்களுக்கு வாய்ப்பளிப்பர். உங்களுக்கு மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், சரியான முடிவுகளை எடுக்க அனுபவமுள்ள நபரை அணுகவும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து ஸ்பெஷலான பரிசைப் பெறுவீர்கள். நிதி விஷயத்தில், இன்று நன்றாக இருக்கும். இன்று உங்களின் அதிகமான வருமானத்தினால், பெரிய செலவுகளை சந்தித்தாலும், எந்த நிதி சிக்கலையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 13

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, December 10, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion