Just In
- 35 min ago
இனிமே லேபிள்களில் இந்த வார்த்தைகள் இருக்கும் உண்வுப்பொருட்களை வாங்காதீர்கள்... இது உயிருக்கே ஆபத்தாகலாம்...!
- 2 hrs ago
டேட்டிங் பத்தி ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன தெரியுமா?
- 3 hrs ago
உங்க காதலன்/காதலிக்கு காதலை விட பணம்தான் முக்கியம் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா?
- 5 hrs ago
உங்க உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா?
Don't Miss
- Sports
உணர்ச்சிவசப்பட்ட ஆர்சிபி ஸ்பின்னர்... அழுதேவிட்ட மனைவி... என்ன காரணம்?
- Automobiles
அசத்தலான நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள்அறிமுகம்... 100 கிமீ ரேஞ்ச், தோதான விலை... வேறென்னங்க வேணும்!
- Movies
போனி கபூரின் பிரம்மாண்ட பட ரீமேக்கில் உதயநிநிதி...ஹீரோயின் இவர் தான்
- Finance
30 நிமிடத்தில் 5 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ், நிப்டி சரிவு..!
- News
இரு கைகளை கூப்பி கேட்கிறேன்.. 3 கட்ட தேர்தல்களை ஒன்றாக்குங்கள்.. தேர்தல் ஆணையத்திடம் மம்தா கோரிக்கை
- Education
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிவர் புயலிலிருந்து தப்பிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இழப்பு ஏற்படாதவாறு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இயற்கை சீற்றங்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம். குடிக்க நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) ட்விட்டரில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பகிர்ந்துள்ளது. நிவர் புயலுக்கு முன்னும் பின்னும் சில செயல்களைச் செய்யக்கூடாது என்று பரிந்துரைத்தது. அதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

அதீத கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியில் அதீத மழை பெய்யும் என்றும், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமும் இந்த நேரத்தில் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா...இரத்த அழுத்தம் குறைவதோட உங்க எடையும் குறையுமாம்

பேனர்கள் அகற்ற உத்தரவு
நிவர் புயலால் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பேனர் மற்றும் பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பேனர் மற்றும் பலகையினால் ஏற்படும் இழப்பை தடுக்க அரசு இந்த நவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வதந்திகளை நம்பாதீர்கள்
முதலில் வதந்திகளை புறக்கணிக்கவும். அமைதியாக இருங்கள், பீதி அடைய வேண்டாம். ஏனெனில், இது உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். அரசு கூறும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் நம்புகள். அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

பாதுகாப்பாக இருங்கள்
மொபைல் போன்களை முழுவதுமாக சார்ஜ் செய்யுங்கள். பவர் பேங்கில் சேமித்து வையுங்கள். மின்சாரம் இல்லாத நேரத்தில் வானொலியைக் கேளுங்கள். புயல் வீசும்போது, மின் இணைப்புகள் மற்றும் எரிவாயு விநியோகத்தை அணைக்கவும். உங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்கவும். உங்கள் வீடு பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், புயலுக்கு முன்பே பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுங்கள். இல்லையெனில், அரசு முகாம்களுக்கு செல்லுங்கள்.
MOST READ: உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் சர்க்கரை அளவை குறைக்கவும் இந்த ஒரு தேநீர் போதுமாம்...!

வெளியே செல்வதை தவிர்க்கவும்
முதலில் வெளியே செல்வதை தவிர்க்கவும். இந்த நேரங்களில் சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம். உடைந்த மின் கம்பம், கம்பிகள் மற்றும் பிற கூர்மையான பொருள்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். உறுதியான பாதுகாப்பான இடங்களில் மட்டுமே கால்நடைகளை கட்ட வேண்டும்.

மருந்து பொருட்கள் அவசியம்
அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல் குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள், மருந்து பொருட்கள், பயன்பாட்டு பொருட்களையும் முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். முதலுதவி பாக்ஸை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

அத்தியாவசிய பொருட்கள்
பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழ வகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் கொண்டைக் கடலை, பிஸ்கெட், நாப்கின், மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.
கொரோனா தாக்கும் அதிக ஆபத்துள்ள உடல் பருமானவர்கள்... இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் தெரியுமா?

மின்சாரம் தொடர்பான பாதுகாப்பு
புயல் பாதிப்பு இல்லை என்றாலும் அதிக மழை பெய்யும் நேரத்தில் மின்சாரம் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் மிக மிக அவசியம். லைட்களை பொருத்துவதற்கு முன்பும், பின்பும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள் இருந்தால் உடனடியாக மாற்றிவிட வேண்டும். எர்த் பைப் என்பது மிகமுக்கியம். அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்துக்கொள்ள வேண்டும். மின்கம்பத்தில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும்

ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும்
அடையாள ஆவணங்களான ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உரைகளைக் கொண்டு பாதுகாப்பாக கட்டி, பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.

வாகனப் பாதுகாப்பு
வாகனங்களை சாலையில் மரங்களின் கீழ் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். பலமான கட்டடங்களின் கீழ் கார், பைக் போன்றவற்றை நிறுத்தலாம். புயல் வீச வாய்ப்புள்ள இடங்களின் மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றின் கீழ் நிறுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் மழைநீர் தேங்கும் இடங்களிலும் வாகனத்தை நிறுத்த வேண்டாம்