For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் 1000 பேரை பொழுதுபோக்கிற்காக கொன்ற கொடூர அரசன்... உலகின் படுபயங்கரமான ஆட்சியாளர்கள்...!

|

மனித குலத்தின் வரலாறு என்பது பல தனித்துவமான மனிதர்களால் நிறைந்தது. அதில் பலர் தங்களின் நேர்மையான வாழ்க்கையாலும், வீரத்தாலும் அழியா புகழ் பெற்றுள்ளனர். அதேசமயம் சிலர் தங்களின் கொடூர குணத்தாலும், தாங்கள் செய்த அளவற்ற கொலைகள் மூலமும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அரசர்கள் தங்களின் வீரத்தை நிரூபிக்கவும், எல்லையை விரிவுபடுத்தவும் போர்களில் ஈடுபட்டு எண்ணற்ற உயிர்களை கொல்வார்கள். ஆனால் சில அரசர்கள் தங்களின் அதிகார வெறிக்காகவும், தங்களின் கொடூர எண்ணத்தினாலும் தங்களின் சொந்த மக்களையே சித்திரவதை செய்து கொடூரமாக கொன்றுள்ளனர். அந்த வகையில் எண்ணற்ற மக்களை கொன்று வரலாற்றில் இடம்பிடித்துள்ள சில ஆட்சியாளர்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 விளாட் டெப்ஸ்

விளாட் டெப்ஸ்

சாடிஸ்ட் கிங் என்ற பட்டத்தை பெற்ற வரலாற்றின் கொடூரமான தண்டனை வழங்கும் அரசராக இவர் அறியப்படுகிறார். மனித வரலாற்றில் கொடூரமான சம்பவம் என்னவென்றால், அவர் 20,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தோலுரித்து, வேகவைத்து, கழுத்தை நெரித்து, தூக்கிலிட்டு, உயிருடன் புதைத்து, ஆணியடித்து என பல கொடூரமான வழிகளில் கொன்று குவித்தார். இவரது ஆட்சிக்கலாம் ரோமானியாவின் சோதனைக்காலம் என்று கூறப்பட்டது.

ரஷ்யாவின் ஐவன் IV

ரஷ்யாவின் ஐவன் IV

இவர் ஒரு ஈவில் கிங் என்று அழைக்கப்படுகிறார், ஏனெனில் இவர் மக்களை துன்புறுத்துவதை இவர் மிகவும் விரும்பினார். மேலும் ஒவ்வொரு நாளும், சுமார் 500 முதல் 1000 பேர் வரை அவரது படைகளால் அவரது நீதிமன்றத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இன்றும் உலகின் மோசமான அரசர்களில் இவரின் பெயர் தவறாமல் இடம்பெறும்.

ஹிட்லர்

ஹிட்லர்

இவர் நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தார் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாசிச கொள்கைகளை முன்வைத்தார். ஜெர்மனியின் யூதரல்லாதவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி முழு ஜெர்மனியையும் ஒன்றிணைத்தார். அவரது கொள்கைகள் இரண்டாம் உலகப் போரைத் தூண்டியது மற்றும் ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்படும் இனப்படுகொலைக்கு வழிவகுத்தது, இதன் விளைவாக சுமார் 6 மில்லியன் யூதர்கள் மற்றும் 5 மில்லியன் போராளிகள் அல்லாதவர்கள் கொல்லப்பட்டனர். உலக வரலாறு ஒருபோதும் ஹிட்லரின் பெயர் இல்லாமல் முழுமையடையாது.

வாய்பிளக்க வைக்கும் 'மாயன்'களின் மிருகத்தனமான கலாச்சார சடங்குகள்... அதிர்ச்சியாகம படிங்க...!

கிங் ஃபிரான்

கிங் ஃபிரான்

சுயநலமும், ஆணவமும் ஒருசேர நிறைந்த எகிப்தின் மிக மோசமான சர்வாதிகாரியாக இவர் இருந்தார். அவர் தன்னை கடவுள் என்று அறிவித்து, அவரை ஒரு கடவுளாக நம்பவும் வணங்கவும் மக்களை கட்டாயப்படுத்தினார், அதற்கு மறுத்த மக்களுக்கு அவர் மிகவும் மோசமான மற்றும் பரிதாபகரமான தண்டனைகளை வழங்கினார். புராணக்கதைகளின் படி, அவரது மரணத்திற்கு பிறகு பஞ்சபூதங்கள் அவர் உடலை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் விளைவாக, அவரது இறந்த உடல் இன்னும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மாசிடோனின் அலெக்சாண்டர் III

மாசிடோனின் அலெக்சாண்டர் III

இவர் தனது ஆட்சிக்காலத்தில் ஆசியா வழியாக வடமேற்கு ஆப்பிரிக்கா நோக்கி தனது படைகளை வழிநடத்தினார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் போர்க்களத்திலும், ஒரு பெரும் லட்சியத்திற்காகவும் வாழ்ந்தார். அவர் அதிகப்படியான மது அருந்துவதிலிருந்தும் அடிக்கடி எழுந்த ஒரு கட்டுப்பாடற்ற மனநிலையினாலும் அவர் அவதிப்பட்டார். அவரின் மோசமான மனநிலையால் அவரது படையை சேர்ந்த பலரும் அவர் கையாலும், போரிலும் இறந்தனர்.

 ஜோசப் ஸ்டாலின்

ஜோசப் ஸ்டாலின்

எந்தவொரு சர்வாதிகாரியையும் விட அதிக அரசியல் அதிகாரத்தை மோசமாக அவர் பயன்படுத்தியதால் அவர் வரலாற்றில் மிகவும் ஆபத்தான மற்றும் கொடூரமான ஆட்சியாளராக கருதப்படுகிறார். தனது 29 ஆண்டுகால ஆட்சியில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்ததற்கு அவர் காரணமானார்.

இந்த பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு உடலுறவில் எப்போதும் ஆசை தோன்றாதாம்...

பெல்ஜியத்தின் லியோபோல்ட் II

பெல்ஜியத்தின் லியோபோல்ட் II

இவர் பெல்ஜியத்தின் அரசராக இருந்தார், காங்கோ சுதந்திர அரசை மிருகத்தனமாக சுரண்டியதற்காக இவர் நன்கு அறியப்பட்டவர், ஏனெனில் அவரது கட்டாய உழைப்புக் கொள்கையின் விளைவாக 3 மில்லியனுக்கும் அதிகமான காங்கோ மக்கள் இறந்தனர். மக்களின் உழைப்பை உறிஞ்சுவதில் உலகின் மற்ற அரசர்களை விட இவர் கொடூரனமானவராக இருந்தார்.

அட்டிலா தி ஹன்

அட்டிலா தி ஹன்

இவர் மனித வரலாற்றின் தீய ஆட்சியாளர்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். அவரது கடைசி படையெடுப்புகள் இரத்தக்களரிப் போராக நினைவுகூரப்பட்டுள்ளன, ஏனெனில் அவர் கிராமப்புறங்களை ஆக்கிரமித்து, கிராம மக்கள் அனைவரையும் படுகொலை செய்தார். அவர் படையெடுக்கும்இடத்தில் இருக்கும் ஒருவரையும் உயிரோடு விடமாட்டார்.

செங்கிஸ் கான்

செங்கிஸ் கான்

இவர் மங்கோலியத் தலைவராக இருந்தார், இராணுவ அமைப்பு, அரசியல் தந்திரம் மற்றும் இரத்தவெறி பயங்கரவாதத்தால் புகழ் பெற்றவர். இவர் ஒவ்வொரு போருக்குப் பிறகும் பிழைத்தவர்களின் குறிப்பிட்ட உயரத்தை வெட்டிவிடுவார் என்று நாட்டுப்புற கதைகள் உள்ளது. இவர் 40 மில்லயன் மக்களின் இறப்பிற்கு காரணமாக இருந்தார்.

இந்தியாவை ஆண்ட டாப் 10 மன்னர்கள்... லிஸ்ட்டில் இருக்கும் ஒரேயொரு தமிழ் மன்னர் யார் தெரியுமா?

மாக்சிமிலியன் ரோபஸ்பியர்

மாக்சிமிலியன் ரோபஸ்பியர்

இவர் ஒருபோதும் தன்னை சுற்றியிருந்தவர்களை நம்பாமல் இருந்தார், அதனால் அவர் தான் சந்தேகப்படும் அனைவரையும் எந்தவித விசாரணையும் இல்லாமல் தலையை துண்டித்தார். ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்காக சுமார் 5 மில்லியன் மக்களை அவர் தலை துண்டித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cruellest Kings In Human History

Check out list of cruellest kings in human history.
Story first published: Saturday, June 27, 2020, 12:54 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more