Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
கால சர்ப்ப தோஷத்தில் பிறந்த சார்வரி: கொரோனா பாதிப்பு நீங்க இந்த பரிகாரங்களை பண்ணுங்க...
கொரோனா வைரஸ் பிடியில் உலகமே சிக்கிக்கொண்டிருக்கிறது. மிதுனம் ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராகுவின் ஆதிக்கம் உள்ளதால் வைரஸ் வீரியமாக பரவி வருகிறது.
சார்வரி புத்தாண்டு தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளது. இது கேதுவின் நட்சத்திரம். எதிரே மிதுனம் ராசியில் ராகு திருவாதிரை நட்சத்தில் சஞ்சரிக்க சூரியன், சனி, குரு, புதன், சுக்கிரன் உள்ளிட்ட நவ கிரகங்களும் ராகு கேதுவின் பிடியில் சிக்கியிருக்கும் கடுமையான கால சர்ப்ப தோஷத்தில் பிறந்துள்ளது. 2020ஆம் ஆண்டு ராகுவின் ஆண்டு. ராகுவினால் ஏற்படும் விஷத்தன்மையுள்ள வைரஸ் நோய் பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்களை பாதித்து பல லட்சம் உயிர்களை குடித்துள்ளது. ராகு கேதுவினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும் கொரோனா வைரஸ் பிரச்சினை தீரவும் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.

ஒருவரின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தாலே திருமண தடை, பொருளாதார தடை, புத்திர பாக்கிய தடை ஏற்படும். அதற்கேற்ப பரிகாரம் செய்தால் பாதிப்புகளும் தடைகளும் நீங்கும். அதுபோலத்தான் இப்போது நீசமடைந்த புதன் வலிமை குன்றிய குருவினால் நாடு முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் நீங்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
பொதுவாகவே கண்திருஷ்டி, தோஷங்கள் இருந்தால் நிதி நிலைமை மோசமடையும், உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். தோஷங்கள் குறைய ஒவ்வொருவரும் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்கும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் சரியாகும்.

காலசர்ப்ப தோஷம்
சார்வரி ராகுவின் ஆண்டு, 2020 ராகுவின் எண். ராகு சாபத்தையும் தோஷத்தையும் கொடுத்து இருப்பதால்தான் இந்த கொரோனா வைரஸ் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கோள்சார ரீதியாக கிரகங்கள் அனைத்துமே ராகு கேதுவின் பிடியில் சிக்கியுள்ளன. ராகு ஆசையை தூண்டுபவர். கேது ஆசையை தடுப்பவர். ராகு அள்ளிக்கொடுப்பார். அது செல்வம் செல்வாக்கு மட்டுமல்ல நோய்களையும் கூடத்தான். ராகுவின் தோஷம் நீங்க அன்னை பராசக்தியை வணங்க வேண்டும். கேது ஞான காரகன். கேதுவினால் ஏற்படும் பாதிப்பு நீங்க விநாயகரை வணங்க வேண்டும்.

வேப்பிலை ஆற்றல்
இந்த ஆண்டு ராகு கேதுவின் எதிர்மறை ஆற்றல் சக்தி இப்போது ஆட்டுவிக்கிறது. வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவி மக்களை முடக்கிப் போட்டுள்ளது. பொறுமையும் தன்னம்பிக்கையும் வேண்டும். எதிரிகளுக்கு அச்சம் தரக்கூடிய அன்னை பராசக்தி. ராகுவின் அதி தேவதை துர்க்கை, தன்னம்பிக்கை தைரியத்தை அதிகரிப்பவள் அன்னை. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க வேண்டும். பராசக்திக்கு பிடித்த மஞ்சள், வேப்பிலையை வாசலில் தெளியுங்கள். வேப்பிலை கொழுந்து சாப்பிடுங்க. வீட்டு வாசலில் வேப்பிலையை கட்டி வைக்கலாம்.

அருகம்புல் ஆற்றல்
விநாயகரின் அதி தேவதை கேது. சித்தி, புத்தி, ஞானம் கொண்டவர் பொறுமைசாலி. நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர் விநாயகர். வித்தை வசப்படும். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். அருகம்புல் நெருப்பை கட்டுப்படுத்தும். உடல்பிலும் மனதிலும் அனலாய் தகித்தாலும் விநாயகரை அருகம்புல் சாற்றி வணங்க புத்தியும் மனதும் தெளிவடையும்.

தோஷம் நீக்கும் கல் உப்பு நீர்
கடல் நீர் அதிகம் இருப்பவர்கள் கடலில் குளிக்கலாம். அப்படி கடல் அருகில் இல்லாதவர்கள் கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் போட்டு குளிங்க. இது புனித குளியல். கல் உப்பு தோஷம் நீக்கும் உடம்பில் எதிர்மறை சக்தியை நீக்கும். கல் உப்பை கை பிடி அளவு எடுத்து வாளியில் போட்டு குளிங்க இப்போ இருக்கிற சூழ்நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை குளிங்க. கல் உப்பு போட்டு வீடு துடைக்கலாம்.

எளிமையான உணவுகள்
செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடுங்க. அசைவ உணவு ஜீரணமாவதில் தாமதம் ஏற்படும். அசைவம் உணவுகள் அதிகம் இருக்கும் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து இருப்பார் எனவே இன்றைய காலகட்டத்தில் அசைவத்தை தவிர்த்து சைவம் சாப்பிடுங்கள். புளிப்பான உணவுகளை சாப்பிடலாம். புளிசாதம், எலுமிச்சை சாதம் வாரம் ஒருமுறை சாப்பிடலாம். னசரி இனிப்பு சாப்பிடாதீங்க. கசப்பான வேப்பிலை கொழுந்து கிள்ளி சாப்பிடுங்க ரொம்ப நல்லது.

பானகம் குடிங்க
பயமற்ற கிரகம் ராகு. நோய் மூலம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுவார் ராகு. உடம்பில் உள்ள விஷத்தன்மையை போக்க உணவையே மருந்தாக உட்கொள்ள வேண்டும். ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்கு பற்கள், நரம்பு பிரச்சினை, காது மூக்கு பிரச்சினைகள் நீங்கும்.
எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுங்க. பானகம் சாப்பிடுங்க. பானகத்தில் புளிப்பு கொஞ்சம் இனிப்பு கலந்திருக்கும். உடலில் எனர்ஜியை அதிகரிக்கச் செய்யும். கொய்யா காய் சாப்பிடுங்க. அடிக்கடி சாப்பிடுவது நல்லது நரம்பு, பற்கள் பிரச்சினை நீங்கும்.

வீட்டிலேயே பிரசாதம்
தயிர்சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் என பல வகை பிரசாதங்களை கோவில்களில் படைத்து அதை பிரசாதமாக தருகின்றனர். இந்த கால கட்டத்தில் வீட்டிலேயே பிரசாதம் கொஞ்சம் செய்து பூஜை அறையில் படைத்து அதை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் சர்க்கரை பொங்கல் சிறிதளவு சாப்பிடுங்க.

வைரஸ் பாதிப்பு நீக்கும் தர்ப்பை புல், மயில் தோகை
நம் வீட்டின் பூஜை அறையில் மயில் தோகை, தர்ப்பை புல் வைத்து வழிபடலாம். இது பல தோஷங்களை நீக்கும். வைரஸ், பாக்டீரியா தொந்தரவுகளை போக்கும். இந்த சார்வரி ஆண்டில் இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

யாகம் வளர்க்கலாம்
வீட்டில் யாகங்கள் வளர்ப்பது நல்லது. சூரிய கிரகணம் நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷத்தன்மை காற்றின் மூலம் வைரஸ் வடிவத்தில் பரவி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது யாகம் செய்ய வேண்டும். அரசங்குச்சி எடுத்து வந்து நாயுறுவி வேர், இலைகள் எடுத்து வந்து இரும்பு தட்டில் போட்டு எரிய வைத்து வீடு முழுக்க புகை பரவ விடுங்க. கண் திருஷ்டிகள் நீங்கும். செல்வ வளம் பெருகும். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். புதன் செல்வம் செல்வாக்கு தரக்கூடியவர். இப்போது நீசமாக இருக்கிறார். அதே போல குருவும் வலிமை இழந்துதான் இருக்கிறார். பொருளாதார மந்தநிலை, மக்களிடமும் பணப்புழக்கம் குறைவாக இருக்கிறது. நாயுறுவி சமித்து சேர்த்து புகை போட்டு சாம்பிராணி புகை ஞாயிறு கிழமை போடலாம்.

குல தெய்வ வழிபாடு
குல தெய்வ வழிபாடு செய்யாதவர்கள், அம்மன் வழிபாடு செய்யாதவர்கள், பித்ரு வழிபாடு செய்யாதவர்களுக்கு ராகு கேது தோஷம் பீடிக்கும். குல தெய்வ வழிபாடு இந்த ஆண்டு கண்டிப்பாக செய்யுங்கள். முன்னோர்களின் ஆசியும் கிடைக்க அவர்களை அமாவாசை நாட்களில் நினைத்து வழிபடுங்கள்.
இதன் மூலம் ராகு கேது ஆதிக்கம் நீங்கி, சூரிய சந்திரர்கள் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்யும். சாப்பிட உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உணவு வாங்கிக் கொடுங்க. உங்க குல தெய்வ ஆசி கிடைக்கும், முன்னோர் ஆசி கிடைக்கும். இறைவனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
