Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கைதான் இது...!
பொதுவாக பர்ஸை வாங்கும்போது அதன் வண்ணத்தின் மீது நாம் அதிக கவனம் செலுத்ததில்லை. ஆனால் உண்மையில் நமது பர்ஸின் வண்ணத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
பணத்தை வைக்க வேண்டும் என்று நினைத்தால் நமது மனதில் முதலில் நினைவிற்கு வருவது பர்ஸ்தான். ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் பர்ஸ் உபயோகிப்பது இப்பொழுது அத்தியாவசிய பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது. நமது பணம் நமது கைகளில் இருப்பதை விட பர்ஸில் இருப்பதுதான் அதிகம். எனவே அதனை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

பொதுவாக பர்ஸை வாங்கும்போது அதன் வண்ணத்தின் மீது நாம் அதிக கவனம் செலுத்ததில்லை. ஆனால் உண்மையில் நமது பர்ஸின் வண்ணத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் பர்ஸின் வண்ணம் கூட நமது நிதி நிலையின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் உங்கள் பர்ஸின் நிறம் எப்படி உங்கள் நிதி நிலையை பாதிக்கும் என்று பார்க்கலாம்.

தங்க நிறம்
தங்க நிற பர்ஸ் வைத்திருப்பது சக்திவாய்ந்த ஆற்றலை பரவச்செய்யும். இது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதுடன், வலிமையையும் குறிக்கிறது. சூதாட்டத்தை விரும்புபவர்களும், விரைவில் பணம் சம்பாரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த நிற பணப்பையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. தங்க நிறத்தில் பர்ஸ் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, ஆனால் அந்த நிற பொருள் எதையாவது உங்கள் பர்ஸில் வைத்துக்கொள்ளலாம்.

பிங்க்
பெண்களுக்கு பிடித்த நிறமான இந்த வண்ணத்தில் பெண்கள் பர்ஸ் வைத்துக்கொள்வது அவர்களின் அதிர்ஷ்டத்தை இருமடங்காக்கும். பொதுவாக பிங்க் நிறம் பணம் மற்றும் வளர்ச்சியுடன் தொடர்புடையதாகும்.

மஞ்சள்
இந்த நிறம் அதிர்ஷ்டம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையதாகும். பளபளக்கும் மஞ்சள் நிறத்தில் பர்ஸ் வைத்துக்கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் மஞ்சள் நிறம் அதிகமிருக்கும் வேறு வண்ண பர்ஸை கூட வைத்துக்கொள்ளலாம்.

கருப்பு
அனைத்து நிறங்களையும் விட வலிமை வாய்ந்த நிறமாக கருதப்படும் கருப்பு நிறம் பணத்தை சேமிக்கும் ஆற்றலை அதிகம் கொண்டுள்ளது. பணப்பிரச்சினையால் தவிக்கும் எவரும் உடனடியாக கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பதை தொடங்குவது நல்லது. இது உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும். இது பணத்தை சேமிக்கும் தவிர அதிகரிக்காது, இதனை உபயோகிக்க தொடங்கும் முன் அதனை மறந்து விடாதீர்கள்.

சிவப்பு மற்றும் நீலம்
இந்த இரண்டு நிறங்களிடம் இருந்து விலகியே இருங்கள். இந்த நிறங்களில் பர்ஸ் உபயோகிப்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். உங்களிடம் இருக்கும் அனைத்து செல்வமும் விரைவில் கரைய வேண்டுமென்று விரும்புபவர்கள் இந்த நிற பர்ஸ்களை உபயோகிக்கலாம்.

சிவப்பு
சிவப்பு என்பது நெருப்பின் அறிகுறியாகும். இது உங்களிடம் இருக்கும் அனைத்தையும் எரித்து விடும், உங்களுடன் பிறந்த அதிர்ஷ்டத்தையும் சேர்த்துதான். இதனால்தான் எப்பொழுதும் சமயலறையில் பணத்தை வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்த இடம் முழுவதும் சிவப்பு நிறத்தால் சூழப்பட்டிருக்கும்.

நீலம்
இது சிவப்பு நிறத்திற்கு முற்றிலும் எதிர்மறையானது. இது நீரின் அடையாளமாக கருதப்டுகிறது. இது அனைத்தையும் மூழ்க வைக்கும்குணம் குணம் கொண்டதாகும். இது உங்களிடம் இருக்கும் அனைத்து செல்வத்தையும் இழக்க வைக்கும்.



Click it and Unblock the Notifications
