Just In
- 2 hrs ago
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- 6 hrs ago
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- 17 hrs ago
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- 18 hrs ago
வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்
Don't Miss
- Finance
ஜியோவுக்கே ஆப்பு வைத்த ஏர்டெல்.. கதறும் ஜியோ..கொண்டாட்டத்தில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்..!
- News
டெல்லி தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவு- பாஜக ரூ5 லட்சம் நிதி உதவி
- Movies
இதுதான் ரியல் வெறித்தனம்.. சர்வதேச விருது வென்ற ராட்சசன் பின்னணி இசை!
- Sports
கோலி 100 கேள்வி கேட்பார்.. நம்பிக்கை வந்துட்டா அவ்ளோ தான் - பிட்னெஸ் பயிற்சியாளர் சங்கர்பாசு!
- Automobiles
புதிய எம்ஜி ஹெக்டர் காரை கழுதையை கட்டி இழுத்த உரிமையாளர்... காரணம் தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்!
- Technology
8ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அட்டகாசமான விவோ U20.!
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புரட்டாசி மாதத்தில் பிள்ளை பிறந்தால் புரட்டி எடுக்குமா? - குணநலன்கள் எப்படி
புரட்டாசியில் பிறந்தால் புரட்டி எடுப்பார்கள் என்று பயப்படுவார்கள். இது தவறானது. புரட்டாசியில் பிறந்தவர்கள் புத்திசாலிகள். மழை மாதம் புரட்டாசி. பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் தாக்கும் என்பதால்தான் புரட்டாசிமாதம் குழந்தை பிறப்பதை பலரும் விரும்புவதில்லை. வித்தை அறிவு கணிதம் ஆகியவற்றிற்கு உரிய புதனின் வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசி. நிறைய விசயங்களை எளிதில் கற்றுக்கொள்வார்கள்.
தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் புரட்டாசி இந்த மாதத்தில் முக்கியமான விரதங்கள் உள்ளன. முன்னோர்களை வழிபடும் மகாளயபட்சம், மகாளய அமாவாசை விரதம் கடைபிடிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாள் மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். புத ஆதிபத்யம் நிறைந்த இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும். விரதங்கள், பண்டிகைகள் நிறைந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆன்மீக குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். கற்பூர புத்திக்கொண்டவர்கள் இடம் பொருள் நேரம் பார்த்து பேசுவார்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள்.
புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். 1823ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 21ஆம்தேதி மகனாகப் பிறந்தார்.திருமூலர் பிறந்தது புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில். 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சிதம்பரத்தில் சமாதியடைந்தார். வான்மீகர் பிறந்தது புரட்டாசி மாதம் அனுசம் நட்சத்திரத்தில். 700 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். எட்டுக்குடியில் சமாதியடைந்தார்.

நேர்மையானவர்கள்
புரட்டாசியில் பிறந்தவர்களின் குணநலன்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது அதே நேரத்தில் இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள். பிறர் மனது புண்படாத வகையில் நடந்து கொள்வார்கள் அதே நேரத்தில் சுயகவுரவம் ரொம்ப பார்ப்பார்கள். ஒருதடவை வாக்கு கொடுத்து விட்டால் எப்பாடு பட்டாவது காப்பாற்றுவார்கள். உற்றார் உறவினர்கள், சுற்றார்களுடன் அனுசரித்து அவர்களுடன் இணைந்து வாழ்வார்கள். வெளிப்படையாக பேசுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் சம்பாதிப்பார்கள்.
MOST READ: இப்படி ஒரு பாலியல் நோயா?... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்களே!

தலைமைபதவி தேடி வரும்
எதையும் தெளிவாக பேசி தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். நேர்மையானவர்கள். நேர்மையான அணுகுமுறை பலருக்கு ஒத்து வராது. இவர்களின் குணத்தால் எளிதில் பகையை சம்பாதிப்பார்கள் மனக்கசப்பும் ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், சூரியன், சனி பலமாக இருந்தால் ராணுவம், தீயணைப்பு போன்ற துறைகளில் தலைமை பதவிகளில் இருப்பார்கள். படிப்பறிவோடு பட்டறிவும் கை கொடுக்கும். தலைமை பதவிகள் தேடிவரும்.

அரச யோகம் தேடி வரும்
பூர்வீக சொத்துக்கள் எளிதில் கிடைக்கும். தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும். மனைவி வழியில் சொத்துக்கள் சேரும். சூரியன் சாதகமாக இருந்தால் அப்பா வழியில் சொத்துக்கள் சேரும், சந்திரன் சாதகமாக இருந்தால் அம்மாவழி சொத்துக்கள் சேரும். புத்திசாலித்தனம் மிக்கவர்கள் என்பதால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவார்கள். அவ்வளவு சீக்கிரம் கடனாளியாக மாட்டார்கள். வேறு வழியின்றி கடன் வாங்க நேரிட்டாலும் அதை எப்பாடு பட்டாவது அடைத்துவிடுவீர்கள்.

நோய்கள்
புரட்டாசியில் பிறந்தவர்களுக்கு எளிதில் நரம்பு பிரச்சினை தாக்கும். அதிகம் டென்சன் பேர்வலி இதனால் தலைவலி அதிகமாகும். சிலருக்கு பார்வை கோளாறுகளும் ஏற்படும். நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் வயிறு கோளாறும் ஜீரண கோளாறும் ஏற்படும். நேர்முக எதிரிகள் இருக்க வாய்ப்பில்லை. மறைமுக எதிர்ப்புகளை எளிதில் சமாளிப்பீர்கள்.

நண்பர்கள் அதிகம்
புத்திசாலித்தனம் கொண்ட இவர்கள் மூளையை உபயோகித்து ஜெயிப்பார்கள். கலைத்துறையில் சாதிப்பார்கள். கற்பனை சக்தி கொண்டவர்கள். சிறந்த எழுத்தாளர்கள், சினிமா துறையில் ஜெயிப்பார்கள். பத்திரிகைதுறையில் கால் பதித்து வெற்றி பெறுவார்கள். நகை, ஜவுளித்துறையில் கொடிகட்டிப்பறப்பார்கள். நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் தன்மை இருப்பதால் இவர்களைச் சுற்றி நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். இவரால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். இயற்கை விரும்பிகள். இயற்கையான இடங்கள் நீர்வீழ்ச்சிகள், மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல விரும்புவார்கள். சுவையாக சமைத்து சாப்பிடுவார்கள். நீங்களும் புரட்டாசியில பிறந்திருக்கீங்களா? உங்க கேரக்டர் இதோட ஒத்துப்போகுதா பாருங்க.