For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கிய நீதியின் படி உங்களின் உண்மையான நண்பனை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கலாம் தெரியுமா?

மனிதர்களின் நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உறவினர்களை விட நண்பர்களே முக்கியமானவர்கள் என்பது பலரின் நம்பிக்கையாகும்.

|

மனிதர்களின் நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உறவினர்களை விட நண்பர்களே முக்கியமானவர்கள் என்பது பலரின் நம்பிக்கையாகும். வாழ்க்கையில் நம் விருப்பப்படி நாமாக தேர்ந்தெடுக்கும் ஒரே உறவு நம்முடைய நண்பர்கள் மட்டுமே. ஆனால் எல்லா நண்பர்களும் உங்களுக்கு சிறந்த நண்பர்களாக இருக்க மாட்டார்கள். உங்களுக்கு ஒரு பெரிய நண்பர்கள் வட்டம் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு உண்மையான நண்பர்கள் இருப்பவர்கள் வெகுசிலர் மட்டுமே. சாணக்கியரின் கூற்றுப்படி, உண்மையான நண்பன் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற சொத்தாக இருப்பார்கள். நண்பர்கள் இல்லாத ஒருவரின் வாழ்க்கை பயனில்லாத வாழ்க்கைதான். அனைவருக்கும் வாழ்க்கையில் நண்பர்கள் தேவை, ஆனால் சரியான நண்பர் யார் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்து கொள்வது?

Chanakya Niti: How to Identify a True Friend in Tamil

சாணக்கியரின் கூற்றுப்படி,நண்பர்களைத் தேடுவதற்கு முன்பு அவர்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது எப்போதும் நல்லது. உண்மையான நண்பனை அடையாளம் கண்டுகொள்வதற்கான சில வழிகளை சாணக்கியர் கூறியுள்ளார். சாணக்கியர் ஒரு சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர். வாழ்க்கையை வெற்றிகரமாகவும், உன்னதமாகவும் மாற்ற பல கொள்கைகளை வழங்கியுள்ளார். ஒரு உண்மையான நண்பரை அடையாளம் காண உதவும் குணங்களை சாணக்கிய நீதி கூறியுள்ளது. சில சூழ்நிலைகளில் உங்களுடன் இருப்பவர்களே உங்கள் உண்மையான நண்பர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். உண்மையான நண்பரின் குணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவைப்படும் போது உதவியாக இருப்பவர்கள்

தேவைப்படும் போது உதவியாக இருப்பவர்கள்

தேவைப்படும் போது உதவி செய்பவனே நல்ல நண்பன் என்று சாணக்கியர் கூறியுள்ளார். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் தவறு நடந்தால், உங்களின் மோசமான நேரத்திலும் ஒரு நல்ல நண்பர் உங்களை ஆதரிக்க வேண்டும். ஆனால் நண்பனாகிவிட்ட எதிரியிடம் தற்செயலாகக் கூட உதவி கேட்கக் கூடாது என்றும் சாணக்கியர் கூறியுள்ளார். இது உங்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

ஆபத்தில் உதவி செய்பவர்கள்

ஆபத்தில் உதவி செய்பவர்கள்

ஆபததில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று சாணக்கியர் கூறியுள்ளார். உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், உங்களின் உண்மையான நண்பர்கள் உங்களுக்கு உடனடியாக உதவுவார்கள்.

பஞ்சத்தின் போது உதவுபவர்கள்

பஞ்சத்தின் போது உதவுபவர்கள்

வீட்டில் பஞ்சம் அல்லது உணவு பற்றாக்குறை ஏற்பட்டால் உங்களுக்கு உதவுபவர்கள் உண்மையில் உங்கள் நண்பர்கள் என்று சாணக்கிய நீதியில் எழுதப்பட்டுள்ளது. பஞ்ச காலத்தில் உதவி செய்பவனே உண்மையான நண்பன். பஞ்ச காலத்தில் நமக்கு உதவி செய்பவர் யாராவது இருந்தால் அவர் சிறந்த நண்பர் என்கிறார் சாணக்கியர்.

நெருக்கடிகளில் துணை நிற்பவர்கள்

நெருக்கடிகளில் துணை நிற்பவர்கள்

சண்டை போன்ற சூழ்நிலைகள் அல்லது வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்பட்டால் அவருக்கு துணை நிற்பவனே உண்மையான நண்பன் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு உண்மையான நண்பன் என்பவன் பிரச்சனையின் போது ஒருவருக்கு ஆதரவாக இருப்பவன்.

உடல்நல பிரச்சினையின் போது உடனிருப்பவர்கள்

உடல்நல பிரச்சினையின் போது உடனிருப்பவர்கள்

ஒருவருக்கு ஏதேனும் கடுமையான நோய் இருந்தால், அந்த நேரத்தில் உங்களுக்கு உதவுபவர்களை உங்கள் உண்மையான நண்பரகளாகக் கருதலாம் என்று சாணககியர் கூறுகிறார்.

வேலையில் உதவுபவர்கள்

வேலையில் உதவுபவர்கள்

உங்களின் எந்தவொரு முக்கிய பணியிலும் உங்களுக்கு ஆதரவளிப்பவர் உங்கள் உண்மையான நண்பர். மரணத்திற்குப் பிறகு ஒருவரை தகன மேடைக்கு அழைத்துச் செல்வது வரை ஒத்துழைப்பவனே உண்மையான நண்பன் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களுடன் நட்பு கொள்ளுங்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

யாருடன் நட்பு கொள்ளக்கூடாது?

யாருடன் நட்பு கொள்ளக்கூடாது?

ஒருவர் எப்போதும் தங்களுக்கு சமமானவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும். இல்லையெனில் அத்தகைய உறவுகள் விரைவில் முறிந்து விடும் என்று சாணக்கியர் கூறுகிறார். பணக்காரர்களுடன் நட்பு வைத்துக் கொள்பவர்கள் நிச்சயமாக அவர்களுக்குப் பின்னால் சில சுயநல ஆர்வங்கள் இருக்கும். அவர்கள் தங்கள் நண்பரின் பணத்தை சாதகமாக்க முயற்சி செய்யலாம். அத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க

வேண்டும்.

எதிரெதிர் குணமுடையவர்கள்

எதிரெதிர் குணமுடையவர்கள்

சாணக்கிய நீதியின்படி, எதிர் இயல்புடைய ஒருவருடன் நட்பு கொள்ளக் கூடாது. ஏனென்றால், பாம்பு, ஆடு, புலி ஆகியவை ஒன்றுக்கொன்று நட்பாக இருக்கவே முடியாது. மேலும் எந்த ஒரு நண்பரையும் கண்மூடித்தனமாக நம்பி தனிப்பட்ட ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்கிறார் சாணக்கியர். ஏனென்றால், உறவு மோசமடைந்தால், அவர்கள் உங்கள் ரகசியங்களை மற்றவர்களுக்குப் பகிரங்கப்படுத்தலாம். உங்கள் முகத்தைப் பார்த்து உங்களைப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: How to Identify a True Friend in Tamil

Find out the useful tips dictated by Chanakaya to identify a true friend.
Desktop Bottom Promotion