Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
புதாதித்ய யோகத்தால் செப்டம்பர் 17 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
செப்டம்பர் 17 ஆம் தேதி புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்கிறது. இதன் விளைவாக புதாத்திய யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஒரு சுப யோகம் என்பதால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கைகள் யோகங்களை உருவாக்குகின்றன. இந்நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் வக்ரமாகிறார். அக்டோபர் 02 ஆம் தேதி கன்னியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதற்கிடையில் 2022 செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசியில் இருந்து புதன் ஆளும் கன்னி ராசிக்கு செல்கிறார்.

இதனால் செப்டம்பர் 17 ஆம் தேதி புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை கன்னி ராசியில் நிகழ்கிறது. இதன் விளைவாக புதாத்திய யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஒரு சுப யோகம் என்பதால் பல ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். இப்போது 2022 செப்டம்பர் மாத புதாத்திய யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
புதாத்திய யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். எங்காவது முதலீடு செய்ய நினைத்தால், அதை இந்த 15 நாட்களுக்குள் செய்துவிடுங்கள். இதனால் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பொற்காலமாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்களின் வருமானம் உயர வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதாத்திய யோக காலம் அற்புதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். எந்த துறையில் பணிபுரிந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம்
புதாத்திய யோகமானது கடக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சிறந்தது. இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதாத்திய யோக காலம் சூப்பராக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். செல்வம் மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். பணத்தை முதலீடு செய்ய இது சிறந்த காலம். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
