For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்ஜெட் 2020: சுகாதரத் துறைக்கு 69,000 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு என்ன செய்யபோகிறது?

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு 56,045 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

|

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் முதல்முறையாக நிதியமைச்சராக பதிவி வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் தன்னுடைய இரண்டாவது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு இந்தியா கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்ததாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடப்பாண்டில் இந்தியா அவ்வீழ்ச்சியை இந்த பட்ஜெட் மூலம் சரிசெய்துவிடுமா? என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.

budget-2020-nirmala-sitharaman-s-sweeping-proposals-for-hea

பல்வேறு புதிய திட்டங்களுடன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்திருந்தார். நாடு எதிர்கொள்ளும் அனைத்து குறைகளையும் சவால்களையும் இந்த பட்ஜெட் தீர்க்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தனர். நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெடில், பல்வேறு திட்டங்கலையும், அதற்கான நிதி ஒதுக்கீடையும் அறிவித்திருந்தார் நிதியமைச்சர். இதில், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கிய நிதியை பற்றியும், திட்டங்களை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
69,000 கோடி

69,000 கோடி

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு 56,045 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வித்தியாசம் 12,955 கோடி ரூபாய் ஆகும்.

MOST READ:உடலுக்கு வேலையே கொடுக்காம இருக்கிங்களா? அது உங்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

தூய்மை இந்தியா திட்டம்

தூய்மை இந்தியா திட்டம்

தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை காணவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் காந்தியின் கனவை நனவாக்கும் திட்டம் "தூய்மை இந்தியா". இத்திட்டம் 2014ஆம் ஆண்டு மோடி தலமையிலான அரசு தொடங்கி வைத்தது. இத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கழிப்பறை திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தூய்மை இந்தியா திட்டத்துக்கு 12,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காசநோய்

காசநோய்

இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்குள் காசாநோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று தொடர்ந்து மோடியின் மத்திய அரசு தெரிவித்துவருகிறது. இந்நிலையில், இன்று பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமனும், 2015ஆம் ஆண்டிற்குள் காசாநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தனியாருடன் இணையும் மருத்துவக் கல்லூரிகள்

தனியாருடன் இணையும் மருத்துவக் கல்லூரிகள்

மருத்துவர்களின் பற்றக்குறையை போக்கும் வகையில், மாவட்டம் தோறும் உள்ள தனியார் மருத்துவமனைகளுடன் மருத்துவக் கல்லூரிகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பேராசிரியர்கள், செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் ஆண்டின் நிதி பட்ஜெட்டில் நாடு முழுவதும்ம் 82 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது மத்திய அரசு.

MOST READ:அதிகளவு புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்து ஏற்படும் தெரியுமா?

ஆயுஷ்மான் பாரத்

ஆயுஷ்மான் பாரத்

இந்தியாவில் உள்ள சுமார் 50 கோடி ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீடு திட்டத்தை மோடி தலைமையிலான அரசு 2018ஆம் ஆண்டு தொடங்கி வைத்தது. அதன்படி, இத்திட்டம் மூலம் 112 மாவட்டங்களில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ வசதி வழங்கப்படும். இதற்கு 12,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நீண்ட பட்ஜெட்

நீண்ட பட்ஜெட்

விவசாயத் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை, இரயில்வே துறை என எல்லா துறைகளுக்கும் தனிதனி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இதுவரை தாக்கல் செய்த பட்ஜெட் உரையிலே 2020-2021 இந்த உரைதான் மிக நீண்ட உரை என்று கூறப்படுகிறது. ஆனால், பட்ஜெட் தான் நீண்ட உரையே தவிர, அறிவிப்புகள் வெற்றுதான் என்று கூறியுள்ளனர் எதிர்கட்சியினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Budget 2020: Nirmala Sitharaman’s sweeping proposals for health department

We are talking about the Budget 2020 and Nirmala Sitharaman’s sweeping proposals for health department.
Story first published: Saturday, February 1, 2020, 17:53 [IST]
Desktop Bottom Promotion