Just In
- 18 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 19 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 1 day ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 1 day ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Movies
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ராசிக்காரங்க ஆபத்தான அதிபுத்திசாலியா இருப்பாங்களாம்... உஷாரா இருந்துக்கோங்க...!
இந்த உலகத்தில் முட்டாள்கள், புத்திசாலிகள், அதிபுத்திசாலிகள் என அனைத்து விதமான மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அனைவருக்குமே ஒரே அளவிலான மூளைதான் உள்ளது, ஆனால் அதனை ஒவ்வொருவரும் எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை பொறுத்துதான் ஒருவரின் மூளையின் செயல்திறன் நிர்ணயிக்கப்படுகிறது. வல்லவனுக்கு வல்லவன் உலகில் இருப்பார்கள் என்று கூற நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒருவரை விட ஒருவர் புத்திசாலியாக இருக்கிறார்கள்.
சிலர் பிறக்கும்போது அதிகளவு புத்திக்கூர்மையுடன் பிறப்பார்கள், சிலர் தங்களின் சொந்த முயற்சியின் மூலம் தங்களின் அறிவாற்றலை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமல்ல, கற்றுக்கொண்டதை சரியான சமயத்தில் உபயோகிப்பதே உண்மையான புத்திசாலித்தனம். நம்முடைய புத்திக்கூர்மையை நிர்ணயிப்பதில் நமது பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆபத்தான அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருந்தாலும் மேலும் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், கவனமும் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவர்கள் விழிப்புடன் இருப்பதுடன் கற்றுக்கொள்வதை பகுப்பாய்வு செய்தும் பார்ப்பார்கள். உங்களை வெல்லவோ அல்லது முறியடிக்கவோ அவர்கள் முடிவு செய்துவிட்டால் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்கூட்டியே செய்துவிடுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி இவர்கள் புத்திசாலி ராசிகளில் ஒருவராக அறியப்படுகிறார்கள். எனவே இவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். ஒருவரை வெல்ல நினைத்தால் இவர்கள் நிச்சயம் அதனை செய்தே தீருவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் நுண்ணறிவிற்கு புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் கவனிக்க தவறுவதை இவர்கள் சரியாக கவனிப்பார்கள். சூழ்நிலைகள் பதற்றமடையும்போதும் இவர்கள் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருப்பார்கள். எந்தவொரு விஷயத்தையும் தனிப்பட்ட முறையில் இவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், இலக்குகளை அடைவதில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். கும்ப ராசிக்காரர்கள் கணிக்க முடியாதவர்கள், எனவே அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கணிக்க இயலாது.

மகரம்
மகர ராசிக்காரர்களடம் பல சிறந்த குணங்கள் இருக்கும். ஞானம், பொறுமை மற்றும் கடினமாக உழைக்கும் திறன் என பல குணங்கள் இவர்களிடம் இருக்கும். அதனால்தான் அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதை மறந்துவிடுவது எளிது. ஒரு மகர ராசிக்காரரை நீங்கள் விரும்பினால் நீங்கள் பெரிய விளையாட்டை விளையாட வேண்டியிருக்கும், குறிப்பாக வேலையில் அவர்களை வெல்ல விரும்பினால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இவர்கள் உடனடியான வெற்றியை விட உறுதியான வெற்றியையே விரும்புவார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களின் புத்திக்கூர்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்களுடன் உரையாடினால் மட்டுமே முடியும். இவர்கள் நேர்மையானவர்களாகவும், எது சரி, எது தவறு என்று சரியாக கணிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் எப்பொழுதும் ஒரு நேர்மறையான நம்பிக்கை இருக்கும். அவர்களின் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது இவர்கள் தங்களின் உண்மையான பலத்தை வெளிப்படுத்த நேரிடும். நட்பான, வசீகரமான இவர்கள் புத்திசாலிகளாகவும் இருப்பது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். உங்களை மிஞ்ச அவர்கள் விரும்பினால் அதற்கு அதீத முயற்சி எடுக்க வேண்டுமென்ற அவசியமே இவர்களுக்கு இல்லை.

மிதுனம்
தனுசு ராசிக்காரர்களைப் போலவே மிதுன ராசிக்காரர்களும் சிறந்த தொடர்பாளராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். கூர்மையான செயல்திறன் கொண்ட இவர்கள் மற்றவர்களை மிஞ்சுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை. சரியான கேள்விகளை சரியான இடத்தில் கேட்கும் ஆற்றல் கொண்ட இவர்கள் தங்களின் கேள்விகளின் மூலமே எதிராளிகளை வாயடைத்து போக செய்துவிடுவார்கள். நீங்கள் இவர்களுடன் உரையாடல் நடத்தினால் சில நிமிடங்களிலேயே உங்களுக்குள் இருக்கும் சிறந்த குணத்தை கண்டறிந்து விடுவார்கள். இவர்களிடம் ரகசியங்களை ஒளித்து வைக்க முடியாது.
MOST READ: ஜல்லிக்கட்டில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா? ஜல்லிக்கட்டின் தெரியாத வரலாறு...!

ரிஷபம்
புத்திசாலி ரிஷப ராசிக்காரர்கள் ஒருபோதும் தங்களின் முயற்சியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நினைத்ததை அடையும் வரை எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். எந்தவொரு விஷயத்தையும் அவசரப்பட்டு இவர்கள் செய்யமாட்டார்கள். இவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அதற்கு பின்னால் பெரிய ஆய்வும், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் கணித்து வைத்திருப்பார்கள். உங்களை தயார்படுத்திக் கொள்ளாமல் ஒருபோதும் ரிஷப ராசிக்காரருடன் போட்டியில் இறங்க வேண்டாம்.