For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்...இவர் வாழ்க்கைமுறைய பாத்து ஹிட்லரே பரிசு கொடுத்தாராம்!

இந்தியாவில் ஆயிரக்கணக்கான மன்னர்கள் வாழ்ந்திருந்தாலும் ஒருசில மன்னர்கள் மட்டுமே வரலாற்றில் அழியாத இடம் பிடித்துள்ளனர்.

|

இந்தியாவில் ஆயிரக்கணக்கான மன்னர்கள் வாழ்ந்திருந்தாலும் ஒருசில மன்னர்கள் மட்டுமே வரலாற்றில் அழியாத இடம் பிடித்துள்ளனர். சில மன்னர்கள் தங்களின் வீரத்தாலும், தாங்கள் கொண்ட வெற்றிகள் மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் சில மன்னர்கள் தங்களின் கட்டிடக்கலை மூலம் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

Bizarre Facts About Maharaja Bhupinder Singh

சில மன்னர்கள் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சில விசித்திரமான செயல்களால் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். உதாரணத்திற்கு முகமது-பின்-துக்ளக் தன்னுடைய முட்டாள்த்தனமான செயல்பாடுகளுக்காக வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். அந்த வரிசையில் மகாராஜா பூபிந்தர் சிங் அவரின் பாலியல் செயல்பாடுகளால் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். அவரை பற்றிய சில விசித்திரமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாராஜா பூபிந்தர் சிங்

மகாராஜா பூபிந்தர் சிங்

அக்டோபர் 12, 1891, மகாராஜா பூபிந்தர் சிங்கின் பிறந்தநாளாகும். இவர் இந்தியாவின் மிகவும் வித்தியாசமான பாலியல் பழக்கங்கள் கொண்டவராக இருந்தார். அவரது தந்தை ராஜீந்தர் சிங் இறந்த பிறகு, பூபிந்தர் ஒன்பது வயதில் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார். மகாராஜா பூபிந்தர் சிங் இந்தியாவில் ஆழமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், இவர் ஆடம்பரத்தின் அடையாளமாக உள்ளார். இவரின் வாழ்க்கைமுறை அனைவரையும் பொறாமைப்படுத்தும் அளவிற்கு இருந்தது.

சாதனைகள்

சாதனைகள்

மகாராஜா பூபிந்தர் சிங் 1900 முதல் 1938 வரை பாட்டியாலா சுதேச அரசை ஆட்சி செய்தார். அவரது பல சாதனைகளில் சில முதலாம் உலகப் போரில் ஏகாதிபத்திய போர் கவுன்சிலில் இந்திய பிரதிநிதியாக இருந்தது, ரஞ்சி கோப்பைக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கியது, வட்டமேசை மாநாட்டின் போது சீக்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தியது ஆகும். யுனைடெட் கிங்டமில் இருந்து வாங்கிய விமானத்தை சொந்தமாக வைத்த முதல் இந்தியர் இவர்தான்.

விலையுயர்ந்த நகை

விலையுயர்ந்த நகை

1926 ஆம் ஆண்டில், பாட்டியாலா நெக்லெஸைப் பெறுவதற்காக விலைமதிப்பற்ற ரத்தினங்கள், நகைகள் மற்றும் உலகின் ஏழாவது பெரிய வைரம் நிறைந்த ஒரு பெட்டியை பாரிசியன் ஜூவல்லர் கார்டியர் எஸ்.ஏ.க்கு அனுப்பினார். அதுவரை 25 மில்லியனில் செய்யப்பட்ட உலகின் விலையுயர்ந்த நகையாக இது இருந்தது.

MOST READ: பண்டைய உலகில் செக்ஸ் என்பது எவ்வளவு கஷ்டமானதாக இருந்தது தெரியுமா? நல்லவேளை இதெல்லாம் இப்ப இல்ல...

ரோல்ஸ் ராய்ஸ் கார்

ரோல்ஸ் ராய்ஸ் கார்

இவரின் ஆடம்பரத்திற்கு ஒரு எல்லையே இல்லாமல் இருந்தது. உலகின் மிகவும் விலையுயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸில் இவர் ஒரு படையே வைத்திருந்தார். கிட்டதட்ட 27 கார் முதல் 44 கார்கள் வரை இருந்தது.

ஹிட்லருடன் நட்பு

ஹிட்லருடன் நட்பு

1922 ஆம் ஆண்டில், வேல்ஸ் இளவரசரின் ராயல் சுற்றுப்பயணத்திற்காக 1400 டின்னர் செட்களை இவர் உருவாக்கினார். அவை முழுவதும் வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்டதாக இருந்தது. அவர் ஹிட்லரின் அன்பான நண்பராகவும் இருந்தார். இவரின் வாழ்க்கை முறையைக் கண்டு வியந்த ஹிட்லர் அவருக்கு ஒரு அரிய மேபேக் காரை பரிசளித்தார்.

மனைவிகள்

மனைவிகள்

இவர் ஐந்து முறை திருமணம் செய்து கொண்டார் அதன்மூலம் 88 குழந்தைகள் பிறந்தனர். அதுமட்டுமின்றி அவரின் அந்தப்புரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் இருந்தனர். கோடைகாலங்களில் அவர் தனது நீச்சல் குளத்தில் நீந்தும்போது அவரை சுற்றி அவரின் ஆசைநாயகிகள் வேற்று மார்போடு அமர்திருக்க வேண்டும். சிலசமயம் அவர்களின் உடலில் விஸ்கியை ஊற்றி குடிக்கவும் செய்தார்.

MOST READ: இந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்களாம்... மத்தவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம்தா

காமப்'பசி'

காமப்'பசி'

இவரின் காமப்பசி அவரது உணவு பசியை விட அதிகமாக இருந்தது, இவர் ஒருநாளைக்கு 2 பவுண்ட் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரின் அந்தப்புரத்தில் 350 பெண்கள் இருந்தனர். அந்தபுரத்திலும் இருந்தவர்களை சேர்த்து இவருக்கு மொத்தம் 365 மனைவிகள் இருந்தனர். இவர் தனது ஆடைகளை வடிவமைக்கவும், தனது அழகை பராமரிக்கவும் இந்தியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த நிபுணர்களை வைத்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizarre Facts About Maharaja Bhupinder Singh

Check out some bizarre facts about Maharaja Bhupinder Singh.
Story first published: Saturday, July 11, 2020, 12:48 [IST]
Desktop Bottom Promotion