Just In
- 41 min ago
அதிர்ஷ்டக்காத்து இன்னைக்கு இந்த ரெண்டு ராசிக்காரங்க பக்கம்தான் ஜமாய்ங்க...! உங்க ராசிக்கு எப்படி?
- 13 hrs ago
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- 15 hrs ago
ஓரின சேர்க்கையாளருக்கு ஏற்பட்டுள்ள புதிய ஆரோக்கிய பிரச்சனை என்னவென்று தெரியுமா?
- 19 hrs ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
Don't Miss
- News
மார்கழி மாத ராசி பலன்கள் 2019 - தனுசு முதல் மீனம் வரை பலன்கள்
- Finance
இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!
- Automobiles
மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...
- Sports
வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி!
- Movies
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Technology
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Temples of Lord Ayyappan : தர்மசாஸ்தா ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றி தெரியுமா?
ஆறுமுகக்கடவுளான முருகனுக்கு எப்படி அறுபடைவீடுகள் புகழ்வாய்ந்தவையாக இருக்கின்றனவோ, அது போலவே ஐயப்பனுக்கும் ஆறு கோவில்கள் முக்கியமானவை ஆகும். இவை ஐயப்பனின் அறுபடை வீடுகளாக ஐயப்ப பக்தர்களால் பயபக்தியுடன் குறிப்பிடப்படுகின்றன. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக்கும் மேற்கண்ட 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் தான் புனித யாத்திரை சென்றதன் முழு பயனும் கிடைக்கும்.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ஆம் தேதி விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் கோவிலுக்கு சென்று மாலையணிந்து, பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்த உடனேயே, செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா? 41 நாட்கள் விரதம் முடிந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும்போது எந்த எந்த கோவிலுக்கு சென்று வரலாம் என்பது தான்.
சங்கடங்களை போக்கி செல்வ வளம் சேர்க்கும் சங்காபிஷேகம்!
பொதுவாக தமிழகத்தின் எந்த மூலையில் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சென்றாலும், சபரிமலையி வாவர் சுவாமி, ஐயப்பன் மற்றும் அப்படியே மாளிகைப்புரத்து அம்மன், என தரிசித்து விட்டு, அப்படியே கீழே இறங்கி வந்து தமிழ்நாட்டில் குற்றாலம், திருச்செந்தூர், மீனாட்சியம்மன் கோவில், பழமுதிர்ச்சோலை, பழனி என குறைந்தது நான்கைந்து நாட்களுக்கு ஒரு ரவுண்டு அதன் பின்பே ஊருக்கு திரும்பி செல்வார்கள்.

ஐயப்பனின் அறுபடை வீடுகள்
சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றிலும் ஏகப்பட்ட கோவில்களும், ஐயப்பன் கோவில்களும் அமைந்துள்ளன. இவற்றை பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை. அந்த கோவில்களுக்கும் சென்று வந்தால் தான் சபரிமலை ஐயப்பனை தரிசித்ததற்கான முழுமையான பலன் ஐயப்ப பக்தர்களுக்கு கிடைக்கும். சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள ஐயப்பன் கோவில்களை பார்ப்பதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். ஆகவே அதற்கேற்பவே ஐயப்ப பக்தர்கள் தங்களுடைய பயண திட்டத்தை அமைத்துக்கொள்வது வெகு சிறப்பாகும். சபரிமலை மற்றும் அதனை சுற்றி ஆறு ஐயப்பன் கோவில்கள் உள்ளன.

சபரிமலை யாத்திரை
ஆறுமுகக் கடவுளான முருகனுக்கு எப்படி அறுபடைவீடுகள் புகழ்வாய்ந்தவையாக இருக்கின்றனவோ, அது போலவே ஐயப்பனுக்கும் ஆறு கோவில்கள் முக்கியமானவை ஆகும். இவை ஐயப்பனின் அறுபடை வீடுகளாக ஐயப்ப பக்தர்களால் பயபக்தியுடன் குறிப்பிடப்படுகின்றன. ஐயப்பனின் அறுபடை வீடுகளாக ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம் மற்றும் சபரிமலை என ஆறு கோவில்கள் முக்கியமானவையாகும்.

ஆரியங்காவு
ஆரியங்காவு மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றால நீர்வீழ்ச்சிக்கு வெகு அருகாமையில் உள்ளது. குற்றாலத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் பாலருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், மஹாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் உருவாக்கிய ஐந்து ஆலயங்களில் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலும் ஒன்று.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் முதலில் தரிசிக்க வேண்டிய கோவில் இதுவாகும். ஆனால் பெரும்பாலானவர்கள், சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு கடைசியில் ஊருக்கு வரும் வழியில் தரிசனம் செய்துவிட்டு பின்பு குற்றாலத்தில் குளித்துவிட்டு, அதற்கு பிறகு ஊருக்கு திரும்புகின்றனர். ஆனால் அது தவறான அணுகுமுறையாகும்.
மற்ற ஐயப்பன் கோவில்களில் ஐயப்பன் பிரம்மச்சாரியாகவே காட்சியளிப்பதுண்டு. ஆனால், ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சவுராஷ்ட்ர குலதேவியான புஷ்கலா தேவியுடன் அரச கோலத்தில் காட்சியளிக்கின்றார்.

அச்சன்கோவில்
ஐயப்ப பக்தர்களிடம் சபரிமலைக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். ஆரியங்காவுக்கு அருகாமையில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலும் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன் அரசராக வீற்றிருக்கின்றார். மண்டல மகோற்சவ விழா இக்கோவில் முக்கிய விழாவாகும்.
இக்கோவிலில் உள்ள ஐயப்பன் விக்ரகம் மிகப்பழமையான விக்ரகமாகும். ஐயப்பன் போருக்கு பயன்படுத்திய வாள் இங்கு பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஐயப்பன் கோவில்களிலேயே 10 நாட்கள் திருவிழா நடப்பது சபரிமலை மற்றும் அச்சன்கோவில் என இரண்டு இடங்களில் மட்டுமே. இந்த கோவிலுக்கு மற்றொரு விஷேச சக்தியுண்டு. அதாவது விஷப்பூச்சிகள் தீண்டினால், அது நள்ளிரவு
நேரமாக இருந்தாலும் சரி, இக்கோவிலுக்கு சென்று மணியடித்தால் உடனடியாக நடை திறக்கப்பட்டு, இக்கோவிலின் தந்திரி, ஐயப்பன் விக்ரகத்தின் மீது பூசப்பட்டுள்ள சந்தனத்தையும் மந்திரித்த தீர்த்தத்தையும் தருவார். அவை தான் விஷக்கடிக்கு மருந்தாகும். உடலில் இருந்து விஷம் முற்றிலும் இறங்கி உடல் பூரணமாக குணமடைந்துவிடுகிறது.

குளத்துப்புழா
ஒரு மனிதனின் வாழ்க்கையை ஐந்து பருவங்களாக பிரித்து சாஸ்திரங்கள் வகைப்படுத்தியுள்ளன. பிறந்தது முதல் பதினெட்டு வயதுவரை உள்ள பருவம் பால்ய பருவம் என அழைக்கப்படுகிறது. இந்த பால்ய பருவத்தை விவரிக்கும் வகையிலேயே குளத்துப்புழா பாலகன் கோவில் அமைந்துள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இக்கோவிலின் நுழைவு வாசல் சிறு பாலகர்கள் நுழையும் வகையில் சிறியதாகவே அமைக்கப்பட்டுள்ளது, இக்கோவில் தமிழக எல்லையான செங்கோட்டையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

எருமேலி
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் தவிர்க்கவே முடியாக ஒரு இடம் எதுவென்றால் அது எருமேலி தான். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து வேடர்களைப் போல் வேஷமிட்டு பேட்டை துள்ளும் இடமாக உள்ளது. இங்கு தான் ஐயப்பன் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் கையில் வில் மற்றும் அம்புகளை தாங்கியவாறு காட்சியளிக்கிறார். அதன் காரணமாகவே சபரி மலைக்கு வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் கண்டிப்பாக இங்கு வந்து வேஷமிட்டு ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அதோடு கொள்ளைக்காரனாக இருந்த வாவர் சுவாமியை தடுத்தாட்கொண்டு தன்னுடைய நண்பராக மாற்றிய இடம் எருமேலி. ஐயப்பன் எருமையாக இருந்த மகிஷியை வதம் செய்து கொன்ற இடமும் இதுதான். ஆரம்பத்தில் எருமகொல்லி என்று இருந்ததாகவும், நாளடைவில் அதுவே மருவி பின்பு எருமேலி என்று பெயர் மாறியதாக நம்பப்படுகிறது.

பந்தளம்
காட்டில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட ஐயப்பன் மன்னரான ராஜசேகரனால் 12 வயது வரையிலும பந்தளம் அரண்மனையில் தான் வளர்க்கப்பட்டார். பந்தளம் அரண்மனை, சபரிமலையில் இருந்து சுமார் 88 கி.மீ தொலைவிலும், திருவனந்தபுரத்தையும் கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது. சபரிமலை செல்லும் பெரும்பாலான பக்தர்கள் பந்தளத்தை தவிர்த்துவிட்டு, வேறு வழியில் சபரிமலைக்கு சென்று வருகின்றனர்.
ஐயப்பன் மணிகண்டனாக வளர்ந்த அரண்மனை, அவர் படிப்பதற்காக பயன்படுத்திய ஓலைச்சுவடிகள் இன்றும் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஐயப்பன் குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட குளம் ஒன்றும் உள்ளது. அந்த குளத்து நீர் எப்போதும் வெதுவெதுப்பாக இருப்பது தனிச்சிறப்பாகும்.
இங்கு ஐய்யப்பனுக்கு கோயில் உள்ளது. இக்கோவில் மன்னரால் கட்டப்பட்டதாகும் சபரிமலை ஐயப்பனுக்கு மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசனத்திற்கு கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள், பந்தளத்தில் உள்ள இந்த கோவிலில் தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இங்கிருந்து ஆபரணங்களை சபரிமலைக்கு கொண்டு செல்லும்போது, ஆபரண பெட்டியை பாதுகாக்க வானில் கருடன் பின் தொடர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.

சபரிமலை
சபரிமலை என்ற பெயரைக் கேட்ட உடனேயே சென்று பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் கோவில் என்பது அனைவரும் அறிந்ததே. தர்ம சாஸ்தாவாக விளங்கும் ஐயப்பன் தன்னை நாடிவரும் அனைவருக்கும் யோக சின்முத்திரை தாங்கி, அனைவரும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். பரசுராமர் கட்டிய ஐந்து கோவில்களில் முதன்மையான கோவில் இதுவாகும்.
தர்மசாஸ்தாவாக விளங்கும் ஐயப்பன் துறவறம் மேற்கொள்ள, வில்லெடுத்து அம்பெய்தினார். அந்த அம்பு வந்து விழுந்த இடமே சபரிமலையாகும். அந்த இடத்தில் தான் 18 படிகளுடன் கோவில் உருவாக்கப்பட்டு, கிழக்கு நோக்கி ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகிலேயே மாளிகைப்புரத்து அம்மனுக்கும் தனிக் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் ஆண்டுதோறும் மகர ஜோதி தினத்தன்று ஐயப்பன் ஜோதி வடிவாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக்கும் மேற்கண்ட 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் தான் புனித யாத்திரை சென்றதன் முழு பயனும் கிடைக்கும்.